Saturday 12 August 2017

கேள்வி - பதில் (57)


கேள்வி

மோடி, தமிழர்களுக்கு எதிரானவரா?


பதில்

மோடி, இந்தியாவின் பிரதமர். அப்படியென்றால் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் அவர் தான் பிரதமர். தமிழ் நாட்டுக்கும் அவர் தான் பிரதமர்.

ஆனால் தமிழ் நாடு என்று வரும்போது பிரதமர் மோடி ஏனோ பாராமுகமாக இருக்கிறார் என்பதாகச்  சொல்லப்படுகிறது. தமிழுக்கு, தமிழர்களுக்கு என்று ஏனோ அனைத்துக்கும் அவர் எதிர்ப்பாளராக இருக்கிறார் என்பதாக அவர் குறை கூறப்படுகின்றார்.

மீனவர் பிரச்சனையாகட்டும், நெடுவாசல் பிரச்சனையாகட்டும், தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அரசியல் பிரச்சனையாகட்டும் நீட் பிரச்சனையாகட்டும், விவசாயிகள் பிரச்சனையாகட்டும் எந்தவொரு பிரச்சனையிலும் அவர் கண்டும் காணாதது போல்,  ஒரு பிரதமர் போல்,  அவர் நடந்து கொள்ளவில்லை என்பதாகத்தான் அவர் செயல்பாடுகள் காட்டுகின்றன. ஆனால் நாம் மோடியைக் குறைச் சொல்லுவதில் பயனில்லை. குறைச் சொல்ல வேண்டுமென்றால் தமிழ் நாட்டில் உள்ள பா.ஜ.க. தலைவர்களைத்தான் குறை சொல்ல வேண்டும். தமிழகத் தலைவர்கள் தான் பிரதமர் மோடிக்குத் தமிழ் நாட்டைப் பற்றி தவறானத் தகவல்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் என்று தான் நினைக்க வேண்டியுள்ளது. அனைத்துப் பிரச்சனைகளூம் இவர்களிடமிருந்து தான் அங்குக் கொண்டு செல்லப்படுகின்றது. பா.ஜ.க. தலைவர்களான சுப்பிரமணிய சுவாமி, எச்.ராஜா போன்றவர்கள் தமிழர்களுக்கு எதிரிகள் போலவே  நடந்து கொள்ளுகின்றனர். அவர்களின் இந்துத்துவா பின்னணியும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்! அல்லது அவர்களின் பார்ப்பனியப் பின்னணியும் ஒரு காரணமாக இருக்கலாம்! இதில் தமிழிசையும் அடங்குவார். அவர்களின் செல்வாக்கை அதிகரிக்க தமிழர்களின் மேல் தாக்குதல்களை மேற்கொண்டிருப்பதாகவே  நமக்குத் தோன்றுகிறது. இவர்களின் செல்வாக்கைப் பெருக்கிக்கொண்டு வருங்காலங்களில் கவர்னர், ஜனாதிபதி பதவிகளுக்கு இப்போதே இவர்கள் தங்களைத் தயார் செய்கின்றனர் என்பதாகவே நாம் எடுத்துக் கொள்ளலாம்!

ஆனால் நான் சொல்ல வந்த செய்தி இதுவல்ல. பிரதமரின் மோடி வெளிப்படையாக தமிழர்க்கும் தமிழுக்கும்  எதிராகப் பேசாவிட்டாலும் மறைமுகமாக அவர் நிறையவே செய்கிறார் என்பதைத்தான் நான் சொல்லு வருகிறேன். தமிழுக்கும் அவர் விரோதியாகவே செயல்படுகிறார். சமீபத்தில் லண்டனில் நடபெற்ற ஏ.அர்.ரகுமானின் கலைநிகழ்ச்சியில்  ஏற்பட்ட அசம்பாவிதங்கள் கடல்கடந்தும் அவருடைய தூண்டுதல்களின் வாயிலாய் செயல்படுகிறார் என்று தான் சொல்ல வேண்டும்!

சிங்கப்பூரிலும் அவரது ஆதரவாளர்கள் மோடியின் செல்வாக்கைப் பயன்படுத்தி  தமிழுக்குப் பதிலாக இந்தி மொழிக்கு முதலிடம் தர வேண்டும் என முயன்றதாகக் கூறப்படுகின்றது.

தமிழுக்கும் தமிழர்க்குமான விரோதப் போக்க அவர் கடைப்பிடிப்பதற்கு தமிழக பா.ஜ.க. தலைவர்கள் தான் காரணம் என்று தாராளமாகச் சொல்லலாம்.

இப்போதைய நிலையில் பிரதமர் மோடி தமிழருக்கு எதிரானவராகவே  தோற்றமளிக்கிறார்! இது மாறலாம்! அல்லது மாற்றப்படுவார்!

No comments:

Post a Comment