"நாம் தமிழர்" என்னும் உணர்வு நமக்கு ஓங்க வேண்டும்.
சாதிய உணர்வுகளை நாம் அதிகமாக வளர்த்துக்கொண்டோமோ என்று நினைக்கத் தோன்றுகிறது! வளர்த்துக் கொண்டதற்கான காரண காரியங்கள் என்ன என்பதும் நமக்குப் புரியவில்லை!
தமிழர்கள் என்று ஏன் நம்மால் சொல்ல முடியவில்லை? எங்கே நாம் தவறுகள் புரிந்தோம்?
திராவிடக் கட்சிகள் நம்மை இப்படி ஒரு நிலைமைக்குக் கொண்டு வந்தனவா? திட்டம் போட்டு நம்மை சொந்த நாட்டிலேயே அந்நியர்களாக ஆக்கிவிட்டனரா நமது திராவிடத் தலைவர்கள்?
சொந்த மண்ணில் - மண்ணின் மைந்தராக இருந்த நாம் - தமிழராக இருந்த நாம் - எப்போது திராவிடர் ஆனோம்?
இதற்கு யார் காரணம்?
தெலுங்கு தேசத்தில் உள்ளவர்கள் தெலுங்கர்கள். கர்நாடக மாநிலத்தில் உள்ளவர்கள் கன்னடர்கள். கேரள தேசம் மலையாளிகள். அதென்ன? தமிழர் தேசத்தில் மட்டும் தமிழர் அல்லாத திராவிடர்கள்!
தமிழர் தேசத்தில் முப்பது விழுக்காடு தமிழர் அல்லாதார். அதில் வியப்பு ஒன்றுமில்லை. இந்தியக் குடிமகன் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் வாழலாம்.
ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த மாநிலத்தின் பூர்விகக் குடியினரே மாநிலத்தை ஆளுகின்றனர் - தமிழ் நாட்டைத் தவிர! தமிழ் நாட்டில் மட்டும் திராவிடர்கள் தமிழ் மாநிலத்தைஆளுகின்றனர்!
ஆரியர்கள் சாதி அடிப்படையில் தமிழர்களைப் பிரித்து வைத்தனர் என்று நீண்ட காலம் நாம் சொல்லி வந்தோம்.ஆனால் அவர்கள் கூட தங்கள் பிழைப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர். ஆனால் ஆரியர்களின் பெயரைச் சொல்லி திராவிடத் தலைவர்கள் தான் இந்தச் சாதிப் பிரச்சனையை கையில் எடுத்துக் கொண்டு தமிழர்களை எல்லாக் காலங்களிலும் தமிழர்களைப் பிரித்து வைத்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இதனைத் திராவிடத் தலைவர்கள் மிகவும் சாதுரியமாக ஆரியர்களின் பெயரைச் சொல்லிப் பிழைப்பு நடத்துகின்றனர்!
இவர்கள் கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளாக சாதியை வைத்தே பிழைப்பு நடத்தி நாம் தமிழர்கள் என்னும் உணர்வே இல்லாமல் செய்துவிட்டனர்.
இப்போது நாம் பழைய நிலைமைக்குத் திரும்ப வேண்டும். நாம் தமிழர் என்னும் உணர்வு ஓங்க வேண்டும்.
நாம் தமிழர்! நாம் தமிழர்! நாம் தமிழர்! சாதிய உணர்வுகளுக்குச் சாவு மணியடிப்போம்!
வாழ்க தமிழினம்! வெல்க தமிழினம்! நாம் தமிழர்! நாமே தமிழர்!
No comments:
Post a Comment