நாளை (6.11.2018) உலகெங்கிளும் உள்ள இந்து பெருமக்கள் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். ஒரு சில நாடுகளில் அமைதியும், பல நாடுகளில் அமைதியின்மையும் நிலவுகின்ற இன்றைய சூழலில் தீபாவளி கொண்டாடப்படுகிறது.
நமது மலேசிய நாட்டைப் பொறுத்தவரை நமக்கு அமைதி என்பது எப்போதும் உண்டு. ஆனால் இந்தியர்களின் வாழ்க்கை முறையில் அமைதி என்பது எப்போதுமே இல்லை! ஆனால் இது கடந்த கால பாரிசான் கட்சியின் ஆட்சியில்.
கடந்த கால பாரிசான் ஆட்சியில் பல துன்பங்கள், பல சோதனைகள் ஆனால் இத்தனைக்கும் நமது இனத்தைச் சேர்ந்த நமது தலைவர்களே காரணம். வேறு யாரும் நம்மை ஏமாற்றவில்லை. நம் இனத்தவனே நம்மை ஏமாற்றினான்!
இப்போது நாம் அதனை மறப்போம். கடந்த பதினான்காவது பொதுத் தேர்தலில் நாம் அந்த நரகாசுரர்களை ஒழித்துக் கட்டி விட்டோம்! 61-ஆண்டுகால ஆட்சியை ஒழித்துக் கட்டுவதற்கு தேர்தலில் நம்முடைய பங்களிப்பு அதிகம்! ஆமாம் இந்தியர்களின் 85 விழுக்காடு வாக்குகள் ஆட்சி மாற்றத்திற்கான காரணம் என்பது புதிய செய்தி அல்ல. உறுதிபடுத்தப்பட்ட செய்தி.
இனி நாம் நல்லதை எதிர்பார்ப்போம். அரசாங்கத்திற்கு அவகாசம் கொடுப்போம். உடனடி மாற்றங்களைக் கொண்டு வருவது என்பது எளிதல்ல.
ஆனாலும் இந்தத் தீபாவளி திருநாளில் நம்முள் சில மாற்றங்களைக் கொண்டு வருவோம். தீபாவளி என்றால் குடிகார தீபாவளி என்கிற அடையாளத்தை மாற்றுவோம். இந்தியர்கள் என்றால் குடிகாரர்கள் என்கிற தப்பான எண்ணத்தை தகர்த்தெறிவோம். காலங்காலமாக குடிகரார்கள் என்னும் அவப்பேயரை தாங்கி வந்திருக்கிறோம்.
உண்மையில் நம் நாட்டில் குடிகாரர்கள் என்றால் யாரைக் குறிக்கும்? அந்த வார்த்தை நம்மைத் தான் குறிக்கும். ஆனால் பெரிய குடிகாரர்கள் என்றால் அது சீனர்கள் தான். இந்தியர்கள் அல்ல! அதிகம் குடிக்கும் அவர்களை யாரும் குடிகாரர்கள் என்று சொல்லுவதில்லை! நாம் தான் குறிப்பிடப்படுகிறோம்! காரணம் நாம் தான் குடிகாரர்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறோம்! குடித்துவிட்டு எங்கேயாவது வீழ்ந்து கிடக்கிறோம். வம்பு சண்டைகளை வளர்க்கிறோம்! அடிதடியில் இறங்குகிறோம்!
அதனால் தான் நாம் குடிகாரர்கள் என்னும் இழிப்பெயரோடு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!
இந்தத் தீபாவளி திருநாளன்று உறுதிமொழி எடுப்போம். குடியை ஒழிப்போம். குடி கெடுக்கும் குடியை கொன்றொழிப்போம்.
தீபாவளி வாழ்த்துகள்!
No comments:
Post a Comment