அம்னோ பக்கம் இருந்து இழுத்து வரப்படும் அம்னோ எம்பி க்களை நாம் எப்படி வரவேற்கவில்லையோ அதே போல பெர்சே வும் ஆதரவு கரம் நீட்டவில்லை என்பது மகிழ்ச்சியான செய்தி!
கடந்த தேர்தலின் பாரிசான் கூட்டணி தோற்கடிப்பட்டதற்கான காரணம் என்ன? நாம் அறிந்தது தான். ஊழல், லஞ்சம் பெருக்கெடுத்து ஓடின. விலைவாசிகள் ஏற்றம் குறைவதாக இல்லை. பொய்களைச் சொல்லியே அரசாங்கம் செயல்பட்டுக் கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் மலாய் அரசியவாதிகளும் சரி, இந்திய அரசியல்வாதிகளும் சரி மகாராஜா வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தனர்! மக்களைப் பற்றி நினைக்க அவர்களுக்கு நேரமில்லி! இந்த சூழலில் தான் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனார்.
அப்படி ஒரு ராஜ வாழ்க்கை வாழ்ந்தவர்களை இப்போது அவர்கள் எதிர்பார்த்த அரச வாழ்க்கை அஸ்தமானதும் அவர்களைப் பக்காத்தான், பெர்சாத்துவில் அழைக்க நினைப்பதும், இணைய வைப்பதும் சரியல்ல என்பதுதான் அனைத்து மலேசியர்களும் எண்ணுகின்றனர். அது ஒன்றும் தவறானது அல்ல. அவர்கள் துரத்தி அடிக்கப்பட வேண்டியவர்களே தவிர வாழ்த்தி வர வேற்கப்பட வேண்டியவர்கள் அல்ல!
ஆனாலும் இப்படி ஒரு சூழல் அமைவதற்கு முக்கிய காரணியாக இருப்பவர் டாக்டர் மகாதிர் தான் என்பதே பலரின் கருத்து. டாக்டர் மகாதிரின் கருத்து என்பது வேறு. அவர் அம்னோவை அடியோடு அழித்தொழிக்க வேண்டும் என்று விரும்புகிறார். பக்காத்தானின் ஆட்சி காலத்தில் மக்கள் பயன் பெறுபவர்களானால் அடுத்த தேர்தலில் அம்னோ முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விடும்! அதுவே நேர்மையான வழி. அதனை விடுத்து அவர்களை வரவேற்பதும் , வாழ்த்துவதும் சரியான தீர்வாகாது!
இதிலும் டாக்டர் மகாதீருக்கு உள் நோக்கம் ஏதேனும் உள்ளதோ என்பதும் நமக்குத் தெரியவில்லை. அவர் எல்லாக் காலங்களிலும் மலாய் மேலாதிக்கத்தை விரும்பவர். தனது கட்சி பெர்சாத்துவில், தவறு செய்யும் அம்னோ எம்பி க்களின் மூலம், பெர்சாத்துவில் மலாய் ஆதிக்கத்தைக் கொண்டு வந்து, அதை வைத்து அடுத்த பொதுத் தேர்தலில் பிரச்சனைகளை உருவாக்குவாரோ என்பதையும் யோசிக்க வேண்டி உள்ளது!
நாம் சொல்லுவது: அந்த அம்னோ எம்பி க்கள் தொடர்ந்து அவர்களின் கட்சியிலேயே இருக்கட்டும். அவர்களின் கட்சியினர் தான் அவர்களைத் தெர்ந்தெடுத்தனர். அதனால் அவர்களின் சேவை அவர்களைத் தெர்ந்தெடுத்தார்களே அவர்களுக்கே இருக்கட்டும்.
பெர்சே சொல்லுவதில் தவறு இல்லை!
No comments:
Post a Comment