Sunday 20 August 2017

மீண்டும் 'பளீர்'!


மீண்டும் பளீர்! கன்னத்தில் அறைந்தது போலத் தான் இருந்தது! இந்திரா காந்தி எத்தனை ஆண்டுகளாக இந்தச் சட்டத் திருத்தத்திற்காக காத்துக் கொண்டிருந்தார். சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போன அவரது கணவர் செய்த துரோகத்திற்காக ...இப்படி....முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருந்தால்....?

கணவர் இஸ்லாத்தில் சேர்ந்தார். அது அவரது உரிமை. மனைவி இன்னும் இந்துவாகவே இருக்கிறார்.  போகிற போக்கில் கணவர் தனது அனைத்து  இந்துப் பிள்ளைகளையும் இஸ்லாம் மதத்திற்கு மதம் மாற்றிவிட்டார்!  கடைசி குழந்தை அவரோடு வளர்ந்து வருகிறார்.  குழந்தை இப்போது பள்ளி போகிறாள். ஆனால்  அவர் எங்கிருக்கிறார் என்று காவல்துறை கண்டுபிடிக்க முடியவில்லை! மற்ற பிள்ளைகள் அனைவரும் இந்து அம்மாவிடம் முஸ்லிம் பெயருடன் இந்துவாக வாழ்ந்து வருகிறார்கள்!  ஒரு தாய்க்கு இதைவிட என்ன கொடுமை நடக்க வேண்டும்?  தாயோடு இருக்கிற பிள்ளைகளையாவது இந்நேரம் இந்துவாக பெயர் மாற்ற்ப்பட்டிருக்க வேண்டும். இந்த மாற்றத்திற்கெல்லாம் இஸ்லாமிய சட்டம் இடம் கொடுக்கிறது. ஆனால் நஜிப்பின் அரசாங்கம் தடையாக இருக்கிறது! 

இது போன்ற ஒரு தலைப்பட்ச மத மாற்றத்தை தடை செய்யும் வகையில் ஒரு சட்டத் திருத்தம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில்       கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும்.  கடந்த ஓராண்டுக்கு மேலாகவே இந்தச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வந்தது. ஆனால் கடைசி நிமிடம் இந்த ஒரு தலைப்பட்ச மத மாற்ற சட்டத் திருத்தம் எந்தக் காரணமும் இல்லாமல் கைவிடப்பட்டது  ஏன் என்று விளங்கவில்லை! இஸ்லாம் இதற்குத் தடையாக இல்லை. ஆனால் அரசாங்கம் தடையாக இருக்கிறது!

இது பற்றி பாஸ் கட்சியின் இஸ்லாமிய அறிஞர்கள் கூறும் போது இந்த ஒரு தலைப்பட்ச மதமாற்றம் என்பது சரிதான் என்கின்றனர். குடும்பங்கள் சிதறலாம்; நடுவீதிக்கும் வரலாம். அதற்கு அவர்கள் தயாராகத்தான் இருக்க வேண்டும் என்கின்றனர்.

இது போன்ற சம்பவங்களுக்கு நீதி கிடைக்குமா என்று பார்த்தால் .......கிடைக்காமலா போகும்...?  பொறுத்திருப்போம்!

No comments:

Post a Comment