Thursday, 31 August 2017
அறுபதாவது சுதந்திர தினம்
நம் நாடு இன்று அறுபதாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது. முதலில் வாசகர்களுக்கு எனது சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
ஏனோ, கடந்த காலங்களைப் பின் நோக்கிப் பார்க்கின்ற போது இருந்த மகிழ்ச்சியும், சந்தோஷமும் இப்போது குறைந்திருப்பதாகவே தோன்றுகிறது. பொதுவாக கடந்த காலங்களில் நமது ஒவ்வொருடைய கார்களிலும் - வெளியே லோரிகளிலும் அனைத்து வாகனங்களிலும் - நமது தேசியக் கொடி கம்பீரமாகப் பறப்பதை நாம் மறந்திருக்க முடியாது. ஏன்? வீடுகளிலும் நாம் பறக்க விட்டிருப்போம்.
ஆனால், இப்போது அதெல்லாம் எங்கே போனாது? கார்களில் தேசியக் கொடி பறக்கவில்லை. வீடுகளிலும் குறைந்து போனது. ஆனால் இதெல்லாம் தவறு என்று நமக்குப் புரிகிறது. இன்பமோ, துன்பமோ, மனிதர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் வருவது போல, நாட்டுக்கும் நன்மைகள் தீமைகள் வரத்தான் செய்யும். அதனை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இது நமது நாடு. நமக்கான சுதந்திரம் இங்கு தான் உள்ளது. வேறு எங்கே போவது?
பிரச்சனை அதுவல்ல. நமது கோபம் எல்லாம் நம்மை ஆளும் அரசியல்வாதிகள் மீது தான். அவர்கள் நாட்டை தவறான வழியில் வழி நடத்துகிறார்கள். அவர்கள் மீதான கோபத்தை நமது நாட்டின் மீது நாம் காண்பிக்கிறோம்.
விலைவாசிகள் ஏற்றம். பெட்ரோல் விலை ஏற்றம். காய்கறிகள் விலை ஏற்றம். மீன் விலைகள் ஏற்றம். வீட்டுக்குப் பயன் படுத்தும் பொருள்களின் விலைகள் ஏற்றம். குழைந்தைகளுக்குப் பால் வாங்கிக் கொடுக்க முடியாத ஏழைப் பெற்றோர். குழைந்தைக்குப் பால் வாங்கிக்கொடுக்க முடியாமல் தான் குடிக்கும் காப்பியையும், சோற்றையும் கொடுத்து குழந்தையின் வயிற்றை நிரப்பும் தாய்.
வேலை வாய்ப்புக்கள் குறைந்து போயின. படித்த பட்டதாரிகள் வேலை, வேலையென அலைகின்றார்கள். ஏற்கனவே தொழிற்சாலைகள் ஆட்களைக் குறைக்கின்றன. இருக்கின்ற வாய்ப்புக்களை வங்காள தேசிகள் ஆக்கிரமிக்கின்றனர்.
நாட்டை வளமான நாடாக மாற்றுவதற்கு ஆளும் அரசியல்வாதிகளிடம் எந்தத் திட்டமும் இல்லை. கொள்ளையர்கள் செய்கின்ற வேலையை அரசியல்வாதிகள் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த நிலையில் சுதந்திர தினத்தின் சுவாசக் காற்றை எப்படி அனுபவிப்பது? ஆனாலும் நம்பிக்கையோடு இருப்போம். நாடு நமதே! நாளையும் நமதே! வாழ்க மலேசியா!
Wednesday, 30 August 2017
ஒரு பசும்பாலின் கதை...!
இந்தியாவில் மாடு, மாட்டிறைச்சி, மாட்டு வியாபாரம், இறைச்சி ஏற்றுமதி, மாடுகளை ஏற்றிக் கொண்டு போன லாரி ஓட்டுனரை அடித்து உதைத்தல் - என்று இப்படியெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருந்தன. சமீபத்தில் எங்களது நிறுவனத்தில் வேலை செய்யும் ஒரு மலாய் இளைஞன் ஒரு சோகக் கதையைச் சொன்னான். அவனது கிராமத்தில், அவனது பெற்றோர் ஒரு திருமண நிகழ்ச்சிக்குப் போய் விட்டனர். அடுத்த நாள் தான் அவர்கள் வீடு வந்தனர். வந்து பார்க்கும் போது ஆடு, மாடு, கோழி, குருவி என்று எதனையும் விட்டு வைக்கவில்லை. அத்தனையும் களவாடப்பட்டு விட்டன. ஒவ்வொரு மாடும் ஆயிரம் வெள்ளிக்கு மேலே.
இந்த நேரத்தில் எனக்கு ஒரு ஞாபகம் வந்தது. அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை தான். சும்மா ஒரு பழைய ஞாபகம்.
நீண்ட காலத்திற்கு முன் நா.பார்த்தசாரதியின் "தீபம்" இதழில் ஒரு கதை படித்தேன். அரைகுறையான ஞாபகம் தான் இப்போது. ஒரு மனிதர். அவர் ஒவ்வொரு நாளும், காலையில் வேலைக்குப் போகுமுன்னர், தேநீர் அருந்துவது வழக்கம். பல உணவகங்களில் தேநீரைச் சுவைத்த பின்னர் ஒரே ஒரு உணவகத்தின் தேநீர் அவருக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தது. தேநீருக்குப் பயன்படுத்தும் பசும்பால் நல்ல கெட்டியாகவும் சுவையாகவும் இருந்தது. அந்த சுவையில் அவர் மயங்கிப் போனார்! ஒரு நாள் அவருக்கு மனதிலே கொஞ்சம் நெருடல். அதெப்படி? மற்ற உணவகங்களிலே இல்லாத ஒரு சுவை இங்கு மட்டும் எப்படி? வேறு எதையாவது பாலில் கலக்கிறார்களா? ஒரு வேளை மாவாக இருக்குமா? சந்தேகம் தான்! யாரிடமும் கேட்க முடியவில்லை. உண்மை வெளி வராது என்பது அவருக்குத் தெரியும். ஒரு நாள் எப்போதும் விட கொஞ்சம் முன்னதாகவே அந்த உணவகத்திற்குக் கிளம்பி விட்டார். போகும் வழியில் அந்த உணவகத்தின், பால் வாங்கி வரும் வேலையாளை, இடையிலேயே பார்த்து விட்டார். அந்த வேலையாள் கையில் ஒரு பாத்திரத்துடன் பால் வாங்க போய்க் கொண்டிருந்தார். சரி! இவரைப் பின் தொடர்வோம் என்று அந்த வேலையாளைப் பின் தொடர்ந்தார். அந்த வேலயாள் நேராக மாடுகளை வெட்டும் அறுப்புக் கொட்டகையினுள் நுழைந்தார். அங்கு மாடுகள் வெட்டப்பட்டக் கொண்டிருந்தன. ஒரு பசுமாடு முன் அந்த வேலையாள் நின்றார். பசுமாடு வெட்டப்படுவதற்குத் தயார் நிலையில் இருந்தது. பசுமாடு வெட்டப்பட்டது. அந்த வேலையாள், அந்தப் பசுமாடு வெட்டப்பட்டுக் கொண்டிருக்கும் போதே, மாட்டின் காம்பைப் பிடித்து, இழுத்து இழுத்து, தனது பாத்திரத்தில் பாலை நிரப்பிக் கொண்டிருந்தார்.
இரகசியம் புரிந்து விட்டது. அதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதர் அந்த இடத்தைக் காலி செய்துவிட்டு அங்கிருந்து ஓடிப் போனார். அதன் பின்னர் அவர் தேநீர் குடிப்பதையே மறந்து விட்டார். அவர் மட்டுமா? நானும் பசும் பால் குடிப்பதையே மறந்து போனேன்.
மனித இனம் இப்படியா ஈவு இரக்கமற்று..?
Tuesday, 29 August 2017
அரசியல்வாதிகளுக்கு இனி அயலகம் தான்!
அரசியவாதிகளை நினைக்கும் போது நமக்கு இயற்கையாகவே கோபமும் ஆத்திரமும் வரத்தான் செய்கிறது. நான் நல்ல, உண்மையான அரசியல்வாதிகளைச் சொல்லவில்லை. கொலைகாரன், கொள்ளைக்காரன், குண்டர் கும்பல் தலைவன் -இவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து பண்ணுகின்ற அராஜகங்களும், அயோக்கியத்தனங்களும், உண்மையைச் சொன்னால், நமக்கும் கொலை வெறியை ஏற்படுத்துகின்றன!
இப்படி அநியாயங்கள் செய்கின்றவர்கள் தங்களது கடைசி காலத்தை எப்படித்தான் எதிர் நோக்குவார்கள்? இந்தக் கொலைகார கும்பல்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இல்லாததால் இவர்கள் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எப்படியும் வாழ்வார்கள்! ஆனாலும் நிம்மதியற்ற வாழ்க்கை! ஓடி ஒளிந்து வாழ்கின்ற வாழ்க்கை! சக மனிதனிடம் மரியாதை கிடைக்காத வாழ்க்கை!
கடைசியாக இப்படி ஒரு நிலைக்கு ஆளானவர் நமது பக்கத்து நாடான தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா.
ஊழல் வழக்கில் பத்து ஆண்டு சிறைத் தண்டனையை எதிர் நோக்கிய யிங்லக், நீதிமன்றம் தனது முடிவை அறிவிக்கும் முன்னரே நாட்டை விட்டு தப்பிவிட்டார்! அவர் துபாய்க்குத் தப்பிவிட்டதாகக் கூறப்படுகின்றது. இதற்கு முன்னர் இவரது சகோதரரும் துபாயில் தலமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்!
ஆக, எவ்வளவு தான் கோடிக் கோடியாகக் கொள்ளையடித்து குவித்தாலும் அந்தக் கோடிகளோடு தலைமறைவு வாழ்க்கை தான் இவர்கள் வாழ்ந்தாக வேண்டும். அரசியல் கொள்ளை என்பது பொதுமக்களைக் கொள்ளையடிப்பது தான். நாட்டின் வளப்பத்திற்காக, மக்களின் உயர்வுக்காக பயன்படுத்த வேண்டிய பணம் இப்படி நாட்டை ஆள வந்தவர்கள் தங்களது சுயநலத்திற்காக பயன்படுத்துவது என்பது கொள்ளையிலும் மகா கொள்ளை!
நம்மைப் பொறுத்தவரை, மலேசியாவிலும் சரி, தமிழ் நாட்டிலும் சரி மக்களைக் கொள்ளையடித்து குபேரனானவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். இவர்களில் எத்தனை பேர் நிம்மதியான வாழ்க்கை வாழ்கின்றனர்? வெளி நாடுகளில் சொத்துக்களை வாங்கிப் போட்டிருக்கிறர்கள். எவனோ அனுபவிக்கிறான். அகப்பட்டுக் கொள்வோம் என்று நினைத்தவன் வெளி நாட்டைத் தாயகமாக ஆக்கிக் கொண்டான்! ஒளிவு மறைவு வாழ்க்கை! எந்நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்கிற பய உணர்வு! ஒரு சராசரியாக அவன் இருந்த போது உள்ள அந்த நிம்மதியை - இப்போது கோடிக்கணக்கில் பணம் வைத்திருந்தும் - அவனால் பெற முடியவில்லை! அவனது பிள்ளைகள் என்ன குணக்குன்றுகளாகவா இருக்கிறார்கள்? அத்தனையும் குப்பை மேடுகள்! கொஞ்சம் ஏமாந்தால் வேலைக்காரியே கொன்று விடுவாள்! உன்னால் எனக்கு எதுவும் ஆகவில்லை என்று மகன் நினைத்தால் அவனே அப்பனுக்குக் கொள்ளி வைத்து விடுவான்! வஞ்சனையோடு பணம் சேர்த்த அவனுக்கு, அவனைச் சுற்றியே ஒரு வஞ்சனைக் கூட்டம் சூழ்ந்து கொண்டே இருக்கும்!
தனது சொந்த நாட்டிலும் அவன் ஒரு அயலானாகவே வாழ்வான்! வெளி நாடாக இருந்தால் அங்கும் யாரும் மதிக்காத ஒரு அயலானகத்தான் வாழ வேண்டி வரும்!
அவனுக்கு அயலகம் தான் நிரந்தரம்!
Sunday, 27 August 2017
ஏழை மாணவர்கள், பணக்காரர்கள் ஆனார்கள்!
ஒரே நாளில் ஏழைத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் பணக்காரர்கள் ஆனார்கள்! இப்படி ஓர் அதிசயம் பேராக், பத்து காஜாவில் நடந்திருக்கிறது!
இன்று நாடு முழுவதும் எல்லாப் பள்ளிகளிலும் வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் அமலில் இருந்து வருகிறது. அதில் பத்துகாஜா செங்காட் தமிழ்ப்பள்ளியும் அடங்கும்.இப்பள்ளியில் சுமார் 190 மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். இது நாள் வரை பயனடைந்து வந்த மாணவர்களில் சுமார் 90 மாணவர்களுக்கு இனி இலவச உணவு கிடையாது என்பதாக பேரா மாநிலக் கல்வி இலாகா அதிரடியாக முடிவெடுத்திருக்கிறது. அதாவது இந்த 90 மாணவர்களும் கோடிஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று மாநிலக் கல்வி இலாகா கண்டுபிடித்து அதற்கான நடவடிக்கையும் உடனடியாக எடுத்து விட்டது!
இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒன்று, பேரா மாநிலக் கல்வி இலாகாவால் ரத்து செய்யப்பட்டிருக்கும் இந்த இலவச உணவு திட்டம் வேறு எந்த ஒரு மொழி பள்ளிக்கும் ரத்து செய்யப்படவில்லை என்பது தான். இந்த நடவடிக்கையின் மூலம் வேறு ஒன்றையும் நாம் பதிவு செய்யலாம். இந்த பத்துகாஜா வட்டாரத்தில் ஏன் இந்த பேரா மாநிலத்தில், செங்காட் தமிழ்ப்பள்ளியில் மட்டும் தான் 90 கோடீஸ்வர குடும்பங்களிலிருந்து மாணவர்கள் கல்வி கற்க வருகிறார்கள் என்பதாக நாமும் அறிகிறோம்! அந்தக் கோடீஸ்வரர்கள் யார் யார் எனத் தெரிந்து கொண்டால் பெற்றோர்களோ, அரசியல்வாதிகளோ மறியல், ஆர்ப்பாட்டம் என்னும் நிலைக்குப் போக மாட்டார்கள்!
ஒன்று நமக்குப் புரிகிறது. கல்வி அமைச்சும், மாநிலக் கல்வி இலாகாக்களும் தமிழ்ப்பள்ளிகளில் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பிரச்சனைகள ஏற்படுத்துவதே தங்களது வேலை என்பதாக நினைக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அல்லது கல்வி அமைச்சிலும், கல்வி இலாக்காகளிலும் தேவைக்கு மேல் அங்கு வேலை செய்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது. வேலை செய்ய ஒன்றும் இல்லை என்றால் உடனே எந்தத் தமிழ்ப்பள்ளியில் என்ன பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என்று தேவையற்ற ஒரு சூழலை ஏற்படுத்துகிறார்கள்! இதையே தேசியப்பள்ளிகளிலோ, சீனப்பள்ளிகளிலோ அவர்களால் காட்ட முடிவதில்லை! காரணம் அந்த அளவுக்கு அவர்களுக்குத் துணிவில்லை!
தமிழ்ப்பள்ளிகளில் காட்டிக் கொடுக்கும் புத்தி நமக்கு இருப்பதால் கொஞ்சம் கூட அறிவில்லாதவன் எல்லாம் நம்மீது கை வைக்கிறான்! அறிவுள்ளவர்களாக நாம் இருக்க வேண்டுமே தவிர அறிவில்லாதவர்களோடு கூட்டு சேரக்கூடாது என்பதே இது போன்ற நிகழ்வுகள் காட்டுகின்றன.
நம்மை நாமே திருத்திக் கொள்ளாதவரை எல்லாக் கூத்துக்களும் நடந்து கொண்டு தான் இருக்கும்! அது வரை அரசியல்வாதிகளிடம் தான் நாம் கூஜா தூக்க வேண்டும்!
இன்று நாடு முழுவதும் எல்லாப் பள்ளிகளிலும் வசதி குறைந்த மாணவர்களுக்கு இலவச உணவு வழங்கும் திட்டம் அமலில் இருந்து வருகிறது. அதில் பத்துகாஜா செங்காட் தமிழ்ப்பள்ளியும் அடங்கும்.இப்பள்ளியில் சுமார் 190 மாணவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வருகின்றனர். இது நாள் வரை பயனடைந்து வந்த மாணவர்களில் சுமார் 90 மாணவர்களுக்கு இனி இலவச உணவு கிடையாது என்பதாக பேரா மாநிலக் கல்வி இலாகா அதிரடியாக முடிவெடுத்திருக்கிறது. அதாவது இந்த 90 மாணவர்களும் கோடிஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று மாநிலக் கல்வி இலாகா கண்டுபிடித்து அதற்கான நடவடிக்கையும் உடனடியாக எடுத்து விட்டது!
இதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒன்று, பேரா மாநிலக் கல்வி இலாகாவால் ரத்து செய்யப்பட்டிருக்கும் இந்த இலவச உணவு திட்டம் வேறு எந்த ஒரு மொழி பள்ளிக்கும் ரத்து செய்யப்படவில்லை என்பது தான். இந்த நடவடிக்கையின் மூலம் வேறு ஒன்றையும் நாம் பதிவு செய்யலாம். இந்த பத்துகாஜா வட்டாரத்தில் ஏன் இந்த பேரா மாநிலத்தில், செங்காட் தமிழ்ப்பள்ளியில் மட்டும் தான் 90 கோடீஸ்வர குடும்பங்களிலிருந்து மாணவர்கள் கல்வி கற்க வருகிறார்கள் என்பதாக நாமும் அறிகிறோம்! அந்தக் கோடீஸ்வரர்கள் யார் யார் எனத் தெரிந்து கொண்டால் பெற்றோர்களோ, அரசியல்வாதிகளோ மறியல், ஆர்ப்பாட்டம் என்னும் நிலைக்குப் போக மாட்டார்கள்!
ஒன்று நமக்குப் புரிகிறது. கல்வி அமைச்சும், மாநிலக் கல்வி இலாகாக்களும் தமிழ்ப்பள்ளிகளில் தங்களது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பிரச்சனைகள ஏற்படுத்துவதே தங்களது வேலை என்பதாக நினைக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. அல்லது கல்வி அமைச்சிலும், கல்வி இலாக்காகளிலும் தேவைக்கு மேல் அங்கு வேலை செய்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது. வேலை செய்ய ஒன்றும் இல்லை என்றால் உடனே எந்தத் தமிழ்ப்பள்ளியில் என்ன பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என்று தேவையற்ற ஒரு சூழலை ஏற்படுத்துகிறார்கள்! இதையே தேசியப்பள்ளிகளிலோ, சீனப்பள்ளிகளிலோ அவர்களால் காட்ட முடிவதில்லை! காரணம் அந்த அளவுக்கு அவர்களுக்குத் துணிவில்லை!
தமிழ்ப்பள்ளிகளில் காட்டிக் கொடுக்கும் புத்தி நமக்கு இருப்பதால் கொஞ்சம் கூட அறிவில்லாதவன் எல்லாம் நம்மீது கை வைக்கிறான்! அறிவுள்ளவர்களாக நாம் இருக்க வேண்டுமே தவிர அறிவில்லாதவர்களோடு கூட்டு சேரக்கூடாது என்பதே இது போன்ற நிகழ்வுகள் காட்டுகின்றன.
நம்மை நாமே திருத்திக் கொள்ளாதவரை எல்லாக் கூத்துக்களும் நடந்து கொண்டு தான் இருக்கும்! அது வரை அரசியல்வாதிகளிடம் தான் நாம் கூஜா தூக்க வேண்டும்!
Saturday, 26 August 2017
உழைப்பதில் தான் இன்பம் ..என் தோழா!
என்ன தான் சொல்லுங்கள், மனிதன் உழைக்கும் போது தான் இன்பம் காண்கிறான். உழைப்பே இல்லாமல் வெறுமனே, பூமிக்குப் பாரமாக இருப்பவன் துன்பத்தைத் தான் அனுபவிப்பானே தவிர இன்பத்தைக் காணப் போவதில்லை!
சும்மா இருப்பது என்பது இன்பம் அல்ல; துன்பம்! ஒவ்வொரு மனிதனும் பிறப்பு முதல் இறப்பு வரை அவன் உழைக்கத் தான் வேண்டும். அந்த உழைப்பில் கிடைக்கும் நிறைவு வேறு எதிலும் அவனுக்குக் கிடைப்பதில்லை.
இன்று பெரும்பாலும் வயாதாகி விட்டால் உடனே ஓய்வு எடுக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். வேலையிலிருந்து ஒய்வு எடுத்த பின்னர் "அக்கடா" என்று ஏதோ ஒரு சில நாள்களுக்கு ஒய்வு எடுக்கலாம். ஒரு மனிதன் முப்பது, நாற்பது ஆண்டுகள் வேலை செய்த பின்னர் அவனால் சும்மா இருக்க முடிவதில்லை. அவன் தொடர்ந்து ஏதாவது செய்தாக வேண்டும். அப்போது தான் அவனால் எப்போதும் போல் சுறுசுறுப்பாக இயங்க முடியும். இல்லாவிட்டால் அவனுடைய மூளை மட்டும் அல்ல உடலிலுள்ள அனைத்து உறுப்புக்களும் மழுங்கிப் போகும்.
நமது சுற்றுப்புறத்தில் உள்ள சீனர்களைப் பாருங்கள். அதிலும் வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் சீனர்களைப் பாருங்கள். அவர் சாகும் வரையில் அவர்கள் ஏதாவது செய்து கொண்டு தான் இருப்பார்கள். அவர்கள் உடல் ஒத்துழைக்கும் வரை அவர்கள் வேலை செய்வதை யாராலும் நிறுத்த முடியாது. ஒரு சீன நண்பர் பத்திரிக்கை, மாத, வார இதழ்கள் விற்பனை செய்யும் பெரிய முதலாளி. வயதானவர். அவருக்கு என்ன வியாதி என்று என்னால் சொல்ல முடியவில்லை. அவருடைய தலை நிமிர்ந்த வாரே இருக்கும். அவர் அப்படியே தான் இன்னும் தனது பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார். எனது தமிழ் முஸ்லிம் நண்பர் ஒருவர் ஒரு மளிகைக் கடை நடத்திக் கொண்டிருக்கிறார். அவருடைய வயது 90 ரை நெருங்குகிறது. கடையில் பலர் வேலை செய்தாலும் அவரும் இப்படியும் அப்படியுமாக ஏதாவது வேலை செய்து கொண்டு தான் இருப்பார். எனது மலாய் நண்பர் ஒருவர் பிரதமர் அலுவலகத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். தினசரி பள்ளிவாசலுக்குப் போய், பள்ளிவாசலைச் சுத்தம் செய்வது, பெருக்குவது இன்னும் என்ன என்ன வேலைகள் இருக்கின்றனவோ அத்தனையும் செய்கிறார்.
இதன் மூலம் அவர்களுக்கு என்ன இலாபம்? பணம் அங்கு முதன்மைப் பெறவில்லை. அவர்களுடைய வயோதிகத்தை தங்களின் வேலைகளின் மூலம் தள்ளிப் போடுகிறார்கள் என்பது தான் உண்மை. போட்டி இல்லை, புலம்பல் இல்லை. இருக்கும் வரையில் ஏதோ ஒன்றில் ஒர் ஈடுபாடு. நம்மில் சிலர் புலம்புவது போல "காடு வா! வா! என்கிறது; வீடு போ! போ! என்கிறது" என்று புலம்பல் இல்லை! அது வரும் போது வரட்டும். அது வரை புல்ம்பலை விரட்டி அடிப்போம்!
எந்த வயாதானாலும் உழைப்பு மட்டும் தான் நமக்குத் திருப்தியைத் தரும். உழைப்பு மட்டும் தான் நாம் இன்னும் உயிரோடு இருக்கிறோம் என்பதற்கு அடையாளம்!
இருக்கும் வரை "உழைப்பதில் தான் இன்பம்! என் தோழா!" என்று உழைப்பில் மகிழ்ச்சி காண்போம்!
கேள்வி - பதில் (60)
கேள்வி
பிக் பாஸ் ஜூலி மீண்டும் வந்து விட்டாரே!
பதில்
ஆம்! விஜய் டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். ஜூலியை ஏன் இந்த அளவுக்கு ரசிகர்கள் வெறுக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு காரணம், அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்தாற் போல் நான் பார்க்கவில்லை. பார்த்தவர்களிடம் விசாரித்ததில் அவர் வெறுக்கும் அளவுக்கு பிக் பாஸ் வீட்டில் நடந்து கொண்டிருக்கிறார் என்று சொன்னார்கள்.
வலைத் தளங்களில் அவரைப் பற்றி பல செய்திகள். மக்கள் அவரை வெறுக்கும் காரணத்தால் அவரால் எங்கும் போக முடியவில்லை. வீட்டிற்குப் போக முடியவில்ல. நண்பர்கள் வீட்டிற்கும் போக முடியவில்லை. பேருந்துகளில் பயணம் செய்ய முடியவில்லை. ரயிலில் ஏற முடியவில்லை. மோட்டார் சைக்களில் முகத்தை மூடிக் கொண்டு இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருக்கிறார். தலை சாய்க்கவும் இடமில்லாமல் அவதிபட்டுக் கொண்டிருக்கிறார் என்று பலவாறான செய்திகள்! இவைகளை நம்பலாமா, நம்பக்கூடாதா என்று பிரிக்க முடியாத அளவுக்கு செய்திகள்!
ஆனாலும் இது போன்ற செய்திகளை என்னால் நம்ப முடியவில்லை. தமிழ் நாட்டு மக்களுக்கு வேறு வேலையே இல்லையா? ஜூலியை பின் தொடருவது தான் அவர்கள் வேலையா? மேலும் எத்தனை பேர் இந்த நிகழ்ச்சியில் ஆர்வம் காட்டுகிறார்கள்? இதெல்லாம் தொலைக்காட்சியினரின் நிகழ்ச்சியைப் பிரபலப்படுத்துவதற்காக செய்கின்ற விளம்பரமே அன்றி வேறு ஒன்றும் இல்லை என்பதே எனது அபிப்பிராயம். தொழில் ரீதியாக ஒன்றைக் கவனிக்க வேண்டும். ஜூலி இந்தத் தொடரில் தோன்றுவதற்காக அமர்த்தப்பட்டவர் அல்லது ஒப்பந்தம் செய்யப்பட்டவர். அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப் பட்டிருக்கலாம். ஆனால் அத்தோடு அவருக்கு அத்தனையும் முடிந்து விட்டதாகப் பொருள்படாது. அந்த நிகழ்ச்சி முடியும் வரை அவருக்குச் சில நிபந்தனைகள் விதிக்கப் பட்டிருக்கும். அதற்கு உட்பட்டுத் தான் அவர் செயல்பட முடியும். நிகழ்ச்சியை நடத்தும் விஜய் டிவி ஜுலியை சும்மா அம்போ என்று விட்டு விட மாட்டார்கள். அவர்களின் நிகழ்ச்சி ஒன்றிற்காக ஜுலியை அவர்கள் 'நடிக்க' வைத்திருக்கிறார்கள். நிகழ்ச்சி இன்னும் முடியவில்லை. அது வரை அவர் வெளியே இருந்தாலும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான்.
அது சரி! ஜூலியின் ஜாதகம் இனி எப்படி இருக்கும்? சேர்ந்தது விஜய் டிவி யின் குடும்பத்தில் அல்லவா! நன்றாகவே இருக்கும்!
வாழ்த்துவோம்!
Thursday, 24 August 2017
தமிழ்ப்பற்றாளர் டத்தோ ஹாஜி தஸ்லிம்
டத்தோ ஹாஜி தஸ்லிம் மறைந்தார் என்று அறிந்த போது நமது நாடு நல்லதொரு தமிழ் மகனை இழந்ததே என்னும் பெரும் துயரம் தான் மனதைக் கனக்க வைத்தது.
நேர்மை ஒன்றே அவரின் ஆயுதம். தமிழர், தமிழ் மொழி, தமிழ் சார்ந்த அனைத்திலும் அனைத்துமாக இருந்தவர். தொழில் மட்டுமே பிரதானம் என்று இருந்திருந்தால் மலேசிய கோடீஸ்வரர்கள் வரிசையில் அவரும் ஒருவராக இருந்திருப்பார். அவர் தமிழ் என்னும் வட்டத்திற்குள் சுழன்றவர். அதனால் அவர் பொருளாதார ரீதியில் இழந்தவை ஏராளம். ஆளும் தரப்பினால் ஒதுக்கப்பட்டவர்.
ஆனாலும் அவர் எதற்கும் கலங்கியவர் அல்ல. "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்னும் உயரிய நோக்கத்தோடு தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் ஒயாது, ஒழியாது தனது கடமைகளைச் செய்தவர். தனது நேரத்தை அதிகமாகத் தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கியவர். தமிழ் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடு பட்டவர்.
அவருடைய வாழ்க்கையே தமிழ், தமிழர் சார்ந்த வாழ்க்கை. அறம் சார்ந்த வாழ்க்கை.
அவரின் பிரிவு தமிழினத்திற்கு மாபெரும் இழப்பு. நமது சமூகம் மாபெரும் போராளியை இழந்து விட்டது.
அன்னாரின் குடும்பத்திற்கு நமது அழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
நேர்மை ஒன்றே அவரின் ஆயுதம். தமிழர், தமிழ் மொழி, தமிழ் சார்ந்த அனைத்திலும் அனைத்துமாக இருந்தவர். தொழில் மட்டுமே பிரதானம் என்று இருந்திருந்தால் மலேசிய கோடீஸ்வரர்கள் வரிசையில் அவரும் ஒருவராக இருந்திருப்பார். அவர் தமிழ் என்னும் வட்டத்திற்குள் சுழன்றவர். அதனால் அவர் பொருளாதார ரீதியில் இழந்தவை ஏராளம். ஆளும் தரப்பினால் ஒதுக்கப்பட்டவர்.
ஆனாலும் அவர் எதற்கும் கலங்கியவர் அல்ல. "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்னும் உயரிய நோக்கத்தோடு தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் ஒயாது, ஒழியாது தனது கடமைகளைச் செய்தவர். தனது நேரத்தை அதிகமாகத் தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கியவர். தமிழ் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடு பட்டவர்.
அவருடைய வாழ்க்கையே தமிழ், தமிழர் சார்ந்த வாழ்க்கை. அறம் சார்ந்த வாழ்க்கை.
அவரின் பிரிவு தமிழினத்திற்கு மாபெரும் இழப்பு. நமது சமூகம் மாபெரும் போராளியை இழந்து விட்டது.
அன்னாரின் குடும்பத்திற்கு நமது அழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
துணைக் கல்வி அமைச்சருக்கு ஒரு வேண்டுகோள்
துணைக் கல்வி அமைச்சர், ப.கமலநாதனுக்கு ஒரு வேண்டுகோள்.
இன்றைய நிலையில் தமிழ்க்கல்விக்கு முதல் எதிரி நீங்கள் எனலாம் அல்லது முதல் இடையூறும் நீங்கள் தான் எனலாம். உங்களின் பதவி என்பதே தமிழை சார்ந்த ஒரு பதவி. அந்தத் தமிழ்க்கல்வி இல்லை என்றால் நீங்களும் இல்லை. உங்களின் பதவி என்பதே மக்கள் போட்ட பிச்சை என்பதை நீங்கள் அறிய வேண்டும். அதுவும் குறிப்பாக, உங்களின் உயரத்திற்கு, இந்தியர்களின் பங்கு அதிகம்.
நீங்கள் பதவிக்கு வந்த பின்னர் உங்கள் தவறு என்ன என்பதை ஊடகங்கள் சுட்டிக்காட்டத்தான் செய்கின்றன.நல்லது நடக்கும் போது பாராட்டவும் செய்கின்றன. இது இப்படித்தான் நடக்க வேண்டும்.
ஆனால் நமது தாய் மொழி என்கின்ற போது நாங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்னும் அவசியமே இல்லை. யாரும் உங்களுக்கு புத்தி சொல்ல வேண்டும் என்னும் அவசியமும் இல்லை. காரணம் நீங்களும் தமிழர் தானே. தமிழ் படித்தவர் தானே. உங்களுக்கும் தமிழினம், தமிழ் மொழி என்று வரும் போது - அந்த இனப்பற்று, அந்த மொழிப்பற்று - என்பதெல்லாம் இயற்கையாக உண்டு என்று நாங்கள் நம்பினால் தவறில்லையே!
ஆனாலும் உங்களுக்கு அந்த இனப்பற்று, மொழிப்பற்று என்பது உண்டா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறதே. உங்களின் நடவடிக்கைகள் நமது இனத்திற்கும், நமது மொழிக்கும் பாதகத்தைத் தான் உண்டாக்குகின்றன என்பதை நாங்கள் சுட்டிக் காட்டத்தான் வேண்டுமா?
எங்களைப் போன்ற வாக்காளர்கள் தான் உங்களுக்கு எஜமானர்கள். எங்களுக்கும் எங்கள் மொழிக்கும் ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் நீங்கள் தான் முன் நின்று எங்களைக் காப்பாற்ற வேண்டும். ஆனால் நீங்களோ கல்வி அமைச்சுக்கு உங்களின் எஜமான விசுவாசத்தைக் காட்டுவது சரியாக இல்லையே! அவர்களின் மூலம் உங்களுக்குச் சில ரொட்டித் துண்டுகள் கிடைக்கலாம். அதற்காக இனத் துரோகி என்று பெயர் எடுப்பது எவ்வளவு கேவலம் என்பதை உங்களின் முன்னாள் தலைவரின் இன்றைய நிலையை வைத்தே நீங்களே முடிவு செய்யலாம். மக்களை ஏமாற்றுபவர்கள், ஏமாற்றியவர்கள் நிம்மதியாக வாழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை.
அந்த இனத் துரோகி என்னும் பட்டம் உங்களுக்கு வேண்டாம். மக்கள் சேவைக்காக வந்தீர்கள். அந்தச் சேவையை சிறப்பாகச் செய்யுங்கள். எங்களின் தாய்மொழியை - உங்களின் தாய்மொழியும் கூட - அந்த மொழியை ஒழிப்பதற்கு நீங்கள் காரணமாக இருக்காதீர்கள். இன்றைய நிலையில் நீங்கள் காரணமாக இருக்கிறீர்கள் என அறியும் போது மனம் வேதனை அடைகிறது.
இப்படி ஒரு நிலைமை உங்களுக்கு வேண்டாமே என்பதே எங்களது வேண்டுகோள். வாழ்க தமிழ்! வாழ்க தமிழினம்!
Tuesday, 22 August 2017
மலாக்க முத்துக்கிருஷ்ணன் தாக்கப்பட்டார்
காலையில் இணையத்தளத்தில் படித்த முதல் செய்தியே "மலாக்கா முத்துக்கிருஷ்ணன் அராஜகமாகத் தாக்கப்பட்டார்" என்னும் செம்பருத்தி இதழில் வெளியான செய்திதான். மிகவும் அதிர்ச்சியான செய்தி; அதிர்ந்து போனேன்.
நான் வாங்கும் ஒரு தமிழ்ப்பத்திரிக்கையை பார்த்தேன். இந்தச் செய்தியே வரவில்லை! அங்கும் ஒரு அரசியல்!
நண்பர் முத்துக்கிருஷ்ணனின் இணைய தளத்தை அடிக்கடி வலம் வருபவன் நான். அவரது இணைய தளத்தில் பல அரிய கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. நிறைய ஆராய்ச்சிகள் செய்து எழுதுபவர். பல சரித்திரத் தகவல்களை அங்கிருந்து தான் நாம் பெற வேண்டும். அந்த அளவுக்கு ஆராய்ச்சிகள் செய்திருப்பவர்; செய்கின்றவர். இதெல்லாம் சாதாரண வேலையல்ல. அதற்குக் கடும் உழைப்பு வேண்டும். இந்த வயதிலும் (69 வயது) அவரின் உழைப்பு நம்மை வியக்க வைக்கிறது.
தமிழ் மலரில் அவர் எழுதிய கட்டுரைகளுக்காக அவர் தாக்கப்பட்டார் என்பதாக செய்திகள் கூறுகின்றன. அந்தச் செய்திகள் அனைத்தும் அரசாங்கத்தைத் தாக்கி ஏழுதப்படுகின்ற செய்திகள் எனக் கூறப்பட்டாலும் ம.இ.கா. வினரே இதற்குக் காரணமானவர்கள் என்பதாகக் கருதப்படுகின்றது. காரணம் ஒரு தமிழ்ப் பத்திரிக்கையாளனைத் தாக்குவதற்கு ஒரு அம்னோ, ம.சீ.ச. போன்ற கட்சிகளிலிருந்து யாரும் வரப்போவதில்லை! அது ம.இ.கா. தான். தேர்தல் நெருங்குகிற காலத்தில் ம.இ.கா.வினர் தங்களின் மூளையைப் பலப்படுத்தாமல் தங்களது முஷ்டியைப் பயன் படுத்துகின்றனர்!
ஏன் இந்த நிலை? ஒன்றுமில்லை! நாங்கள் தான் இந்தியர்களைப் பிரதிநிதிக்கிறோம் என்று சொன்னால் மட்டும் போதுமா? தங்களுடைய சேவைகளில் அதனைக் காட்ட வேண்டாமா! சேவை தேவை இல்லை என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் தேவை இல்லை என்று மக்களும் நினைக்கலாம் அல்லவா! அது தான் நடந்து கொண்டிருக்கிறது! சேவை என்று சொல்ல அவர்களிடம் ஒன்றுமில்லை. வெறும் அறிக்கைகளும் இந்தியர்களை மேம்படுத்த பெரிய பெரிய திட்டங்களும் வெற்று அறிக்கைகளாகவே இருக்கின்றனவே தவிர இவைகள் நடப்புக்கு வரும் என்பதற்கு எந்த உறுதிமொழியும் இல்லை!
இந்த நிலையில் ம.இ.கா.வினர் தங்களது இளைஞர் பகுதியை குண்டர்களாக புத்தாக்கம் செய்திருக்கின்றனர். சமீபத்தில் ஹின்ராஃ தலைவர் வேதமூர்த்தியை அலுவலகம் புகுந்து தாக்கியிருக்கின்றனர். இப்போது ஒரு பத்திரிக்கையாளரான முத்துக்கிருஷ்ணன் தாக்கப்பட்டிருக்கிறார். அதுவும் ஒர் உணவகத்தில்; நாலு பேர் கூடும் இடத்தில். அப்படி என்றால் காவல்துறை அவர்களுக்குத் துணை நிற்கிறது என்னும் துணிச்சலும் இருக்கலாம் அல்லவா!
உண்மையாளர்களைத் தாக்கலாம்! ஆனால் நீங்கள் தகர்க்கப்படுவீர்கள் என்பதும் உண்மை!
நண்பர் முத்துக்கிருஷ்ணனின் இணைய தளத்தை அடிக்கடி வலம் வருபவன் நான். அவரது இணைய தளத்தில் பல அரிய கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன. நிறைய ஆராய்ச்சிகள் செய்து எழுதுபவர். பல சரித்திரத் தகவல்களை அங்கிருந்து தான் நாம் பெற வேண்டும். அந்த அளவுக்கு ஆராய்ச்சிகள் செய்திருப்பவர்; செய்கின்றவர். இதெல்லாம் சாதாரண வேலையல்ல. அதற்குக் கடும் உழைப்பு வேண்டும். இந்த வயதிலும் (69 வயது) அவரின் உழைப்பு நம்மை வியக்க வைக்கிறது.
தமிழ் மலரில் அவர் எழுதிய கட்டுரைகளுக்காக அவர் தாக்கப்பட்டார் என்பதாக செய்திகள் கூறுகின்றன. அந்தச் செய்திகள் அனைத்தும் அரசாங்கத்தைத் தாக்கி ஏழுதப்படுகின்ற செய்திகள் எனக் கூறப்பட்டாலும் ம.இ.கா. வினரே இதற்குக் காரணமானவர்கள் என்பதாகக் கருதப்படுகின்றது. காரணம் ஒரு தமிழ்ப் பத்திரிக்கையாளனைத் தாக்குவதற்கு ஒரு அம்னோ, ம.சீ.ச. போன்ற கட்சிகளிலிருந்து யாரும் வரப்போவதில்லை! அது ம.இ.கா. தான். தேர்தல் நெருங்குகிற காலத்தில் ம.இ.கா.வினர் தங்களின் மூளையைப் பலப்படுத்தாமல் தங்களது முஷ்டியைப் பயன் படுத்துகின்றனர்!
ஏன் இந்த நிலை? ஒன்றுமில்லை! நாங்கள் தான் இந்தியர்களைப் பிரதிநிதிக்கிறோம் என்று சொன்னால் மட்டும் போதுமா? தங்களுடைய சேவைகளில் அதனைக் காட்ட வேண்டாமா! சேவை தேவை இல்லை என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் தேவை இல்லை என்று மக்களும் நினைக்கலாம் அல்லவா! அது தான் நடந்து கொண்டிருக்கிறது! சேவை என்று சொல்ல அவர்களிடம் ஒன்றுமில்லை. வெறும் அறிக்கைகளும் இந்தியர்களை மேம்படுத்த பெரிய பெரிய திட்டங்களும் வெற்று அறிக்கைகளாகவே இருக்கின்றனவே தவிர இவைகள் நடப்புக்கு வரும் என்பதற்கு எந்த உறுதிமொழியும் இல்லை!
இந்த நிலையில் ம.இ.கா.வினர் தங்களது இளைஞர் பகுதியை குண்டர்களாக புத்தாக்கம் செய்திருக்கின்றனர். சமீபத்தில் ஹின்ராஃ தலைவர் வேதமூர்த்தியை அலுவலகம் புகுந்து தாக்கியிருக்கின்றனர். இப்போது ஒரு பத்திரிக்கையாளரான முத்துக்கிருஷ்ணன் தாக்கப்பட்டிருக்கிறார். அதுவும் ஒர் உணவகத்தில்; நாலு பேர் கூடும் இடத்தில். அப்படி என்றால் காவல்துறை அவர்களுக்குத் துணை நிற்கிறது என்னும் துணிச்சலும் இருக்கலாம் அல்லவா!
உண்மையாளர்களைத் தாக்கலாம்! ஆனால் நீங்கள் தகர்க்கப்படுவீர்கள் என்பதும் உண்மை!
Monday, 21 August 2017
கேள்வி - பதில் (59)
கேள்வி
ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று எடுத்துக் கொள்ளலாமா?
பதில்
தமிழருவி மணியன் உறுதியாகச் சொல்லுகிறார். ரஜினி இன்னும் உறுதிப் படுத்தவில்லை. ஆனாலும் தமிழருவி சொல்லுவதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். தமிழருவி மணியன் ஏமாறுபவர் அல்ல. அவர் சொல்லுவதில் உண்மை இருக்கும்.
என்னைப் போன்றவர்கள் ஒரு தமிழர் தான் தமிழ் நட்டை ஆள வேண்டும் என்று நினைக்கிறோம். அது நடக்க வேண்டும் என்றால் முதலில் திராவிடக் கட்சிகளை ஒழிக்க வேண்டும். அதுவும் அவ்வளவு சுலபமல்ல.
நாங்கள், நாம் தமிழர் கட்சி பதவிக்கு வர வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் வருகின்ற தேர்தலில் அவர்களால் ஆட்சி அமைக்க முடியுமா என்னும் ஐயமும் எழுகிறது. ஒரு சில இடங்கள் கிடைத்தால் கூட அதுவே அவர்களுக்கு ஒரு பெரிய வெற்றி. காரணம் தமிழக மக்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மாறுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. ஐம்பது ஆண்டுகள் அவர்கள் அப்படியே பழக்கப்படுத்தப்பட்டு விட்டார்கள்! மாறுவது மிகவும் சிரமம். நாம் தமிழர் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு இன்னும் வளரவில்லை. இவர்களால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்றால் அது தி.மு.க. வுக்குத் தான் சாதகமாக அமையும். மீண்டும் திராவிடக் கட்சிகள் தான் ஆட்சி அமைக்கும்.
தமிழருவி மணியன் திராவிடக் கட்சிகள் ஒழிய வேண்டும் என்கிறார். நாமும் அதைத்தான் சொல்லுகிறோம். திராவிடக் கட்சிகளை ஒழிக்க இன்றைய நிலையில் எந்தக் கட்சியும் வலிமை பெற்றிருக்க வில்லை.
ரஜினி ஒருவரால் தான் திராவிடக் கட்சிகளை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட முடியும். வேறு யாராலும் அது முடியாத வேலை என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
ரஜினி வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னாலும் இன்றைய நிலையில் வேறு மாற்று இல்லை. அவர் தான் வந்தாக வேண்டும். தமிழருவி, ரஜினியோடு கை கோக்கிறார் என்றால் அது நல்லதாகத்தான் அமையும். ரஜினியின் மூலம் தற்காலிகமாவது தமிழகத்துக்கு நல்லது நடக்கும் என நம்பலாம்.
வேறு மாற்று இல்லை என்கிற போது ரஜினி அரசியலுக்கு வரட்டுமே! நல்லதே நடக்கட்டும்! நாமும் வாழ்த்துவோம்!
ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று எடுத்துக் கொள்ளலாமா?
பதில்
தமிழருவி மணியன் உறுதியாகச் சொல்லுகிறார். ரஜினி இன்னும் உறுதிப் படுத்தவில்லை. ஆனாலும் தமிழருவி சொல்லுவதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். தமிழருவி மணியன் ஏமாறுபவர் அல்ல. அவர் சொல்லுவதில் உண்மை இருக்கும்.
என்னைப் போன்றவர்கள் ஒரு தமிழர் தான் தமிழ் நட்டை ஆள வேண்டும் என்று நினைக்கிறோம். அது நடக்க வேண்டும் என்றால் முதலில் திராவிடக் கட்சிகளை ஒழிக்க வேண்டும். அதுவும் அவ்வளவு சுலபமல்ல.
நாங்கள், நாம் தமிழர் கட்சி பதவிக்கு வர வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் வருகின்ற தேர்தலில் அவர்களால் ஆட்சி அமைக்க முடியுமா என்னும் ஐயமும் எழுகிறது. ஒரு சில இடங்கள் கிடைத்தால் கூட அதுவே அவர்களுக்கு ஒரு பெரிய வெற்றி. காரணம் தமிழக மக்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மாறுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. ஐம்பது ஆண்டுகள் அவர்கள் அப்படியே பழக்கப்படுத்தப்பட்டு விட்டார்கள்! மாறுவது மிகவும் சிரமம். நாம் தமிழர் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு இன்னும் வளரவில்லை. இவர்களால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்றால் அது தி.மு.க. வுக்குத் தான் சாதகமாக அமையும். மீண்டும் திராவிடக் கட்சிகள் தான் ஆட்சி அமைக்கும்.
தமிழருவி மணியன் திராவிடக் கட்சிகள் ஒழிய வேண்டும் என்கிறார். நாமும் அதைத்தான் சொல்லுகிறோம். திராவிடக் கட்சிகளை ஒழிக்க இன்றைய நிலையில் எந்தக் கட்சியும் வலிமை பெற்றிருக்க வில்லை.
ரஜினி ஒருவரால் தான் திராவிடக் கட்சிகளை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட முடியும். வேறு யாராலும் அது முடியாத வேலை என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
ரஜினி வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னாலும் இன்றைய நிலையில் வேறு மாற்று இல்லை. அவர் தான் வந்தாக வேண்டும். தமிழருவி, ரஜினியோடு கை கோக்கிறார் என்றால் அது நல்லதாகத்தான் அமையும். ரஜினியின் மூலம் தற்காலிகமாவது தமிழகத்துக்கு நல்லது நடக்கும் என நம்பலாம்.
வேறு மாற்று இல்லை என்கிற போது ரஜினி அரசியலுக்கு வரட்டுமே! நல்லதே நடக்கட்டும்! நாமும் வாழ்த்துவோம்!
Sunday, 20 August 2017
மீண்டும் 'பளீர்'!
மீண்டும் பளீர்! கன்னத்தில் அறைந்தது போலத் தான் இருந்தது! இந்திரா காந்தி எத்தனை ஆண்டுகளாக இந்தச் சட்டத் திருத்தத்திற்காக காத்துக் கொண்டிருந்தார். சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போன அவரது கணவர் செய்த துரோகத்திற்காக ...இப்படி....முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருந்தால்....?
கணவர் இஸ்லாத்தில் சேர்ந்தார். அது அவரது உரிமை. மனைவி இன்னும் இந்துவாகவே இருக்கிறார். போகிற போக்கில் கணவர் தனது அனைத்து இந்துப் பிள்ளைகளையும் இஸ்லாம் மதத்திற்கு மதம் மாற்றிவிட்டார்! கடைசி குழந்தை அவரோடு வளர்ந்து வருகிறார். குழந்தை இப்போது பள்ளி போகிறாள். ஆனால் அவர் எங்கிருக்கிறார் என்று காவல்துறை கண்டுபிடிக்க முடியவில்லை! மற்ற பிள்ளைகள் அனைவரும் இந்து அம்மாவிடம் முஸ்லிம் பெயருடன் இந்துவாக வாழ்ந்து வருகிறார்கள்! ஒரு தாய்க்கு இதைவிட என்ன கொடுமை நடக்க வேண்டும்? தாயோடு இருக்கிற பிள்ளைகளையாவது இந்நேரம் இந்துவாக பெயர் மாற்ற்ப்பட்டிருக்க வேண்டும். இந்த மாற்றத்திற்கெல்லாம் இஸ்லாமிய சட்டம் இடம் கொடுக்கிறது. ஆனால் நஜிப்பின் அரசாங்கம் தடையாக இருக்கிறது!
இது போன்ற ஒரு தலைப்பட்ச மத மாற்றத்தை தடை செய்யும் வகையில் ஒரு சட்டத் திருத்தம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும். கடந்த ஓராண்டுக்கு மேலாகவே இந்தச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தது. ஆனால் கடைசி நிமிடம் இந்த ஒரு தலைப்பட்ச மத மாற்ற சட்டத் திருத்தம் எந்தக் காரணமும் இல்லாமல் கைவிடப்பட்டது ஏன் என்று விளங்கவில்லை! இஸ்லாம் இதற்குத் தடையாக இல்லை. ஆனால் அரசாங்கம் தடையாக இருக்கிறது!
இது பற்றி பாஸ் கட்சியின் இஸ்லாமிய அறிஞர்கள் கூறும் போது இந்த ஒரு தலைப்பட்ச மதமாற்றம் என்பது சரிதான் என்கின்றனர். குடும்பங்கள் சிதறலாம்; நடுவீதிக்கும் வரலாம். அதற்கு அவர்கள் தயாராகத்தான் இருக்க வேண்டும் என்கின்றனர்.
இது போன்ற சம்பவங்களுக்கு நீதி கிடைக்குமா என்று பார்த்தால் .......கிடைக்காமலா போகும்...? பொறுத்திருப்போம்!
Saturday, 19 August 2017
வன்முறை ஆரம்பமா...?
தேர்தல் வரப்போகிறது என்றாலே ஆங்காங்கே ஒரு சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கும். சமீபத்தில் நடந்த இரு சம்பவங்கள் அதன் மணியோசையா என்று கணிக்க முடியவில்லை.
முன்னாள் பிரதமர் மகாதிர் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் அடிதடி அசம்பாவிதங்கள். இதற்குப் பின்னணியில் யாராக இருக்கக் கூடும் என்பதில் நமக்கு ஒரு கருத்து இருந்தாலும் காவல்துறை அதனை ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்க முடியாது. வழக்கம் போல அவர்களுக்கென்று சில நடைமுறைகளை அவர்கள் வைத்திருப்பார்கள்! அத்தோடு சரி!
அடுத்து ஹின்ராஃப் தலைவர் பி. வேதமூர்த்தி தனது அலுவலகத்திலேயே தாக்கப்பட்ட சம்பவம். அவர்களைப் தாக்கியவர்கள் திருடர்கள் அல்ல. ஆனாலும் அந்தச் சம்பவத்தில் வேதாவின் மனைவியும் தாக்கப்பட்டிருக்கிறார். அவர் அணிந்திருந்த நகைகளும், கைத்தொலைப்பேசியும் கொள்ளையடிக்கப் பட்டிருக்கின்றன. அது ஒரு கொள்ளைச் சம்பவம் போன்று தோன்றினாலும் அது கொள்ளைச் சம்பவம் அல்ல. அங்கு, அந்த இடத்தில் அரசியல் பேசப்பட்டிருக்கிறது! ஆக, இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் என்பது தெளிவு.
வேதாவைத் தாக்கியவர்கள், அவர் தொடர்ந்து அரசாங்கத்தைக் குறை கூறுவதை நிறுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். கழுத்திலும் கத்தியை வைத்து பயமுறுத்தியிருக்கிறார்கள். வேதா யாருக்காக அரசாங்கத்தைக் குறை கூறுகிறார்? குறிப்பாகச் சொல்லப்போனால் அவர் இந்தியர்களுக்காக மட்டுமே பேசுகின்ற ஓர் அரசியல்வாதி. இந்தியர்களின் நலன்கள் பாதிக்கப்படுகின்ற எல்லா விஷயங்களுக்கும் அவர் குரல் கொடுக்கிறார். இந்தியர்கள் எக்கேடு கெட்டால் உங்களுக்கென்ன, நீங்கள் ஏன் அவர்களைப் பற்றிப் பேச வேண்டும் என்று நினைப்பவர்கள் யாரோ அவர்கள் - அந்த அரசியல்வாதிகள் - தான் இதன் பின்னணியில் இருக்க வேண்டும். மலாய்க்காரர்களுக்கு இவரால் ஆகப் போவது ஒன்றுமில்லை! சீனர்களுக்கும் ஆகப் போவது ஒன்றுமில்லை! ஆக, இதன் பின்னணியில் இந்திய அரசியல் கட்சிகளைத் தவிர வேறு யார் இருக்கப் போகிறார்கள்?
தேர்தல் காலங்களில் பொதுவாக இந்தியர்கள் குண்டர்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகிறர்கள் என்பதை மறுக்க முடியாது. அதுவும் எதிர்கட்சியினருக்கு ஆதரவாகப் பேசுகிறவர்கள் ஆபத்துக்களை எதிர் நோக்குகிறார்கள். சென்ற தேர்தலின் போது எதிர்கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்ட வயதான ஒரு சிறிய வியாபாரியை "உன்னை மோட்டார் சைக்கிளோடு வைத்து எரித்து விடுவோம்!" என்று அவரைப் பயமுறுத்தியதை நான் அறிவேன். இப்படிப் பலர் பயமுறுத்தப் படுகின்றனர். அரசியல் ரீதியில் கையாளாகதவர்கள் என்று இவர்களை நாம் நினைத்தாலும் குண்டர் கும்பல்களுக்குத் தகுதியானவர்களாக இவர்கள் இருக்கிறார்கள்!
வன்முறை நமக்கு வேண்டாம்! நமது குறைகளை காது கொடுத்துக் கேட்க எந்த அரசியல்வாதிகள் தயாரோ இருக்கிறார்களோ அவர்களை நாம் ஆதரிப்போம்!
Friday, 18 August 2017
உணவகத்தில் எலியின் உலா...!
எலிகளும் இப்போது மனிதர்களுடன் போட்டிப் போட ஆரம்பித்து விட்டன! குப்பைகளையே குழப்பிக் கொண்டிருந்த எலிகள் இப்போது தங்களைத் தாங்களே உயர்த்திக் கொண்டு, செவன் லெவன், உணவகங்கள், மருத்துவமனைகள் என்று சுழன்று கொண்டிருக்கின்றன!
கடைசியாக கிடைத்த செய்தியின் படி, கிள்ளான் துங்கு அம்ப்புவான் ரகிமா மருத்துவமனையின் உள்ள உணவகத்தில் எலி பலே கில்லாடித்தானம் செய்வதை சமூக வலைத் தளங்களில் பரபரப்பாக கலக்கிக் கொண்டிருக்கின்றது!
மருத்துவமனை உணவகங்களில் நோயாளிகளும் சாப்பிடுகிறார்கள்; நோயாளிகளைப் பார்க்க வருகின்ற வருகையாளர்களும் சாப்பிடுகிறார்கள். இந்த எலியார் செய்கின்ற வேலையைப் பார்க்கின்ற போது நோயாளிகளின் நோயை அதிகரிக்கவும், நோயற்றவர்களை நோயுற்றவர்களை ஆக்கவும் மருத்துவமனை ஏதோ எலிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது போல தோற்றம் அளிக்கிறது!
எலிகள் மருத்துவமனையின் உணவகத்தில் மட்டும் அல்ல மருத்துவமனையின் உள்ளும் உலா வருவதாக நோயாளிகள் கூறுகின்றனர். ஒரு சில நோயாளிகள் எலிகளின் மூலம் கடியும் பட்டிருக்கின்றனர் என்பதாக நோயாளிகளின்பக்கம் இருந்தும் செய்திகள் வருகின்றன!
மாவட்ட சுகாதார அலுவலகம் உணவகத்தை சுத்தம் செய்ய இரண்டு வார கால அவகாசம் உணவகத்திற்குக் கொடுத்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.
உணவகத்திற்கு மட்டும் தானா இந்த "சுத்தம்" என்பது நமக்குப் புரியவில்லை. மருத்துவமனையின் மற்ற பகுதிகளிலும் சுத்தம் பேணப்பட வேண்டும் ஏன்பதும் முக்கியம். சுத்தம் சுகம் தரும் என்பதை மருத்துவமனை ஊழியர்களுக்கும் மீண்டும் பாடம் நடத்தப்பட வேண்டும். ஒரு மருத்துவமனையே சுத்தத்தின் மீது இந்த அளவுக்கு அக்கறையற்று இருந்தால் நோயாளிகளின் நிலைமை என்ன ஆவது?
மேலே படத்தில் எலியார் நாம் சாப்பிடுவதற்கு முன்னர் முட்டைக்கோசை அவர் முதலில் ருசி பார்க்கிறார்! அப்புறம் தான் நமக்கு!
வாழ்க வளமுடன்!
Tuesday, 15 August 2017
கேள்வி - பதில் (58)
கேள்வி
கேரளாவில், சாலை விபத்தில் சிக்கிய ஒரு தமிழரை, தமிழன் என்பதால் சிகிச்சையளிக்க மருத்துவமனைகள் மறுத்துவிட்டனவாமே?
பதில்
அப்படித்தான் செய்திகள் கூறுகின்றன. இந்தச் செய்தியை நமது நாட்டின் இணைய இதழான "செம்பருத்தி" யைத் தவிர வேறு எங்கும் நான் படிக்கவில்லை. தமிழ் நாட்டில் கூட எந்த ஒரு பாதிப்பையும் இந்தச் செய்தி ஏற்படுத்தவில்லை!
சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டிலிருந்து சென்றிருந்த ஒரு ஐயப்ப பக்தர் மீது ஒரு காப்பிக்கடைக்காரர் சுடுநீர் ஊற்றியதாக ஒரு செய்தி வெளியாகியது. பிறகு அடுத்த நாளே அந்தச் செய்தி மறைக்கப்பட்டு விட்டது. அதே போல ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பின்னணிப் பாடகி, சித்ரா தீபாவளியன்று ஒரு மலையாளத் தொலைக்காட்சி பேட்டியில் ஒர் இந்தி பின்னணிப் பாடகி ஒருவர் மலையாளப் படத்தில் மலையாளப் பாட்டுப் பாடியாதால் அவர் அடித்த அதிரடி: இந்திப் பாடகி மலையாளப் படங்களில் மலையாளப் பாடல்கள் பாடினால் அது மலையாளப் பாடகர்களின் வாய்ப்புக்களைப் பறிப்பது ஆகாதோ? என்று கோபப்பட்டுப் பேசினார்! அந்தச் செய்தி வந்த அடுத்த நிமிடமே மறைந்து போனது!
ஆக, தமிழர் நலனுக்கு எதிராக வரும் எந்தச் செய்தியும் தமிழ் நாட்டு ஊடகங்களில் உடனடியாக நீக்கப்பட்டு விடுவதும், அது பற்றி வாய்த் திறப்பாமல் இருப்பதும் நீண்ட நாள்களாக ஒரு சம்பிரதாயமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது! தொலைக்காட்சிகளில் அனுதினமும் விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆனால் தமிழன் ஒருவனுக்கு எந்தவித சிகிச்சையும் அளிக்காமல் அவனைச் சாகடித்தார்களே அதனைப் பற்றி ஏன் விவாதம் செய்யக்கூடாது? ஒர் ஐயப்ப பக்தரின் மேல் சுடுநீர் ஊற்றினார்களே அதனைப்பற்றி ஏன் விவாதிக்கக்கூடாது? சித்திரா அம்மா பேசினார்களே - எத்தனை தமிழனின் வாய்ப்புக்கள் பறிக்கப்படுகின்றன - அதனை ஓரு ஏன் விவாதமாகப் பொருளாக எடுத்துக் கொள்ளக் கூடாது? ஆனால் ஒரு ஊடகமும் இவைகளைப் பற்றி வாய்த் திறப்பதில்லை! ஆனால் பிரச்சனைகள் வரும் போது ஒவ்வொரு தொலைக்காட்சியும் தமிழர்களைத் திசைத் திருப்ப உடனடியாக சினிமா செய்திகளைப் போட்டு அவர்களைச் சிந்திக்க விடாமல் செய்து விடுகின்றன! இப்போது கண்முன்னே உள்ள விவசாயிகளின் பிரச்சனை, நெடுவாசல் பிரச்சனை - எதுவுமே ஊடகங்கள் ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்ளவில்லை! அவர்களைப் பொறுத்தவரை தமிழகம் சிங்கப்பூர் மாதிரி மாறிவிட்டது! அது போதும்!
ஆனால் ஏன் இந்த நிலை? ஊடகங்களில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் அதிகம் பேர் தமிழர் அல்லாதவரே! குறிப்பாக மலையாளிகளின் ஆதிக்கம் அதிகம். பொதுப் பிரச்சனைகளைப் பற்றி வாய் கிழிய பேசலாம் ஆனால் தமிழர்களின் நலன் சார்ந்த எந்தப் பிரச்சனையும் பேசக்கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள். ஊடகங்கள் மட்டும் அல்ல, சினிமாத் துறை, சின்னத்திரை - எதனை எடுத்தாலும் அவர்கள் தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்! தொலைக்காட்சி பாட்டுப் போட்டிகளில் கூட மலையாளிகள் தான் முதல் பரிசை அபகரித்துச் செல்லுகின்றனர்! அங்குள்ள நீதிபதிகள் கூட மலையாளிகள் தான்!
ஆக, தமிழர்களின் உரிமைகள் அனைத்தும் மலையாளிகளால் களவாடிச் செல்லப்படுகின்றன! அத்தனையும் தமிழன் இழந்து நிற்கிறான். ஆனால் அடிபட்ட ஒரு தமிழனுக்கு உதவி செய்ய கேரளாவில் எந்த ஒரு மலையாளியும் முன் வரவில்லை!
வந்தவனை வாழ வைப்பது எவ்வளவு பெரிய தீமையை ஏற்படுத்தும் என்பது இப்போது புரிகிறதா?
Monday, 14 August 2017
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை!
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை என்பதை அறியாதார் யார்? நாம் அனைவருமே அறிந்திருக்கிறோம். குறைந்த பட்சம் மற்றவர்களிடையே பேசும் போது இந்த வரிகள் நமக்குத் தேவைப்படுகிறது. மற்றபடி தாயை யாரும் சிறப்பாகவும் பார்ப்பதில்லை; கோவிலாகவும் பார்ப்பதில்லை! அதெல்லாம் இளமைற் காலத்தோடு சரி!
இப்படி சிறப்பாகவும், கோவிலாகவும் பார்ப்பவர்களில் "பிக் பாஸ்" காயத்ரி ரகுராமும் ஒருவர் எனத் தைரியமாக சொல்லலாம்.
நான் BIGG BOSS பார்ப்பதில்லை. ஆனால் இணையத்தை வலம் வரும்போது அடிக்கடி வந்து தொல்லை கொடுப்பதால் கொஞ்சம் நேரம் அந்தப் பக்கம் போவதுண்டு! அப்படி இடை இடையே பார்த்ததில் காயத்ரி ரகுராம், அம்மாவை மதிக்கும் மகளாக ஊர் அறிய ஊர்வலம் வருகிறார்!
"நான் யார் சொன்னாலும் கேட்கமாட்டேன். என் தாயார் சொன்னால் மட்டுமே கேட்பேன்!" என்பது அவரின் புகழ்பெற்ற வரிகள். ஒரு சிலர் சொல்லலாம்: ஏழு கழுதை வயசாச்சு இன்னுமா அம்மா பேச்சைத்தான் கேட்பேனு செல்லுற! ஆனால் அதனால் என்ன? ஏழு கழுதை என்ன எட்டுக் கழுதை வயசானாலும் அம்மாப் பேச்சைப் கேட்பது என்பது நல்ல பழக்கம் தானே. அவருக்கு மிஞ்சி மிஞ்சிப் போனால் இரண்டு, மூன்று கழுதை வயசு தானே இருக்கும்!
ஆனாலும் இந்த நேரத்தில் ஒன்றைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். "தாயிற் சிறந்த கோவிலும் இல்லை" என்று சொல்லுகிறோம் அல்லவா, அந்தத் சிறந்தத் தாயின், அந்தக் கோவிலைப் போன்ற தாயின் சொல்லைக் கேட்பது தான் சிறப்பிலும் சிறப்பு. அது தான் ஒரு பெண்ணுக்குச் சிறப்பைக் கொண்டு வரும்.
காயத்ரி ரகுராம் கூட அவரின் தாயின் சொற்படி தான் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பார் என நம்பலாம்! அந்த நிகழ்ச்சியில் அவரின் நடவடிக்கைகள் மக்களை முகம் சுளிக்க வைத்தது உண்மை. "சேரி பிகேவியர்" என்று அவர் கூறிய வார்த்தை மிகப் பிரபலம். தாயின் பிரதிபலிப்பாக இருக்கலாம்! அவர் அமெரிக்காவில் போய் குடியிருந்தார் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் அந்தச் சேரி பிகேவியர் அவர் அமெரிக்காவில் வாழ்ந்தும் கூட அவரிடமிருந்து போகவில்லை! தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பது இவர் மட்டில் அது உண்மை!
தமிழ் நாட்டுக்காரன் அமெரிக்கா போனால் என்ன, ஐரோப்பா போனால் என்ன, அம்மா எப்படி வளர்த்தாரோ அப்படித்தான் அவன் எங்குப் போனாலும் இருப்பான்! தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்று தாயும் உணர்ந்திருந்தால் இந்த "சேரி பிகேவியர்" எல்லாம் எங்கிருந்தாலும் வாயில் வராது! பண்பான வார்த்தைகளே வெளிப்படும்.
எப்படி இருந்தாலும் "தாயிற் சிறந்த கோவிலும் இல்லை" என்பது உண்மையிலும் உண்மை. அந்தப் போற்றுதலுக்கு உள்ள தாயை வணங்குவோம்!
Saturday, 12 August 2017
கேள்வி - பதில் (57)
கேள்வி
மோடி, தமிழர்களுக்கு எதிரானவரா?
பதில்
மோடி, இந்தியாவின் பிரதமர். அப்படியென்றால் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் அவர் தான் பிரதமர். தமிழ் நாட்டுக்கும் அவர் தான் பிரதமர்.
ஆனால் தமிழ் நாடு என்று வரும்போது பிரதமர் மோடி ஏனோ பாராமுகமாக இருக்கிறார் என்பதாகச் சொல்லப்படுகிறது. தமிழுக்கு, தமிழர்களுக்கு என்று ஏனோ அனைத்துக்கும் அவர் எதிர்ப்பாளராக இருக்கிறார் என்பதாக அவர் குறை கூறப்படுகின்றார்.
மீனவர் பிரச்சனையாகட்டும், நெடுவாசல் பிரச்சனையாகட்டும், தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் பிரச்சனையாகட்டும் நீட் பிரச்சனையாகட்டும், விவசாயிகள் பிரச்சனையாகட்டும் எந்தவொரு பிரச்சனையிலும் அவர் கண்டும் காணாதது போல், ஒரு பிரதமர் போல், அவர் நடந்து கொள்ளவில்லை என்பதாகத்தான் அவர் செயல்பாடுகள் காட்டுகின்றன. ஆனால் நாம் மோடியைக் குறைச் சொல்லுவதில் பயனில்லை. குறைச் சொல்ல வேண்டுமென்றால் தமிழ் நாட்டில் உள்ள பா.ஜ.க. தலைவர்களைத்தான் குறை சொல்ல வேண்டும். தமிழகத் தலைவர்கள் தான் பிரதமர் மோடிக்குத் தமிழ் நாட்டைப் பற்றி தவறானத் தகவல்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது. அனைத்துப் பிரச்சனைகளூம் இவர்களிடமிருந்து தான் அங்குக் கொண்டு செல்லப்படுகின்றது. பா.ஜ.க. தலைவர்களான சுப்பிரமணிய சுவாமி, எச்.ராஜா போன்றவர்கள் தமிழர்களுக்கு எதிரிகள் போலவே நடந்து கொள்ளுகின்றனர். அவர்களின் இந்துத்துவா பின்னணியும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்! அல்லது அவர்களின் பார்ப்பனியப் பின்னணியும் ஒரு காரணமாக இருக்கலாம்! இதில் தமிழிசையும் அடங்குவார். அவர்களின் செல்வாக்கை அதிகரிக்க தமிழர்களின் மேல் தாக்குதல்களை மேற்கொண்டிருப்பதாகவே நமக்குத் தோன்றுகிறது. இவர்களின் செல்வாக்கைப் பெருக்கிக்கொண்டு வருங்காலங்களில் கவர்னர், ஜனாதிபதி பதவிகளுக்கு இப்போதே இவர்கள் தங்களைத் தயார் செய்கின்றனர் என்பதாகவே நாம் எடுத்துக் கொள்ளலாம்!
ஆனால் நான் சொல்ல வந்த செய்தி இதுவல்ல. பிரதமரின் மோடி வெளிப்படையாக தமிழர்க்கும் தமிழுக்கும் எதிராகப் பேசாவிட்டாலும் மறைமுகமாக அவர் நிறையவே செய்கிறார் என்பதைத்தான் நான் சொல்லு வருகிறேன். தமிழுக்கும் அவர் விரோதியாகவே செயல்படுகிறார். சமீபத்தில் லண்டனில் நடபெற்ற ஏ.அர்.ரகுமானின் கலைநிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் கடல்கடந்தும் அவருடைய தூண்டுதல்களின் வாயிலாய் செயல்படுகிறார் என்று தான் சொல்ல வேண்டும்!
சிங்கப்பூரிலும் அவரது ஆதரவாளர்கள் மோடியின் செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழுக்குப் பதிலாக இந்தி மொழிக்கு முதலிடம் தர வேண்டும் என முயன்றதாகக் கூறப்படுகின்றது.
தமிழுக்கும் தமிழர்க்குமான விரோதப் போக்க அவர் கடைப்பிடிப்பதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தான் காரணம் என்று தாராளமாகச் சொல்லலாம்.
இப்போதைய நிலையில் பிரதமர் மோடி தமிழருக்கு எதிரானவராகவே தோற்றமளிக்கிறார்! இது மாறலாம்! அல்லது மாற்றப்படுவார்!
ஆனால் நான் சொல்ல வந்த செய்தி இதுவல்ல. பிரதமரின் மோடி வெளிப்படையாக தமிழர்க்கும் தமிழுக்கும் எதிராகப் பேசாவிட்டாலும் மறைமுகமாக அவர் நிறையவே செய்கிறார் என்பதைத்தான் நான் சொல்லு வருகிறேன். தமிழுக்கும் அவர் விரோதியாகவே செயல்படுகிறார். சமீபத்தில் லண்டனில் நடபெற்ற ஏ.அர்.ரகுமானின் கலைநிகழ்ச்சியில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் கடல்கடந்தும் அவருடைய தூண்டுதல்களின் வாயிலாய் செயல்படுகிறார் என்று தான் சொல்ல வேண்டும்!
சிங்கப்பூரிலும் அவரது ஆதரவாளர்கள் மோடியின் செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழுக்குப் பதிலாக இந்தி மொழிக்கு முதலிடம் தர வேண்டும் என முயன்றதாகக் கூறப்படுகின்றது.
தமிழுக்கும் தமிழர்க்குமான விரோதப் போக்க அவர் கடைப்பிடிப்பதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தான் காரணம் என்று தாராளமாகச் சொல்லலாம்.
இப்போதைய நிலையில் பிரதமர் மோடி தமிழருக்கு எதிரானவராகவே தோற்றமளிக்கிறார்! இது மாறலாம்! அல்லது மாற்றப்படுவார்!
Friday, 11 August 2017
தீவிரவாதத்தின் தொடக்கம் எனலாமா?
மலேசியாவில் தீவிரவாதம் 'பளிச்' என கண்களுக்குத் தெரியாவிட்டாலும் தீவிரவாதத்துக்கான தொடக்கம் ஆங்காங்கே ஒருசில அறிகுறிகள் மூலம் நமக்குத் தெரிய வருகின்றன. அதுவும் பள்ளிகள் தீவிரவாததிற்கான ஆரம்ப மையமாக செயல்பட ஆரம்பித்திருக்கின்றன என்பதைப் பார்க்கும் போது நம்மால் மகிழ்ச்சி அடைய முடியவில்லை.
ஏற்கனவே ஒரு தீவிரவாதி ஐ எஸ் ஐ எஸ் ஸோடு சேர்ந்து ஈரானில் உயிர் விட்ட கதை நமக்குத் தெரியும். அதுவும் தாக்குதலில் அல்ல; தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்! ஒன்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மலேசியாவில் உள்ளவர்களால் தீவிரவாதிகளாக செயல்பட முடியாது என்பது தான் உண்மை. காரணம் அது போன்ற சூழலில் நாம் வாழவில்லை.
ஆனாலும் நமது பள்ளிகள் தீவிரவாதத்தைத் தூண்டி விடுகின்ற ஒரு மையமாக செயல்படுவதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சமீபத்தில் ஒரு தொழிற்பள்ளியில் இந்தியர் ஒருவரால் நடத்தப்பட்ட ஓர் உணவகம் மூடப்பட்டது. ஏதேதோ காரணங்கள் சொன்னாலும் ஓர் இஸ்லாமியர் தான் உணவகம் நடத்த வேண்டும் என்பதே அந்தத் தொழிற்பள்ளியின் கொள்கை என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அப்படி என்றால் இந்தியர் மீதான ஒரு வெறுப்பை பள்ளி நிர்வாகம் தூண்டி விடுவதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்! மற்ற இனத்தவர் மீது வெறுப்பை ஏற்படுத்துவது என்பது தீவிரவாதம் தான்!
இப்போது இன்னொரு பள்ளியில் சிற்றுண்டியகத்தில் முஸ்லிம்-முஸ்லிம் அல்லாத மாணவர்கள் பயன்படுத்த தனித் தனியாக குவளைகள் வைத்திருப்பது அம்பலத்திற்கு வந்துள்ளது! இது போன்ற கேவலமான ஒரு நடவடிக்கையை இதுவரை நாம் கண்டதில்லை; கேட்டதில்லை! தீவிரவாதத்திற்கான ஓர் அடித்தளம் அமைக்கப்படுகின்றது என்பதே உண்மை. இதனை ஏதோ 'தற்செயலாக' என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது! இவைகளெல்லாம் திட்டமிட்ட நடவடிக்கைகள் என்பது தான் உண்மை! இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அல்லது சம்பந்தப்பட்ட ஆசிரியர், புக்கிட் அமான், தீவிரவாதப் பிரிவனரால் விசாரிக்கப்பட வேண்டும் என்பதே நமது
வேண்டுகோள்.
எல்லாம் ஆங்காங்கே சிறிய, சிறிய அளவில் பயங்கரவாத விதைகள் விதைக்கப்படுகின்றன என்பதை புக்கிட் அமான் உணர வேண்டும்.
இதில் ஓர் ஆச்சரியமான செய்தி என்னவெனில் மக்களிடையே, மாணவர்களிடையே வெறுப்புணர்ச்சியையும், பிரிவினையையும் இவர்களே ஏற்படுத்திவிட்டு கடைசியில் தாய்மொழிப் பள்ளிகளின் மேல் குற்றாம் சொல்லுவது இவர்களின் வாடிக்கையாகப் போய்விட்டது!
எது எப்படி இருப்பினும் தீவிரவாதத்தின் தொடக்கம் கண்ணுக்குத் தெரிகிறது. அது புக்கிட் அமானுக்கும் தெரிய வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்!
அஸ்லினா, நீங்கள் ஒருவரே ஆம்பிளை!
பிரதமர்துறை அமைச்சர், அஸ்லினா ஒஸ்மான் நல்லதொரு கருத்தைச் சொன்னார். அப்படி ஒரு கருத்தைச் சொல்ல துணிவு வேண்டும். இதுவரை எந்த ஒரு அமைச்சருக்கும் சொல்ல வராத, சொல்லப் பயந்த ஒரு கருத்தை தைரியமாகச் சொன்னார்.
ம.இ.கா. அமைச்சர்கள் வாய் திறப்பதில்லை, வழக்கம் போல! அவர்களைக் குற்றம் சொல்லுவதிலும் பயனில்லை. நான்கு பெண்டாடிட்காரர்கள் கருத்துச் சொல்லுவார்கள் என எதிர்பார்ப்பது மடமை!
அப்படி என்ன தான் சொன்னார்? "அவர்கள் தங்கள் குடும்பங்களை விட்டு விட்டு, தங்கள் மதங்களை விட்டு விட்டு ஒடி வரும் போது, அவர்களின் குடும்பத்தின் நலனையும் கவனத்தில் கொண்டு செயல் பட வேண்டும். தங்களை 'ஆம்பிளை' என்று நினைத்தால் முறையான மண விலக்குப் பெற்று இஸ்லாத்திற்கு வர வேண்டும். ஷரியா சட்டத்தைப் பயன்படுத்தி ஷரியா நீதிபதி பின்னால் போய் ஒளியக் கூடாது!"
இதனைத் தான் அஸ்லினா இஸ்லாத்திற்கு வரும் - தங்களை "ஆம்பிளே" என்று சொல்லிக்கொள்ளும் ஆண் பிள்ளைகளுக்கு விடுத்திருக்கும் சவால்! நாம் அவரை முழுவதுமாக ஆதரிக்கக் கடமைப் பட்டிருக்கிறோம். காரணம், நாமும் அதனைத் தான் காலங்காலமாக சொல்லி வருகிறோம்.
இந்த நேரத்தில் நாம் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தக் கருத்தை நாட்டில் உள்ள இஸ்லாமியத் தலைவர் யாரும் சொல்லவில்லை. இஸ்லாமிய அறிஞர்கள் யாரும் சொல்லவில்லை. இஸ்லாமிய இயக்கங்கள் சொல்லவில்லை. மத மாற்றத்தை ஏற்படுத்தி வரும் ஜாக்கிம் சொல்லவில்லை. பாஸ் கட்சி சொல்லவில்லை. அப்படி என்றால் என்ன அர்த்தம்? அவர்கள் சொல்லவில்லை என்றால் அவர்கள் ஏற்றுக்கொள்ள வில்லை என்பது தான் பொருள்! அப்படி என்றால் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? ஒருவர் இஸ்லாத்திற்கு வருவதற்கான தகுதி என்பது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் குடும்பம் பிரிவது என்பது ஏற்புடையதே. ஒருவர் இஸ்லாத்திற்கு வரும் போது அவர்கள் ஒன்பது பேர் அடங்கிய குடும்பம் நடு முச்சந்திக்கு வந்தாலும் அது அவர்களின் பாடு. அது மதம் மாறி வருபவரின் பிரச்சனை அல்ல. மண விலக்கு என்பது அவசியம் இல்லை. இப்படித் தான் அவர்கள் சிந்திக்கிறார்கள்.
இப்படி ஒரு சிந்தனை உள்ள இஸ்லாமிய சிந்தனையாளர்கள் மத்தியில், ஒரு அமைச்சர், துணிவாக தனது கருத்தைச் சொன்னது மிகவும் வரவேற்கத்தக்கது. ஒரு பெண் என்பதால் பெண்கள் மேல் அவருக்கு ஓர் அனுதாபம் இருக்கலாம். அது மட்டும் அல்ல. பொதுவாக இஸ்லாமியப் பெண்களின் அமைப்புக்கள் கூட அமைச்சர் அஸ்லினாவின் கருத்துக்களோடு ஒத்துப் போகின்றன. ஆனால் இஸ்லாமிய சமயத்தில் வழக்கம் போல் ஆண் ஆதிக்கம் அதிகம் என்பதால் பெண்களின் கருத்துக்கள் அலட்சியம் செய்யப்படுகின்றன.
எது எப்படி இருப்பினும் அமைச்சர் அஸ்லினாவின் துணிவான கருத்துக்களுக்குத் தலை வணங்குகிறோம்.
இறுதியாக, அஸ்லினா! நமது அமைச்சரவையில் இருக்கும் ஒரே ஆண்பிள்ளை நீங்கள் தான்! வாழ்க! வளர்க!
Tuesday, 8 August 2017
தொல்லைப் பேசி!
எல்லாக் காலங்களிலும், நமது நாட்டு "டெலிகம் மலேசியா" வை பொறுத்த வரையில் திருப்திகரமான தொலைப்பேசி சேவையைக் கொடுத்தார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை! அப்போதும் சரி, இப்போதும் சரி, அதே நிலைமை தான். நல்ல வேலை, கைப்பேசிகள் வந்த பிறகு அவர்களை மதிப்பார் யாருமில்லை!
என்னைப் போன்றோர் சிலர் இன்னும் அவர்களின் சேவையை பெற்றுக்கொண்டு தான் இருக்கிறோம். அதுவும் முக்கியமாக வீட்டில் கணினி இருப்பதால் அவர்களின் சேவை எங்களுக்குத் தேவைப்படுகிறது. அத்தோடு மட்டும் அல்லாமல் கைப்பேசிகளைப் பாவிக்க அவசியம் இல்லாத என்னைப் போன்றவர்களுக்கு ஏதோ ஓரிரு சமயங்களில் இந்தத் தொலைப்பேசிகளைத்தான் பயன்படுத்த வேண்டியுள்ளது.
அதற்கும் ஒரு இடையூறு வந்து விட்டது. கடந்த ஒரு மாதமாக தொலைப்பேசி வேலை செய்யவில்லை! சரி புகார் செய்யலாமென்றால் அங்கே தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. முன்பு, நேரடியாகத் தொலைப்பெசியிலேயே கூப்பிட்டு புகார் செய்ய முடியும். இப்போது அப்படி எல்லாம் செய்ய முடிவதில்லை. என்ன மொழி தெரியும் என்றெல்லாம் அவர்கள் கேட்பதில்லை. ஆங்கிலமா? மலாய் மொழியா? சீனமா? என்கிறார்கள்! தமிழ் மொழி அவர்கள் பட்டியலில் காணப்பட வில்லை! மற்ற மொழிகளில் பேசும் போது ஒரு சில வார்த்தைகள் விளங்குவதில்லை. அவை தொழில் நுட்பம் சார்ந்தவை. அதனால் தமிழில் பேசும் போது கொஞ்சம் அதிகமாகவே விளக்கம் கேட்கலாம். நம்மால் புரிந்து கொள்ள முடியும். அதனால் தான் தமிழ் பேசுபவர்களின் நலனுக்காக - நாட்டின் முக்கிய மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியிலும் விளக்கம் கொடுத்தால் நாமும் அவர்களின் சேவையைப் பயன் படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும். இரு முறை மலாய் மொழியில் தொடர்பு கொண்டு புகார் செய்தும் எதுவும் நடக்கவில்லை. அதற்கு மேல் என்ன செய்ய முடியும்? அவர்களைத் திட்டினாலும் 'அதுகளுக்கு' மண்டையில் எதுவும் ஏறப்போவதில்லை! ஆனால் மாதம் தவிறினாலும் அவர்களிடமிருந்து வரும் 'பில்' தவறுவதில்லை!
ஏதாவது கேட்டால் 'ஆள் பற்றாக்குறை' என்று சர்வ சாதாரணமாகச் சொல்லிவிட்டுப் போவார்கள்! நாட்டில் வேலை இல்லாதோர் கூடிக்கொண்டே போகிறார்கள். வங்காள தேசிகள் லட்சக்கணக்கில் நாட்டில் வாழுகின்றனர். ஆக, நாட்டில் வேலை இல்லாதோர் நிறையவே இருக்கின்றனர். அவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மீண்டும் மீண்டும் ஆள் பற்றக்குறை என்று சொல்லிக் கொண்டிருப்பது நிர்வாகத்தில் உள்ள கோளாறு என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால் அதைவிட முக்கியமானது முதலில் வேலை செய்பவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும்! டெலிகம் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் பலர் காப்பிக்கடைகளில் உடகார்ந்து கொண்டு அரட்டை அடிப்பதை நாம் பார்க்கலாம்! அப்படி என்றால் அவர்களுக்குப் போதுமான வேலை இல்லையென்று தானே அர்த்தம்? போதுமான வேலை இல்லாத ஒரு நிறுவனம் நிறைய வேலையாட்களை வைத்துக் கொண்டு, அவர்களுக்கு ஆயிரக்கணக்கில் அள்ளி அள்ளிக் கொடுத்தால் அந்த நிறுவனத்தில் இப்படித்தான் வேலை நடக்கும்!
இந்த நிறுவனம் தனியார் மயம் என்று சொல்லி சும்மா சிலரிடம் தூக்கிக் கொடுத்தால் அவர்கள் என்ன செய்வார்களோ, அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது!
ஆக, நமது நாட்டின் தொலைப்பேசி சேவை மக்களிடமிருந்து தொலைந்து தொலைவே போய்க் கொண்டிருக்கிறது!
இது தொலைப்பேசி சேவை அல்ல! தொல்லைப்பேசி சேவை!
Sunday, 6 August 2017
கேள்வி - பதில் (56)
கேள்வி
கமல்ஹாசன் ஏதோ ஒரு சில பிரச்சனைகளைப் பற்றியாவது பேசுகின்ற போது ரஜினி எதனைப் பற்றியும் பேசுவதோ, விமிர்சிப்பதோ ஒன்றுமில்லையே!
பதில்
உண்மை தான். அதற்காக கமல்ஹாசன் நல்ல அரசியல்வாதி, ரஜினி கெட்ட அரசியவாதி என்னும் முடிவுக்கு வந்து விட முடியாது. ஒவ்வொருவரின் குணாதிசயங்கள் வெவ்வேறு. கமல் வெளிப்படையாகப் பேசுகிறார். அப்படித்தான் பேசி அவருக்குப் பழக்கம். ரஜினி குறைவாகத்தான் பேசுவார். அது அவரது இயல்பு.
இன்னொன்றும் கருத்தில் கொள்ள வேண்டும். ரஜினி எதைப்பற்றி பேசினாலும் அதனை ஒரு விவாதப் பொருளாக்கி விடுகின்றனர், குறிப்பாக, தொலைக்காட்சி நிலையத்தினர்! உண்மையைச் சொல்லப் போனால் தேவையில்லாமல் ரஜினியை எட்டாத அளவுக்கு உயர்த்திக் கொண்டு போனவர்கள் தொலைக்காட்சியினர்கள் தாம்! அப்படி ஒன்றும் அவரின் கருத்துக்கள் விவாதம் செய்கின்ற அளவுக்கு ஒன்றுமில்லை! ஆனாலும் அவர் "சுப்பர் ஸ்டார்" என்கிற ஒன்றை வைத்துக் கொண்டு தொலைக்காட்சிகள் தங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்ளுகின்றன!
சமீபத்தில் ரஜினி "சிஸ்டம் சரியில்லை!" என்று ஒரு வார்த்தையைச் சொன்னாலும் சொன்னார் ..... அடாடா! அதனை ஏதோ சொல்லக்கூடாத ஒன்றைச் சொல்லிவிட்டது போல அந்தச் சொல்லை வைத்துக் கொண்டு அனைத்துத் தொலைக்காட்சி நிலையங்களும், இப்படியும் அப்படியும். ஒட்டியும் வெட்டியும், பெரிய அளவுக்கு விவாதமாக்கி விட்டனர்! பாக்கப் போனால் அவர் சொன்ன சொல்ல அப்படி ஒன்றும் விவாதம் செய்ய வேண்டிய பொருள் அல்ல! சிஸ்டம் சரியல்ல என்று எல்லாருக்குமே தெரியும்; திராவிட அரசியல்வாதிகளுக்கு மட்டும் தான் தெரியாது! இந்த வார்த்தையை வைத்துக் கொண்டு ஒரு மாதத்திற்கு இழு இழு என்று இழுத்துக் கொண்டு போயினர் தொலைக்காட்சியினர்!
ரஜினி பேசுகின்ற ஒவ்வொரு சொல்லும் விவாதமாகிப் போவதால் பொது இடங்களில் அவர் பேசுவதைத் தவிர்க்கிறார் என்று தாராளமாக நம்பலாம்! விவாதங்கள் சில சமயங்களில் தாக்கல்களமாகவும் இருக்கின்றன! சில சமயங்களில் தூக்கல்களாகவும் இருக்கின்றன! அவர் பேசாமல் இருந்தால் அதனையும் ஒரு விவாதப் பொருளாக்கி விடுகின்றனர்!
உண்மையைச் சொன்னால் இங்குக் குற்றவாளிகள் என்று யாரையும் சுட்ட வேண்டுமென்றால் அது தமிழ் தொலைக்காட்சியினர் தாம்! ரஜினியும் பேசுவார். இப்போதைக்கு அவர் மௌனமாக இருப்பதே நல்லது! நேரம் வரும் போது அவர் பேசித்தானாக வேண்டும்!
அது வரை கமல் பேசட்டும்! ரஜினி மௌனம் காக்கட்டும்!
முனைவர் கௌஷல் பன்வார்
சில செய்திகள் நம்மை அதிர வைக்கும்; அசர வைக்கும்; உந்துதலையும் கொடுக்கும்.
முனைவர் கௌஷல் பன்வாரைப் பற்றி படிக்கும் போது ஒரு பெண் எப்படி எல்லாத் தடைகளையும் மீறி, எல்லா முட்டுக் கட்டைகளையும் முறியடித்து, தடைக்கற்களையே படிக்கற்களாக மாற்றி அமைக்க முடியும் என்பதற்குச் சரியான எடுத்துக்காட்டு.
இந்தியா, ஹரியானா மாநிலத்தைச் சார்ந்தவர் கௌஷல் பன்வார். தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். தலித் என்றாலும் ஆகக் கடைசி - அடிமட்ட தலித். இவர்கள் தான் மனித மலம் அள்ளும் அடிமட்ட வேலையைச் செய்பவர்கள். தமிழ் நாட்டில் இவர்களை அருந்ததியர் என்பர். என்ன தான் அரசு சட்டம் கொண்டு வந்தாலும் சட்டத்தை அமலாக்கம் செய்பவர்களே இந்தச் சட்டங்களை எல்லாம் மீறி இந்த மனிதர்களைக் கீழ் நிலையிலேயே வைத்திருக்க விரும்புகின்றனர். இன்றும் அப்படியே!
கௌஷல் பன்வார் கொஞ்சம் வித்தியாசமான பெண். இளம் வயதிலேயே சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என விரும்பினார். அவருக்கே அதற்கான காரணம் தெரியவில்லை. விரும்பினார் அவ்வளவு தான். சமஸ்கிருதம், தெய்வ மொழி என்பது பார்ப்பனிரின் நம்பிக்கை. காஞ்சி சங்கரராச்சாரியார் தன்னுடைய வருகையாளர்களுடன் தமிழில் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அந்த வருகையாளர்கள் போன பின்னர் உடனடியாகப் போய் குளித்து விட்டு வருவாராம்! அப்படிப்பட்டவர்கள் பயன்படுத்தும் ஒரு மொழியை ஒரு தலித் படிப்பது என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாது. கௌஷலுக்கு அப்படி ஒரு எண்ணம் வந்ததே ஒரு சவால்..
தனது கிராமத்தில் பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் தனது உயர்கல்விக்கு, பல போராட்டங்களுக்குப் பின்னர் சமஸ்கிருதத்தைப் பாடமாக தேர்ந்து எடுத்தார் கௌஷல். கடைசியில் சமஸ்கிருத மொழியில் முனைவர் பட்டமும் பெற்றார். இப்போது சமஸ்கிருத பேராசிரியையாக பணி புரிகிறார்.
ஒரு சில விஷயங்களை முனைவர் கௌஷலின் வாழ்க்கையில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும். மிக மிக கீழ்மட்டத்தில் உள்ள ஒரு சமூகத்திலிருந்து வரும் ஒரு பெண்ணுக்கு யார், எவர் உந்துதல் சக்தியாக இருந்தது? அவருடைய தந்தையாரைத் தவிர வேறு எவரும் இல்லை. படிக்காத தந்தை, மலம் அள்ளும் அந்தத் தந்தை சொன்னவைகள் எல்லாம் வேத வாக்காக அவர் எடுத்துக் கொண்டார்:
"நீ தொடர்ந்து படி. எக்காரணத்தைக் கொண்டும் உனது கல்வியை நிறுத்தி விடாதே. கல்வியில் மிக மிக உயரே போ. உயர்ந்த சாதியினர் உன்னை - அவர்களின் வார்த்தைகளால் உன்னை - வறுத்தெடுப்பார்கள். கண்டு கொள்ளாதே! துளைத்து எடுப்பார்கள். துவண்டு விடாதே! உனது கல்வியை வைத்துத் தான் நீ அவர்களை திருப்பி அடிக்க முடியும்!"
அவர் தந்தை சொன்னவைகள் அனைத்தும் நடந்தன. கௌஷல் எந்த நேரத்திலும் தடுமாறவில்லை. அவமானங்களைத் தாங்கிக் கொண்டார். அவரின் தொடர் கல்வி என்பது யாரிடமும் கிடைத்த உதவி அல்ல. அனைத்தும் அவர் சம்பாதித்தவை. சாலைகளில் வேலை; வீடுகளில் வேலை; மலம் அள்ளும் வேலை. இப்படிச் சம்பாதித்துத் தான் அவரின் கல்வியை அவரால் தொடர முடிந்தது. இந்த வேலைகளுக்காக அவர் எந்த நேரத்திலும் வெட்கப்பட்டது கிடையாது. அவருடன் படிக்கும் மாணவிகளின் வீடுகளிலும் வேலைகள் செய்திருக்கிறார்; மலமும் அள்ளியிருக்கிறார். அப்படி என்றால் கல்லூரியில் அவருக்குக் கிடைத்த மரியாதை எப்படி இருந்திருக்கும் என்பதை கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.
சரி! இப்போது சமஸ்கிருதப் பேராசிரியை. இப்போது பழைய நிலையிலிருந்து மீண்டு விட்டாரா? இல்லை! இல்லை! இல்லை! இப்போதும் அவரைப் பார்த்து கேலி, கிண்டல் தொடரவே செய்கின்றன.
ஆனால் கௌஷலிடம் ஒரு நல்ல பழக்கம். எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.! கவலைப்பட்டு ஆகப்போவது ஒன்றுமில்லை. உயர்வர்க்கத்தினர் தங்களது 'பிடி'யை விடப்போவதில்லை. அவர்களை மறந்து விட்டு, அவர் சார்ந்த சமுகத்தை எப்படி உயர்த்தலாம் என்னும் பணியில் ஈடுபட்டிருக்கிறர். அது ஒரு குடிகார சமூகம். அவர்களைக் குற்றம் சொல்லுவதில் பயனில்லை. மலக்கழிவுகளை அள்ளும் சமூகம் அப்படித்தான் இருக்க முடியும். இளைஞர்களை மீட்டெடுக்க வேண்டும். அவர்களின் நல்வாழ்வுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். புத்தகங்கள் எழுதுகிறார். அனைத்தும் தலித்துகளின் முன்னேற்றத்திற்காக. அவரின் வாழ்க்கை இலட்சியம் என்பது தலித்துகளின் முன்னேற்றம் பற்றி மட்டுமே.
முடியாதது என்று எதுவும் இல்லை. அதைத்தான் முனைவர் கௌஷல் பன்வாரின் வாழ்க்கை நமக்குக் கொடுக்கும் பாடம்! "நமக்கும் கீழே இருப்பவர் கோடி!" அந்தக்கோடியிலும் இன்னும் கீழ்க் கோடியில் இருந்த ஒருவர் சாதனைப் படைக்கும் போது நம் அனைவராலும் முடியும்! முடியும்! முடியும்!
Friday, 4 August 2017
மகாதிர் த/பெ இஸ்கந்தார் குட்டி
முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் மீதான சில பரபரப்பான செய்திகள் வெளியாகிக் கொண்டிருப்பதால் நாமும் அவரைப் பற்றியான சில உண்மைச் செய்திகளை - அதுவும் அவருடைய இந்தியப் பின்னணியை - கொஞ்சம் ஆராய்வோம்.
மகாதிர் 1925 - ம் ஆண்டு பிறந்தவர். கெடா மாநிலத்தில், செபாராங் பேராக் என்னும் கிராமமே அவரின் சொந்த ஊர். பிறக்கும் போது அவர் வெறும் மகாதிர் தான். அவரின் தந்தையாரின் பெயர் வெறும் இஸ்கந்தார் குட்டி தான். இந்த குட்டி என்பது இந்தியாவின், கேரள மக்களிடையே பிரபலமான ஒரு பெயர். நம்மைச் சுற்றிப் பார்த்தால் ராமன் குட்டி, கிருஷ்ணன் குட்டி என்னும் பெயர்கள் உள்ளவர்களை இப்போதும் பார்க்கலாம். இஸ்கந்தார் குட்டி கேரளாவிலிருந்து வந்தவர். ஆசிரியராகப் பணி புரிந்தவர். இங்குள்ள மலாய்ப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவர். அவர்களுக்குப் பிறந்தவர் தான் மகாதிர்.
மகாதிர், தனது சீனியர் கேம்பிரிட்ஜ் கல்வியை முடித்த கையோடு சிங்கப்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மாணவனாக சேர்ந்தார். அவர் மாணவனாகச் சேர்ந்த போது அவர் தன்னை "இந்தியன்" என்பதாகவே அடையாளப் படுத்திக் கொண்டார். அதுவே இன்றளவும் அவரை இந்தியன் என்றே அவர்களின் பதிவுகளில் குறிக்கப் பட்டிருக்கிறது. ஒரு வேளை அவரின் தந்தையார் "இந்தியன்" என்னும் அடையாளத்தை இழக்க விரும்பாதவராக இருந்திருக்கலாம். அல்லது இப்போதைய நடைமுறை அப்போது இல்லாமல் இருந்திருக்கலாம். இரண்டுமே சாத்தியமே!
மகாதிர் 1962-ம் ஆண்டு தனது தந்தையார் இறந்த பின்னர் தனது "இந்தியன்" என்னும் அடயாளத்தை மாற்றி அமைத்தார். அவரின் தந்தையாரின் பெயரை முகமது பின் இஸ்கந்தார் ஆகவும் தனது பெயரை மகாதிர் பின் முகமது என்றும் தன்னை முழு மலாய்க்காரராக வெளி உலகிற்குக் காண்பிக்க ஆரம்பித்தார். அத்தோடு அவரின் இந்தியர் என்னும் பாரம்பரியமும் ஒரு முடிவுக்கு வந்தது.
இங்கு நாம் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். கேரள மக்கள் எல்லாக் காலங்களிலும் பிள்ளைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அதன் பயனாகத்தான் இஸ்கந்தார் குட்டி தனது மகன் மகாதிரை டாக்டர் ஆக்கினார். அவர் முகமது பின் இஸ்கந்தார் ஆக இருந்திருந்தால் இவர் டாக்டராக இருந்திருக்க வழியில்லை! பிரதமராகவும் ஆகியிருக்க மாட்டார்!
அது சரி, இவர் பிரதமராக இருந்த போது செய்த மாபெரும் குற்றம் என்ன? தன்னை மலாய்க்காரர் எனக் காட்டிக் கொள்ளுவதற்காக இந்திய சமுதாயத்தை படுகுழியில் தள்ளியவர். இந்தியர்களின் பொருளாதாரத்தை முற்றிலுமாக ஒழித்தவர். உயர்கல்விக் கூடங்களில் இந்திய மாணவர்களுக்கு இடம் தர மறுத்துவர். இவர் செய்த தவறுகளால் தான் இன்று இந்திய சம்தாயம் எல்லாத் துறைகளிலும் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இந்தியர்களின் அனைத்து உரிமைகளையும் மலாய் சமுதாயத்திற்குத் தாரை வார்த்துக் கொடுத்தவர்.
இது போதும்! வேறு என்ன சொல்ல? இவர் மகாதிர் பின் முகமதாக பிறக்காதது இந்தியர்களின் சாபக்கேடு!
Subscribe to:
Posts (Atom)