Friday, 14 July 2017
தமிழிசைச் சித்தர் சி.எஸ்.ஜெயராமன்
இந்த ஆண்டு தமிழிசைத் சித்தர் சி.எஸ்.ஜெயராமனின் நூற்றாண்டு விழா. சிறந்த பாடகர். நல்ல இசைக் கலைஞர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த முதல் படமான பராசக்தி படத்திற்கு முதன் முதலாக சிவாஜி கணேசனுக்குப் பின்னணி பாடியவர். அந்தப் பாடல்கள்:
கா.கா.கா.
தேசம் ஞானம் கல்வி
நெஞ்சு பொறுக்குதில்லையே
பராசக்தி படத்திற்குப் பின்னர் சிவாஜி கணேசனுக்காக பல பாடல்கள் அவரின் குரலிலேயே ஒலித்தன. அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் மிகவும் புகழ் பெற்ற பாடல்கள்.
அவரை வெறும் பின்னணிப் பாடகராக மட்டும் குறிப்பிட முடியாது. அவர் பல படங்களுக்கு இசையமைப்பாளராகவும் இருந்திருக்கிறார். குறிப்பாக நடிகவேள் எம்.ஆர். ராதாவின் ரத்தக்கண்ணீர் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அவரே.
தியாகராஜ பாகவதர் என்றாலே அறியாதார் யாரும் இருக்க முடியாது. பாகவதருக்கு இரண்டு ஆண்டு காலம் இசைப்பயிற்சி அளித்தவரும் அவரே.
கலைஞர் மு.கருணாநிதியை தமிழ்த்திரை உலகிற்கு திரைக்கதை,வசனம் எழுதுவதற்கு காரணமாக இருந்தவர், கலைஞரின் முதல் மனைவி, பத்மாவதி அம்மையரின் அண்ணன், எம்.ஜி.ஆர்.புகழ், நடிகர் மு.க.முத்துவின் தாய் மாமன், பிற்காலத்தில் தமிழ் நாடு இசைக்கல்லூரியின் முதல்வராகவும் இருந்தவர் தான் இசைச் சித்தர்.
இவருடைய மகள் சிவகாமசுந்தரி இவரைப் பற்றி குறிப்பிடும் போது தனது தந்தை ஒரு கார் பிரியர் என்கிறார். ஒரே நேரத்தில் எட்டு கார்களை வைத்திருந்தவர், வீடு, தோட்டம் என்று செல்வாக்காக வாழ்ந்தவர்.
சி.எஸ்.ஜெயராமன் 1917 - ம் ஆண்டு பிறந்தவர். இந்த ஆண்டு 100 வது ஆண்டு. அவர் 1995 - ம் ஆண்டு காலமானர்.
நல்லதொரு இசைக்கலைஞர். அவரின் குரல் யாராலும் பின்பற்றமுடியாத ஒரு குரல். இன்று மட்டும் அல்ல என்று கேட்டாலும் அவரின் குரல் இனிமை இனிமை தான்!
சி.எஸ்.ஜெயராமனின் மகள் சிவகமசுந்தரி அவரைப்பற்றியான ஒரு கட்டுரைத் தொகுப்பை "ஓர் இனிய இசைப்பயணம்" என்னும் தலைப்பில் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்.
சி.எஸ்.ஜெயராமன் இப்போதும் தமது பாடல்களின் மூலம் நம்மிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அவர் என்றென்றும் நம்மோடு வாழ்வார்!
Labels:
நடப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment