Thursday 24 August 2017

தமிழ்ப்பற்றாளர் டத்தோ ஹாஜி தஸ்லிம்

டத்தோ ஹாஜி தஸ்லிம் மறைந்தார் என்று அறிந்த போது நமது  நாடு  நல்லதொரு தமிழ் மகனை இழந்ததே என்னும் பெரும் துயரம் தான் மனதைக் கனக்க வைத்தது.




நேர்மை ஒன்றே அவரின் ஆயுதம். தமிழர், தமிழ் மொழி, தமிழ் சார்ந்த அனைத்திலும் அனைத்துமாக இருந்தவர். தொழில் மட்டுமே பிரதானம் என்று இருந்திருந்தால் மலேசிய           கோடீஸ்வரர்கள் வரிசையில் அவரும் ஒருவராக இருந்திருப்பார்.   அவர் தமிழ் என்னும் வட்டத்திற்குள் சுழன்றவர். அதனால் அவர் பொருளாதார ரீதியில் இழந்தவை  ஏராளம். ஆளும் தரப்பினால் ஒதுக்கப்பட்டவர்.

ஆனாலும் அவர் எதற்கும் கலங்கியவர் அல்ல. "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்னும் உயரிய நோக்கத்தோடு தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் ஒயாது, ஒழியாது தனது கடமைகளைச் செய்தவர். தனது நேரத்தை அதிகமாகத் தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கியவர். தமிழ் மாணவர்களின் முன்னேற்றத்திற்காக அரும்பாடு பட்டவர்.

அவருடைய வாழ்க்கையே தமிழ், தமிழர் சார்ந்த வாழ்க்கை. அறம் சார்ந்த வாழ்க்கை. 

அவரின் பிரிவு தமிழினத்திற்கு மாபெரும் இழப்பு. நமது சமூகம் மாபெரும் போராளியை இழந்து விட்டது.

அன்னாரின் குடும்பத்திற்கு நமது அழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

No comments:

Post a Comment