கேள்வி
தி.மு.க. வில் அடுத்து பொறுப்பேற்பவர்களில் யார் யாராக இருக்கக் கூடும்?
பதில்
கலைஞரின் பாசத்துக்குரிய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் - இவர்களுடைய பெயர்கள் தான் அடிபடுகின்றன!
"எழுந்து வா, தலைவா!" என்று கதறி அழுதானே அவனெல்லாம் இதில் இல்லை. கலைஞரின் இறப்பு செய்தி கேட்டு இலட்சக் கணக்கில் கூடினார்கள் என்று பெருமைப் பட்டுக் கொண்டார்களே, அந்த எருமைகளில் ஒருவர் கூட பெருமைப்படும்படியாக இந்தப் பொறுப்புக்களில் இல்லை!
இப்போது குடும்பத்தில் உள்ள குழப்பம் எல்லாம் யார் யாரை எங்கே வைப்பது என்பது தான்.அண்ணனை எங்கே வைப்பது, தம்பியை எங்கே வைப்பது, தங்கையை எங்கே வைப்பது, பேரனை எங்கே வைப்பது, பேரப்பிள்ளைகளை எங்கே வைப்பது போன்ற கட்சியில் உள்ள ஜனநாயகத்தை எப்படி காப்பாற்றுவது என்பதற்காக தளபதி ஸ்டாலின் போராடிக் கொண்டிருக்கிறார்!
கட்சிப் பதவிகளுக்கு மட்டும் தான் இந்தக் குழப்பமா? கட்சியில் உள்ள சொத்துக்கள்? இவைகள் அனைத்துக்கும் வாரிசுகள் இவர்கள் தானே! தமிழகத்தை கட்டிக்காப்பவர்கள் என்றால் அது கலைஞரின் வாரிசுகளால் தான் முடியும் என்பதாகக் கலைஞர் என்றோ முடிவு செய்துவிட்ட ஒரு விஷயம். அது தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. கலைஞர் என்ன நினைத்தாரோ அதையே தான் ஸ்டாலினும் நினைக்கிறார்! கட்சியின் தலைமைத்துவத்துக்கள், கட்சியின் சொத்துக்களுக்குள் வெளியே உள்ளவர்கள் யாரும் உள்ளே வரக்கூடாது என்பதில் ஸ்டாலின் கவனமாக இருக்கிறார்.
தமிழனை ஆட்சி செய்ய வேண்டுமே தவிர கட்சிக்குள் தமிழனின் ஆட்சி வரக்கூடாது என்பது தான் கலைஞர் மகனுக்குச் செய்த உபதேசம். அந்த அறிவுரையை ஸ்டாலின் நிச்சயமாகக் கடைப்பிடிப்பார்! நாளை கட்சி காலாவதியானாலும் சொத்துக்களாவது மிஞ்சுமே அதனை இழக்க முடியாது அல்லவா!
எது எப்படி இருந்தாலும் கலைஞர் தனது வாரிசுகளுக்கு எந்தக் குறையும் வைக்கவில்லை. அவர் குடும்பத்தில் ஒவ்வொரு குழைந்தையும் பிறக்கும் போதே கோடிகளோடு தான் பிறக்கின்றன.
வீழ்வது விவசாயிகளாக இருந்தாலும் வாழ்வது வாரிசுகளாக இருக்கட்டும்!
No comments:
Post a Comment