கேள்வி
வருகின்ற தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பவர்கள் யாராக இருக்கும்?
பதில்
இது பா.ஜ..க.வுக்கும் காங்கிரஸ் கட்சிக்குமான போட்டி என்று சொல்லப்படுகிறது என்றாலும் வேறு கட்சிகளும் இந்த முறை வலுவான போட்டியை உருவாக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அதனால் காங்கிரஸ் - பா.ஜ.க. கூட்டணிகளைத் தவிர்த்து வேறு கூட்டணி ஆட்சி அமைக்குமா - அமைக்கலாம் என்றும் சொல்லப்ப்டுகின்றது. இப்போது மக்களுக்கு இந்த இரண்டு கட்சிகளின் மேலும் யாருக்கும் நல்ல எண்ணம் இல்லை!
என்ன தான் காட்டுக் கத்தலாக கத்தினாலும் இந்தக் கட்சிகளால் இலஞ்சத்தை ஒழிக்க முடியவில்லை! இலஞ்சம் வாங்குபவர்களே இவர்கள் தான் அப்புறம் எங்கே இலஞ்சத்தை ஒழிக்க முடியும்,
இலஞ்சம் கொடுக்காமல் எந்த ஒரு காரியமும் அடைபெறாது என்னும் நிலைமைக்கு நாடு தள்ளப்பட்டு விட்டது. இதை விட பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடு இந்தியா என்கிற பெயரையும் அதற்கு இப்போது ஏற்பட்டுவிட்டது.
பா.ஜ.க. ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு வன்முறைகள் அதிகம். திறைமையான பத்திரிக்கையாளர்கள் பலர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். குற்றவாளிகள் இன்னும் வெளியே சுற்றிக் கொண்டிருக்கின்றனர்! சிறுமிகள் பலர் வன்முறைக்கு ஆளாகி இருக்கின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை! மாட்டுக்கறி சாப்பிடுவது குற்றம். மாடுகளை வைத்திருப்பதே குற்றம் என்னும் பாணியில் இந்திய அரசியல் பா.ஜ.க வின் . கீழ் போய்க் கொண்டிருக்கிறது!
தமிழ் நாட்டிற்கு இந்த இரு கட்சிகளினால் எந்தப் பயனுமில்லை. முன்னேற்றம் என்னும் பெயரில் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. பணக்காரர்களுக்கு ஏற்றபடி ஆமாஞ்சாமி போடுகின்ற கூட்டமாக அரசியல்வாதிகள் மாறிவிட்டனர்..
இந்தியாவில் ஏகப்பட்ட பிரச்சனைகள். நாடு முன்னேறுகிறது என்று சொல்லி மக்களை ஏமாற்றுகின்றனர். இப்போதைக்கு வெறும் விளம்பரத்தை வைத்துக் கொண்டு நாடு முன்னேறுகிறது என்று பாவ்லா காட்டுகின்றனர்!
என்னைக் கேட்டால் இந்த இரு கட்சிகளுமே ஆட்சிக்கு வரக்கூடாது என்று தான் சொல்லுவேன்.
நாட்டிற்கு நல்லது வர நல்ல கூட்டணி அமைய வேண்டும்! அது தான் நமது பிரார்த்தனை!
No comments:
Post a Comment