சந்தேகமே இல்லை, நம்ம மைக்கா ஹோல்டிங்ஸ் தான்!
ஆகா, நம்ம மைக்காவைப் பற்றி பேசும் போதெல்லாம் என்ன சந்தோஷம்! என்ன மகிழ்ச்சி! நம்ம வீராதி வீரர்கள் எல்லாம் இதோ நம் கண் முன்னே நிற்கிறார்களே!
வேறு எது பற்றிப் பேசினாலும் கிடைக்காத 'கிக்' இந்த மைக்கா பற்றி பேசும் போது மட்டும் அந்த 'கிக்' கிடைத்து விடுகிறதே! அட! யார் யாரோ நம் கண் முன் வந்து விடுகிறார்கள்!
இன்னும் எத்தனை ஆண்டுகள் போனாலும் இந்த மைக்காவுக்கு முடிவு காலமே இராது போல அல்லவா தோன்றுகிறது! மைக்காவிற்கு என்றும் பதினாறு தானோ!
இப்போது இந்தப் பிரச்சனையை "சரவா ரிப்போட்" இணயத்தளம் கையில் எடுத்திருக்கிறது! இத்தனை ஆண்டு காலம் நமக்குக் கிடைக்காத தகவல்கள் எல்லாம் இப்போது கிடைத்துக் கொண்டிருக்கின்றன! இன்னும் நிறைய வரும் என எதிர்பார்க்கலாம்!
நான் மேலே சொன்னது போல மைக்கா என்றாலே நிறைய சந்தோஷம், நிறைய தமாஷ்கள் எல்லாம் வரும் என்று சொன்னேன், அதில் பெரிய தமாஷ்! மைக்காவின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான எஸ் வேள்பாரி தனது செல்லப்பிள்ளையான மைக்காவைப் பற்றி குறிப்பிடும் போது "அந்த நிறுவனம் நஷ்டத்தில் நடந்து கொண்டிருந்த போது அந்த நிறுவனத்திற்கு நான் தான் பணம் கொடுத்து உதவினேன்" என்கிற அதிர்ச்சித் தகவல்களையும் அவர் வெளியிட்டிருக்கிறார்! இதுவே நமக்குப் புதிய தகவல் தானே! இத்தனை ஆண்டுகள் வராத தகவல் இப்போது வெளியாகியிருக்கிறதே! இருந்தாலும் அவரது கடமையுணர்ச்சியைப் பாராட்டுவோம்!
மைக்கா ஹோல்டிங்ஸ் என்பது முடிந்து போன ஒரு பிரச்சனை என்பதாக வேள்பாரி சமீபகாலமாக கூறி வந்திருக்கிறார், அது எப்படி? என்னைப் போன்றவர்கள் எல்லாம் அப்படியே தானே வைத்துக் கொண்டிருக்கிறோம்! கொடுக்க வேண்டியதைக் கொடுத்திருந்தால் நாங்கள் ஏன் இது பற்றி பேசிக் கொண்டிருக்கப் போகிறோம்!
நான் இன்னும் காத்துக் கொண்டு தான் இருக்கிறேன். கிடைக்குமா, கிடைக்காதா என்று. கிடைத்தால் மகிழ்ச்சி! கிடைக்காவிட்டால் அதைவிட மகிழ்ச்சி! காரணம் ஒரு சராசிரியிடம் ஒரு கோடிசுவரன் கடன் வைத்திருந்தால் அது எனக்குக் கேவலம் அல்ல!
இது இப்போது முடிவடையாது என்று தெரிகிறது! பின்ன சும்மாவா! பணம் அல்லவா!
No comments:
Post a Comment