Sunday 6 August 2017

கேள்வி - பதில் (56)


கேள்வி

கமல்ஹாசன் ஏதோ ஒரு சில பிரச்சனைகளைப் பற்றியாவது பேசுகின்ற போது ரஜினி எதனைப் பற்றியும் பேசுவதோ, விமிர்சிப்பதோ ஒன்றுமில்லையே!

பதில்

உண்மை தான்.  அதற்காக கமல்ஹாசன் நல்ல அரசியல்வாதி, ரஜினி கெட்ட அரசியவாதி என்னும் முடிவுக்கு வந்து விட முடியாது. ஒவ்வொருவரின் குணாதிசயங்கள் வெவ்வேறு. கமல் வெளிப்படையாகப் பேசுகிறார். அப்படித்தான் பேசி அவருக்குப் பழக்கம். ரஜினி குறைவாகத்தான் பேசுவார். அது அவரது இயல்பு.

இன்னொன்றும் கருத்தில் கொள்ள வேண்டும். ரஜினி எதைப்பற்றி பேசினாலும் அதனை ஒரு விவாதப் பொருளாக்கி விடுகின்றனர், குறிப்பாக,  தொலைக்காட்சி நிலையத்தினர்! உண்மையைச் சொல்லப் போனால் தேவையில்லாமல் ரஜினியை எட்டாத அளவுக்கு உயர்த்திக் கொண்டு போனவர்கள் தொலைக்காட்சியினர்கள் தாம்! அப்படி ஒன்றும் அவரின் கருத்துக்கள் விவாதம் செய்கின்ற அளவுக்கு ஒன்றுமில்லை! ஆனாலும் அவர் "சுப்பர் ஸ்டார்" என்கிற ஒன்றை வைத்துக் கொண்டு தொலைக்காட்சிகள் தங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்ளுகின்றன!

சமீபத்தில் ரஜினி "சிஸ்டம் சரியில்லை!" என்று ஒரு வார்த்தையைச் சொன்னாலும் சொன்னார்  ..... அடாடா! அதனை ஏதோ சொல்லக்கூடாத ஒன்றைச் சொல்லிவிட்டது போல அந்தச் சொல்லை வைத்துக் கொண்டு அனைத்துத் தொலைக்காட்சி நிலையங்களும், இப்படியும் அப்படியும். ஒட்டியும் வெட்டியும், பெரிய அளவுக்கு விவாதமாக்கி விட்டனர்! பாக்கப் போனால் அவர் சொன்ன சொல்ல அப்படி ஒன்றும் விவாதம் செய்ய வேண்டிய பொருள் அல்ல! சிஸ்டம் சரியல்ல என்று எல்லாருக்குமே தெரியும்; திராவிட  அரசியல்வாதிகளுக்கு மட்டும் தான் தெரியாது!  இந்த வார்த்தையை வைத்துக் கொண்டு  ஒரு மாதத்திற்கு இழு இழு என்று இழுத்துக் கொண்டு போயினர் தொலைக்காட்சியினர்!

ரஜினி பேசுகின்ற ஒவ்வொரு சொல்லும் விவாதமாகிப் போவதால் பொது இடங்களில் அவர் பேசுவதைத் தவிர்க்கிறார் என்று தாராளமாக நம்பலாம்! விவாதங்கள் சில சமயங்களில் தாக்கல்களமாகவும் இருக்கின்றன! சில சமயங்களில் தூக்கல்களாகவும் இருக்கின்றன! அவர் பேசாமல் இருந்தால் அதனையும் ஒரு விவாதப் பொருளாக்கி விடுகின்றனர்!

உண்மையைச் சொன்னால் இங்குக் குற்றவாளிகள் என்று யாரையும் சுட்ட வேண்டுமென்றால் அது தமிழ் தொலைக்காட்சியினர் தாம்! ரஜினியும் பேசுவார். இப்போதைக்கு அவர் மௌனமாக இருப்பதே நல்லது! நேரம் வரும் போது அவர் பேசித்தானாக வேண்டும்!

அது வரை கமல் பேசட்டும்! ரஜினி மௌனம் காக்கட்டும்!

No comments:

Post a Comment