Friday, 21 July 2017
கேள்வி - பதில் (53)
கேள்வி
பிக்பாஸ் சம்பந்தமான சர்ச்சையில் "முடிந்தால், என்னைக் கைது செய்யுங்கள்!" என்கிறாரே நடிகர் கமல்ஹாசன்?
பதில்
இந்து மக்கள் கட்சியினர், சென்னை காவல் ஆணையிரிடம், கமலையும் அந்த நிகழ்ச்சியில் கலந்த கொண்டிருக்கும் அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனப் புகார் கொடுத்திருக்கின்றனர்! அந்த நிகழ்ச்சி பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் கெடுப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு நிகழ்ச்சி தான். கன்னடத்திலும் ஒளிபரப்பானதாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவிற்கு இது புதிய வரவல்ல. இந்தியில் ஏற்படாத இந்த அளவு எதிர்ப்பு ஏன் தமிழில் மட்டும்?
வழக்கம் போல இதுவும் அரசியல் தான்! இந்து மக்கள் கட்சி என்றாலும் பா.ஜ.க. என்றாலும் எல்லாம் ஒன்று தான். இன்று இந்திய நாட்டில் ஏற்படுகின்ற அனைத்துப் பிரச்சனைகளும் இந்து மக்கள் முன்னணி என்னும் பெயரில் பா.ஜ.க. அரங்கேற்றுகிறது!
பா.ஜ.க., ரஜினி அரசியலுக்கு வருவதை கைகூப்பி வரவேற்கிறது. காரணம் ரஜினி மூலம் தமிழ் நாட்டில் பா.ஜ.க. காலூன்றாலாம் என்னும் ஒரு திட்டம் அவர்களுக்கு உண்டு. ரஜினியின் செல்வாக்கு என்பது தமிழகத்தில் அதிகம். அதுவும் ரஜினி ஓர் ஆன்மீகவாதி என்னும் பெயரும் உண்டு. ஆனால் கமல் ரஜினிக்கு நேர்மாறானவர். கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்; ஒழுக்கம் இல்லாதவர் என்கிற பெயரும் உண்டு. கமல் அரசியலுக்கு வருவது பா.ஜ.க. வுக்கு நன்மை பயக்காது என்று அவர்கள் நினைக்கிறார்கள். அதனால் தங்களது நலனுக்காக ரஜினியை முன் நிறுத்தி, கமலை கவிழ்க்க வேண்டும் என்று அவர் மீது சேற்றை வாரி வீசிக் கொண்டிருக்கிறார்கள்!
மற்றபடி கலாச்சாரம், பண்பாடு என்பதெல்லாம் நொண்டிச்சாக்கு! சினிமாவில் இல்லாத கலாச்சார சீரழிவா? அவரைக் கைது செய்யுங்கள் என்பதெல்லாம் வெறும் அரசியல்! இதுவும் நடக்காது! அதுவும் ந்டக்காது!
மத்தியில் பா.ஜ.க. வின் ஆட்சியினால் இந்து மக்கள் முன்னணி இப்போது எல்லா மாநிலங்களிலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது! தமிழ் நாட்டிலும் தனது வாலை ஆட்டிக் கொண்டிருக்கிறது!
பொறுத்திருந்து பார்ப்போம்!
Labels:
கல்கண்டு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment