Tuesday 15 August 2017

கேள்வி - பதில் (58)


கேள்வி

கேரளாவில், சாலை விபத்தில் சிக்கிய ஒரு தமிழரை,  தமிழன் என்பதால் சிகிச்சையளிக்க மருத்துவமனைகள் மறுத்துவிட்டனவாமே?

பதில்

அப்படித்தான் செய்திகள் கூறுகின்றன. இந்தச் செய்தியை நமது நாட்டின் இணைய இதழான "செம்பருத்தி" யைத் தவிர வேறு எங்கும் நான் படிக்கவில்லை. தமிழ் நாட்டில் கூட எந்த ஒரு பாதிப்பையும் இந்தச் செய்தி ஏற்படுத்தவில்லை!

சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டிலிருந்து சென்றிருந்த ஒரு ஐயப்ப பக்தர் மீது ஒரு காப்பிக்கடைக்காரர் சுடுநீர் ஊற்றியதாக ஒரு செய்தி வெளியாகியது. பிறகு அடுத்த நாளே அந்தச் செய்தி மறைக்கப்பட்டு விட்டது.  அதே போல ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பின்னணிப் பாடகி, சித்ரா தீபாவளியன்று ஒரு மலையாளத் தொலைக்காட்சி பேட்டியில்  ஒர் இந்தி பின்னணிப் பாடகி ஒருவர் மலையாளப் படத்தில் மலையாளப் பாட்டுப் பாடியாதால் அவர் அடித்த அதிரடி: இந்திப் பாடகி மலையாளப் படங்களில் மலையாளப் பாடல்கள் பாடினால் அது மலையாளப் பாடகர்களின் வாய்ப்புக்களைப் பறிப்பது ஆகாதோ? என்று கோபப்பட்டுப் பேசினார்! அந்தச் செய்தி வந்த அடுத்த நிமிடமே மறைந்து போனது!

ஆக, தமிழர் நலனுக்கு எதிராக வரும் எந்தச் செய்தியும் தமிழ் நாட்டு ஊடகங்களில் உடனடியாக நீக்கப்பட்டு விடுவதும், அது பற்றி வாய்த் திறப்பாமல் இருப்பதும் நீண்ட நாள்களாக ஒரு சம்பிரதாயமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது! தொலைக்காட்சிகளில் அனுதினமும் விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆனால் தமிழன் ஒருவனுக்கு எந்தவித சிகிச்சையும் அளிக்காமல் அவனைச் சாகடித்தார்களே அதனைப் பற்றி ஏன் விவாதம் செய்யக்கூடாது?  ஒர் ஐயப்ப பக்தரின் மேல் சுடுநீர் ஊற்றினார்களே அதனைப்பற்றி ஏன் விவாதிக்கக்கூடாது? சித்திரா அம்மா பேசினார்களே - எத்தனை தமிழனின் வாய்ப்புக்கள் பறிக்கப்படுகின்றன - அதனை ஓரு ஏன் விவாதமாகப் பொருளாக எடுத்துக் கொள்ளக் கூடாது? ஆனால் ஒரு ஊடகமும் இவைகளைப் பற்றி வாய்த் திறப்பதில்லை! ஆனால் பிரச்சனைகள் வரும் போது ஒவ்வொரு தொலைக்காட்சியும் தமிழர்களைத் திசைத் திருப்ப உடனடியாக சினிமா செய்திகளைப் போட்டு அவர்களைச் சிந்திக்க விடாமல் செய்து விடுகின்றன! இப்போது கண்முன்னே உள்ள விவசாயிகளின் பிரச்சனை, நெடுவாசல் பிரச்சனை - எதுவுமே ஊடகங்கள் ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்ளவில்லை! அவர்களைப் பொறுத்தவரை தமிழகம் சிங்கப்பூர் மாதிரி மாறிவிட்டது! அது போதும்! 

ஆனால் ஏன் இந்த நிலை?   ஊடகங்களில் பணிபுரிபவர்கள் பெரும்பாலும் அதிகம் பேர் தமிழர் அல்லாதவரே! குறிப்பாக மலையாளிகளின் ஆதிக்கம் அதிகம். பொதுப் பிரச்சனைகளைப் பற்றி வாய் கிழிய பேசலாம் ஆனால் தமிழர்களின் நலன் சார்ந்த எந்தப் பிரச்சனையும் பேசக்கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருக்கிறார்கள். ஊடகங்கள் மட்டும் அல்ல, சினிமாத் துறை, சின்னத்திரை - எதனை எடுத்தாலும் அவர்கள் தான் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்! தொலைக்காட்சி   பாட்டுப் போட்டிகளில் கூட மலையாளிகள் தான் முதல் பரிசை அபகரித்துச் செல்லுகின்றனர்!  அங்குள்ள நீதிபதிகள் கூட மலையாளிகள் தான்!

ஆக, தமிழர்களின் உரிமைகள் அனைத்தும் மலையாளிகளால் களவாடிச் செல்லப்படுகின்றன! அத்தனையும் தமிழன் இழந்து நிற்கிறான். ஆனால் அடிபட்ட ஒரு தமிழனுக்கு உதவி செய்ய கேரளாவில் எந்த ஒரு மலையாளியும் முன் வரவில்லை!        

வந்தவனை வாழ வைப்பது எவ்வளவு பெரிய தீமையை ஏற்படுத்தும் என்பது இப்போது புரிகிறதா?                                                                                               


No comments:

Post a Comment