பகாங் மாநில தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு இந்தியர்களைப் பழிவாங்க நல்லதொரு வாய்ப்புக் கிடைத்தது. அதனை நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்டார்கள்!
அது தான் கேமரன் மலை விவசாயிகளின் பிரச்சனை. அறுபது குடும்பங்கள் அங்கு விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். அதுவும் இன்று நேற்றல்ல> அறுபது ஆண்டுகளாக அவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். அந்த விவசாயக் குடும்பங்கள் தாங்கள் விவசாயம் செய்ய அந்த நிலங்களுக்கு நிரந்தர பட்டா தரும்படி பல ஆண்டுகளாக போராடிக் கொண்டு வருகின்றனர். ஆனால் கிடைத்த பாடில்லை. ஒரே காரணம் அந்த விவசாயிகள் அனைவரும் இந்தியர்கள் என்பது தான்!
நிச்சயமாக இந்தச் சூழலில் அவர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவாக இருப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? இத்தனை ஆண்டுகள் அவர்கள் அனைவருமே ம.இ.கா.வில் இருந்தவர்கள். ம.இ.கா. வால் வழக்கம் போல அவர்களுக்கு எந்தப் புண்ணியமும் ஏற்படவில்லை. தேசிய முன்னணி அரசாங்கள் அவர்கள் கோரிக்கைக்குச் செவி சாய்க்கவில்லை. பல ஆண்டுகள் கோரிக்கை விடுத்து விடுத்து நொந்து போனவர்கள்! வேறு என்ன செய்வார்கள்?
சமீபத்திய இடைத் தேர்தலில் அவர்கள் தேசிய முன்னணியை ஆதரிக்கவில்லை. எதிர்க்கட்சி பக்கம் சாய்ந்து விட்டனர். அதே சமயத்தில் தேசிய முன்னணி வேட்பாளர் வெற்றி பெற்றார். கேமரன் மலை என்பது பகாங் மாநில தேசிய முன்னணி அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரு மலை.
இந்தத் இடைத் தேர்தலில் இந்தியர்கள் எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாக இருந்தனர் என்பதால் தான் இப்போது தேசிய முன்னணி அரசாங்கம் ஆதரவற்ற விவசாயிகளின் மேல் நடவடிக்கை எடுத்துள்ளது! இந்த விவசாய மக்கள் பல ஆண்டுகளாக நிரந்தர பட்டாவுக்காக போராட்டம், கோரிக்கை என்று அரசாங்கத்திற்கு விடுத்திருந்தும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இப்போது அவர்கள் எதிர்க்கட்சியினர் பக்கம் என்று அறிந்து கொண்டதும் உடனே இதனை நல்லதொரு சந்தர்ப்பமாகக் கருதி அவர்களை வெளியேற்றும் நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றனர்.
முட்டாள்கள் அரசாங்கத்தை வழி நடத்தினால் இது தான் நடக்கும் என்பதை உறுதிபடுத்தி விட்டார்கள். அறுபது குடுமபங்களைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. இதுவே மலாய்க்கரார்களாக இருந்தால் இப்படி ஒரு நடவடிக்கையை எடுக்கத் துணிய மாட்டார்கள். இப்போதெல்லாம் விவசாயம் செய்ய மலாய்க்காரர்கள் தயராக இல்லை. ஆனால் விவசாயம் செய்யும் இந்தியர்களையும் அரசியல்வாதிகள் அடாவடித்தனம் செய்கிறார்கள்!
கடந்த அறுபது ஆண்டுகளாக இந்தியர்கள் அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருந்திருக்கிறார்கள். இப்போது தான் அதன் பலனை அனுபவிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்! இத்தனை ஆண்டுகள் கேமரன்மலை ம.இ.கா.வின் கோடடையாகத்தான் இருந்து வந்திருக்கிறது. ஆனால் இன்றை நிலைக்கு அந்த விவசாயிகளை ஆளாக்கிய ம.இ.கா. இப்போது வாய் திறக்கவில்லை! அந்த விவசாயிகளை வைத்து பணம் சம்பாதித்தவர்கள் ம.இ.கா.வினர்! ஆனால் இப்போது பாராமுகமாய் இருக்கின்றனர்! இதே போதும் ம.இ.கா.வினர் நன்றி கெட்டவர்கள் என்று!
இது அரசியல் பழிவாங்கள் என்பது நமக்குப் புரிகிறது. பொறுமை காப்போம்!
No comments:
Post a Comment