Thursday 31 August 2017

அறுபதாவது சுதந்திர தினம்


நம் நாடு இன்று அறுபதாவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.  முதலில் வாசகர்களுக்கு எனது சுதந்திர தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

ஏனோ, கடந்த காலங்களைப் பின் நோக்கிப் பார்க்கின்ற போது இருந்த மகிழ்ச்சியும், சந்தோஷமும் இப்போது       குறைந்திருப்பதாகவே  தோன்றுகிறது. பொதுவாக கடந்த காலங்களில் நமது  ஒவ்வொருடைய கார்களிலும் - வெளியே லோரிகளிலும் அனைத்து வாகனங்களிலும் - நமது தேசியக் கொடி கம்பீரமாகப் பறப்பதை நாம் மறந்திருக்க முடியாது. ஏன்? வீடுகளிலும் நாம் பறக்க விட்டிருப்போம்.

ஆனால், இப்போது அதெல்லாம் எங்கே போனாது? கார்களில் தேசியக் கொடி பறக்கவில்லை. வீடுகளிலும் குறைந்து போனது. ஆனால் இதெல்லாம் தவறு என்று நமக்குப் புரிகிறது. இன்பமோ, துன்பமோ, மனிதர்களுக்கு ஏற்ற இறக்கங்கள் வருவது போல, நாட்டுக்கும் நன்மைகள் தீமைகள் வரத்தான் செய்யும். அதனை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இது நமது நாடு. நமக்கான சுதந்திரம் இங்கு தான் உள்ளது. வேறு எங்கே போவது?

பிரச்சனை அதுவல்ல. நமது கோபம் எல்லாம் நம்மை ஆளும் அரசியல்வாதிகள் மீது தான். அவர்கள் நாட்டை  தவறான வழியில் வழி நடத்துகிறார்கள். அவர்கள் மீதான கோபத்தை நமது நாட்டின் மீது நாம் காண்பிக்கிறோம்.

விலைவாசிகள் ஏற்றம். பெட்ரோல் விலை ஏற்றம். காய்கறிகள் விலை ஏற்றம். மீன் விலைகள் ஏற்றம். வீட்டுக்குப் பயன் படுத்தும் பொருள்களின் விலைகள் ஏற்றம். குழைந்தைகளுக்குப் பால் வாங்கிக் கொடுக்க முடியாத ஏழைப் பெற்றோர். குழைந்தைக்குப் பால் வாங்கிக்கொடுக்க முடியாமல் தான் குடிக்கும் காப்பியையும், சோற்றையும் கொடுத்து குழந்தையின் வயிற்றை நிரப்பும் தாய்.

வேலை வாய்ப்புக்கள் குறைந்து போயின. படித்த பட்டதாரிகள் வேலை, வேலையென  அலைகின்றார்கள். ஏற்கனவே தொழிற்சாலைகள் ஆட்களைக் குறைக்கின்றன. இருக்கின்ற வாய்ப்புக்களை வங்காள தேசிகள் ஆக்கிரமிக்கின்றனர்.

நாட்டை வளமான நாடாக மாற்றுவதற்கு ஆளும் அரசியல்வாதிகளிடம் எந்தத் திட்டமும் இல்லை. கொள்ளையர்கள் செய்கின்ற வேலையை அரசியல்வாதிகள் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

இந்த நிலையில் சுதந்திர தினத்தின் சுவாசக் காற்றை எப்படி அனுபவிப்பது?  ஆனாலும் நம்பிக்கையோடு இருப்போம். நாடு நமதே! நாளையும் நமதே! வாழ்க மலேசியா! 

No comments:

Post a Comment