Sunday, 10 April 2016
கேள்வி-பதில் (1)
கேள்வி
தமிழ் நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருக்கையில் புதிதாக "நாம் தமிழர் கட்சி" முளைத்திருக்கிறதே! ஏன்? நமது சீமானுக்கும் முதல்வர் ஆசை வந்து விட்டதோ?
பதில்
முதல்வர் ஆசை வர வேண்டும். ஒரு தமிழனுக்கு முதல்வர் ஆசை வர வேண்டும். வரா விட்டால் அவன் தமிழனில்லை. இது நாள் வரை அப்படி ஒரு ஆசை எந்த ஒரு தமிழனுக்கும் வரவில்லை. இனி மேலாவது அந்த ஆசை வர வேண்டும். பெருந்தலைவர் காமாராசருக்குப் பிறகு எந்த ஒரு தமிழனும் ஆட்சிக்கு வரவில்லை.
திராவிடக்கட்சிகள் எந்த ஒரு தமிழனையும் ஆட்சிக்கு வர விடவில்லை என்பது தான் உண்மை! கலைஞரை விட, ஜெயலலிதாவை விட நிரம்ப கற்றவர்கள், படித்தவர்கள் அவரவர் கட்சிகளில் இருந்தார்கள்; இருக்கிறார்கள். ஆனால் அவர்களை அவர்கள் வளர விடவில்லை. அவர்களைக் காலில் விழ வைத்து வேடிக்கைப் பொருளாக ஆக்கினார்கள்! மற்ற இனத்தவர்கள் நம்மைப் பார்த்து சிரிக்கும் நிலைக்குத் தமிழர்களைத் தள்ளினார்கள்.
திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்த் தலைவர்களும் வளரவில்லை; தமிழும் வளரவில்லை; தமிழ் நாடும் வளரவில்லை!
இனி ஏன் திராவிடக் கட்சிகள் தமிழர்களை ஆள வேண்டும்? தமிழர் தான் ஆள வேண்டும். அதற்கு "நாம் தமிழர் கட்சி" மட்டுமே தீர்வு.
"நாம் தமிழர் கட்சி" என்பது மறைந்த மாமேதை - தினத்தந்தி பத்திரிக்கையின் உரிமையாளாரான சி.பா.ஆதித்தனாரால் ஆரம்பித்து வைக்கப் பட்ட ஒரு கட்சி. அவரிடம் பண பலம் இருந்தாலும் படை பலம் இல்லை. அதனை இப்போது கையில் எடுத்திருக்கிறார் சீமான். அவர் வெற்றி பெறுவார் என்பதே நமது நம்பிக்கை. வெற்றி பெற வேண்டும்.
தமிழ் நாட்டை தமிழனே ஆட்சி செய்யட்டும்!
Labels:
கல்கண்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment