முன்னாள் பிரதமர் துறையில் பணி புரிந்த இரவீந்தரன் தேவகுணம் தான் இப்படி ஒரு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டிருக்கிறார்!
ஆமாம்! இந்தியர்களின் முன்னேற்றத்திற்காக, மேம்பாட்டிற்காக ஏகப்பட்ட மானியத்தை வழங்கியும், கோடிக்கணக்கில் பணத்தை ஒதுக்கியும் அந்தக் கோடியிலிருந்து இந்திய சமுதாயத்திற்குப் போனதோ ஐந்து விழுக்காடு தான் என்கிற உண்மையைப் போட்டு உடைத்திருக்கிறார் தேவகுணம்!
அடாடா! இந்தியர்களின் தாய்க்கட்சியான ம.இ.கா. விற்கு இந்தியர்களின் மேல் என்ன பாசம்! இந்தியர்கள் முன்னேறவே கூடாது என்பதில் என்ன அக்கறை! ஒரு திருடன் ஒன்பது திருடர்களை உருவாக்கினான் என்பதை அறியும் போது ..... ..அவர்களை என்ன சொல்லுவது? இந்த ஒன்பது திருடர்களும் இந்திய சமுதாயத்தையே கலங்கடித்து விட்டார்களே!
கோடிக்கணக்கான மானியங்கள் எங்கே போனது என்று சமுதாயம் கேட்கும் போது ஒருவனும் வாய் திறக்கவில்லையே! என்ன ரகசியம்! என்ன கட்டுப்பாடு! கோடிக்கணக்கில் சமுதாயப் பணத்தைப் பங்கு போட்டுக் கொண்டு ஒன்றுமே தெரியாத அப்பாவி போல ஊர்வலம் வருகிறானே! அடாடா! என்ன நடிப்பு!
நமக்கு இதைப் பற்றியெல்லாம் அக்கறை இல்லை. தப்பு செய்தவன் உப்பைத் தின்று தான் ஆக வேண்டும். அவன் தண்டனைப் பெற்றுத் தான் ஆக வேண்டும். அவனைப் பார்த்து உலகம் சிரிக்கத் தான் வேண்டும். மக்கள் காரித்துப்பத் தான் வேண்டும்.
பார்ப்போம்! எத்தனை பேர் நாட்டைவிட்டு ஓடுகிறார்கள் என்று! பார்ப்போம், எத்தனை பேர் IJN - ல் படுக்கை விரிப்பார்கள் என்று!
சமுதாயத்தின் மதிப்பை ஐந்து விழுக்காடாக நிர்ணயித்த இந்த சமுதாயத் துரோகிகள் தொண்ணூற்றூ ஐந்து விழுக்காடு அவமானம் அடைய வேண்டும், என்பதே நமது எதிர்பார்ப்பு!

No comments:
Post a Comment