Wednesday, 11 May 2016
தமிழக வாக்காளர்களே!
தமிழக வாக்காளர்களே! தேர்தல் நெருங்கிவிட்டது. இன்னும் நான்கு தினங்களே உள்ளன.
எல்லாக் கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளை வாரி வாரி வழங்கிவிட்டன. நீங்களும் அவர்கள் வாரி வாரி வழங்கிய வாக்குறுதிகளைக் கேட்டு திக்குமுக்காடிப் போயிருப்பீர்கள்!
அதிலும் குறிப்பாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் எல்லா வாக்குறுதிகளையும் கொடுத்து முடித்திருப்பார்கள்!
அவர்களுக்கு எந்தப் பிரச்சனையுமில்லை! கடந்த ஐம்பது ஆண்டுகளாக என்ன சொல்லி வருகிறார்களோ அதையே மீண்டும் மீண்டும் சொல்லி உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
இலஞ்ச ஊழலை ஒழிப்போம் என்றால் இத்தனை ஆண்டுகள் இலஞ்சத்தை தானே தேடி ஓடி அலையாய் அலைந்து கொண்டிருந்தீர்கள்! இப்போது மட்டும் எப்படி ஒழிப்பீர்கள்? இலஞ்சத்தை வாங்குவதே நீங்கள்! எப்படி ஒழிப்பீர்கள்?
மதுவை ஒழிப்போம் என்றால் ஏன் இத்தனை ஆண்டுகள் மதுவை வாழவைத்துக் கொண்டிருந்தீர்கள்? தமிழனை அழிக்க வேண்டும் என்பதற்காகத் தானே? மதுவை ஒழித்துவிட்டால் அப்புறம் தமிழனை எப்படி அழிப்பிர்கள்? தமிழனை அழிப்பது தானே உங்கள் இரு கட்சிகளின் தலையாய கொள்கை?
இது தான் கடந்த ஐம்பது ஆண்டுகள் நீங்கள் செய்த சாதனை: தாய் மொழி தமிழைத் அழித்தீர்கள். அவன் படிக்க புதிய பள்ளிகளைக் கட்டிக் கொடுக்கவில்லை. விவசாயிகளைச் சாகடித்தீர்கள். மீனவனை நாசப்படுத்தீனீர்கள். தமிழன் கலாச்சாரத்தை வேரறுத்தீர்கள். இலவசம் என்னும் பெயரில் தமிழனை பிச்சைக்காரனாக்கினீர்கள்.
தமிழன் தனது சொந்த மண்ணிலேயே அகதியாக வாழ்கிற சூழலை உருவாக்கியவை இந்த இரண்டு திராவிடக் கட்சிகள் தாம்! இனி மேலும் இவர்களை ஆதரிப்பது என்பது நம்மை நாமே தற்கொலைச் செய்வதற்குச் சமம். இனியும் வேண்டாம் இந்த விபரீதம்!
தமிழகத்திற்கு வலிமையான ஓர் அரசியல் கட்சி தேவை. தமிழக மக்கள் தாங்கள் இழந்த அனைத்தையும் மீண்டும் பெற ஓர் உயிருள்ள கட்சி தேவை. அந்த உயிர் - அந்த வீரியம் - நாம் தமிழர் கட்சியிடம் உள்ளது. அதன் ஒருங்கிணப்பாளர் சீமானிடன் உள்ளது.
தமிழகத்தின் வலிமைமிக்க ஆட்சி உலகத்தமிழர்களையும் தலை நிமிர வைக்கும். புதிய உத்வேகத்தைக் கொடுக்கும்.ஒரு வீரமிக்க பரம்பரை - திட்டம் போட்டு உருக்குலைக்கப்பட்ட - ஒரு மானமிக்க தமிழினம் மீண்டும் தலை நிமிர நல்லதொரு அரசியல் தலைமை தமிழகத்திற்குத் தேவை.
அந்தத் தலைமைத்துவத்திற்கு தகுதியானவர் நாம் தமிழர் கட்சி, சீமான். தமிழக வாக்காளர்களே! அக்காள்மார்களே, தங்கைமார்களே! அண்ணன்மார்களே, தம்பிமார்களே, ஐயாமார்களே, அம்மாமார்களே! உங்கள் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கே! உறுதியாக இருங்கள்!
நாம் வெல்வோம்! நாம் தமிழர் வெல்வோம்!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment