Friday, 22 April 2016
கேள்வி - பதில் (8)
கேள்வி
தமிழகத் தேர்தலில் மது ஒழிப்பு தலையாய பிரச்சனையாகப் பரப்புரையாக்கப் படுகின்றது.. ஆனாலும் மதுவை படி படியாகக் குறைப்போம் என்கின்றனர் ஆளுங்கட்சியினர். ஒழிப்போம் என்கின்றனர் எதிர்கட்சியினர். என்ன தான் நடக்கும்?
பதில்
இரண்டுமே நடக்காது! காரணம் இந்தச் சாரய விற்பனை என்பது யாருடைய அதிகாரத்திலும் இல்லை. திராவிடக் கட்சிகளின் அதிகாரத்தில் உள்ளவை. இந்த வியாபாரத்தில் ஜெயலலிதா - கருணாநிதி மனம் வைத்தாலின்றி எதுவும் நடக்காது.
அவர்கள் மனம் வைக்க மாட்டார்கள். காரணம் இந்த வியாபாரத்தில் கோடிக்கணக்கில் அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். கோடிக்கணக்கில் பணம் கொட்டும் இந்தச் சாராயத் தொழிலை விட்டுவிட அவர்கள் ஒன்றும் தமிழர்களைப் போல் ஏமாளிகள் அல்ல.
தமிழனைக் குடிக்க வைத்து பணம் சம்பாதிக்கும் இவர்கள் தான் தமிழ் நாட்டு முதலை அமைச்சர்கள்!
தமிழனை குடிக்க வைத்து, ஆட்டம் போட வைத்து, அவனை கிறங்கடித்து அவன் பணத்தில் வாழ்க்கை நடத்தும் இவர்கள் தான் தமிழ் நாட்டை உலத் தரத்துக்குக் கொண்டு செல்லப் போகிறார்களாம்!
என்னக் கொடுமை சார் இது! முதலமைச்சரே சாராயம் விற்பது என்பது வேறு எந்த மாநிலங்களிலும் இல்லை!
Labels:
கல்கண்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment