Monday 21 August 2017

கேள்வி - பதில் (59)

கேள்வி

ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று எடுத்துக் கொள்ளலாமா?

பதில்

தமிழருவி மணியன் உறுதியாகச் சொல்லுகிறார். ரஜினி இன்னும் உறுதிப் படுத்தவில்லை. ஆனாலும் தமிழருவி சொல்லுவதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். தமிழருவி மணியன் ஏமாறுபவர் அல்ல. அவர் சொல்லுவதில் உண்மை இருக்கும்.

என்னைப் போன்றவர்கள் ஒரு தமிழர் தான் தமிழ் நட்டை ஆள வேண்டும் என்று நினைக்கிறோம். அது நடக்க வேண்டும் என்றால் முதலில் திராவிடக் கட்சிகளை ஒழிக்க வேண்டும். அதுவும் அவ்வளவு சுலபமல்ல.

நாங்கள்,  நாம் தமிழர் கட்சி பதவிக்கு வர வேண்டும் என விரும்புகிறோம். ஆனால் வருகின்ற தேர்தலில் அவர்களால் ஆட்சி அமைக்க முடியுமா என்னும் ஐயமும் எழுகிறது. ஒரு சில இடங்கள் கிடைத்தால் கூட அதுவே அவர்களுக்கு ஒரு பெரிய வெற்றி. காரணம் தமிழக மக்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மாறுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. ஐம்பது ஆண்டுகள் அவர்கள் அப்படியே பழக்கப்படுத்தப்பட்டு விட்டார்கள்! மாறுவது மிகவும் சிரமம். நாம் தமிழர் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு இன்னும் வளரவில்லை.  இவர்களால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்றால் அது தி.மு.க. வுக்குத் தான் சாதகமாக அமையும். மீண்டும் திராவிடக் கட்சிகள் தான் ஆட்சி அமைக்கும்.

தமிழருவி மணியன் திராவிடக் கட்சிகள் ஒழிய வேண்டும் என்கிறார். நாமும் அதைத்தான் சொல்லுகிறோம். திராவிடக் கட்சிகளை ஒழிக்க இன்றைய நிலையில் எந்தக் கட்சியும் வலிமை பெற்றிருக்க வில்லை.

ரஜினி ஒருவரால் தான் திராவிடக் கட்சிகளை முற்றிலுமாக ஒழித்துக் கட்ட முடியும். வேறு யாராலும் அது முடியாத வேலை என்பதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

ரஜினி வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று சொன்னாலும் இன்றைய நிலையில் வேறு மாற்று இல்லை. அவர் தான் வந்தாக வேண்டும். தமிழருவி,  ரஜினியோடு கை கோக்கிறார் என்றால் அது நல்லதாகத்தான் அமையும். ரஜினியின் மூலம் தற்காலிகமாவது தமிழகத்துக்கு நல்லது நடக்கும் என நம்பலாம்.

வேறு மாற்று இல்லை என்கிற போது ரஜினி அரசியலுக்கு வரட்டுமே! நல்லதே நடக்கட்டும்! நாமும் வாழ்த்துவோம்!

No comments:

Post a Comment