Friday, 13 July 2018
Unified Examination Certificate (UEC)
UEC என்பது என்ன? சீன உயர்நிலைப் பள்ளிகளில் பயின்று யூ.இ.சி. சான்றிதழ் பெறும் மாணவர்கள் மலேசிய பொதுப் பல்கலைக்கழகங்களில் சேருவதற்குப் போதுமான தகுதிகளைப் பெற்றிருக்கவிில்லை என்பது நமது கல்விக் கொள்கை. இருந்தாலும் நாட்டிலுள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் இன்னும் வெளி நாடுகளிலுள்ள சீனப் பல்கலைக்கழகங்கள் அனத்தும் இந்தச் சான்றிதழ்களை பல்கலைக்கழகங்களில் மேற்கொண்டு பயில போதுமான தகுதியாக ஏற்றுக் கொள்ளுகின்றன.
இந்தச் சான்றிதழை நமது பல்கலைக்கழகங்கள் போதுமான தகுதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதாக சீனக் கல்வி அமைப்பான டோங் சோங் (DONG ZONG) நாற்பத்தி மூன்று (43) ஆண்டுகளாக அரசாங்கத்தோடு போராடிக் கொண்டு வருகின்றது. ஆனாலும் அரசாங்கம் அவர்களுக்குச் செவி சாய்க்கவில்லை.
ஆனாலும் தேர்தல் செய்கின்ற மாயாஜாலங்கள் எத்தனை எத்தனையோ! பாரிசான் அரசாங்கம், கடந்த 14-வது பொதுத் தேர்தலில் போது தனது கொள்கையை மாற்றிக் கொண்டது. அவர்களின் தேர்தல் வாக்குறுதியாக யூ.இ.சி. யை ஏற்றுக் கொள்ளுகிறோம். ஆனால் SPM தேர்வில் தேசிய மொழியிலும், சரித்திரப் பாடத்திலும் கிரெடிட் பெற்றிருக்க வேண்டும் என்று தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் ஏற்றுக் கொண்டது!
அதே சமயத்தில் எதிர்க்கட்சியாக இருந்த பக்காத்தான் கூட்டணியும் தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் யூ.இ.சி யை எந்த நிபந்தனையும் இன்றி ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருந்தது. இவர்களைப் பார்த்த பின்னரே தேசிய முன்னணி தனது கருத்தை மாற்றிக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது பக்காத்தான் கூட்டணி அரசாங்கத்தை அமைத்திருப்பதால் வேலைகள் எல்லாம் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன. அவர்களுக்குத் துணைக் கல்வி அமைச்சராக ஒரு சீனப் பெண்மணி பதவியில் இருக்கிறார். உடனடியாக, இந்த ஆண்டு கடைசிக்குள், இதனைச் சட்டப்படியாகக் கொண்டு வர அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார். அந்த வேகம் அவர்களிடம் உண்டு.
நம்மிடம் அந்த வேகம் இருக்கிறதா என்று இன்னும் தெரியவில்லை! இருக்கும் என நம்புவோம்!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment