ஒரு சில விஷயங்களை மீண்டும் மீண்டும் சொல்லப்பட வேண்டிய சூழலில் நான் இருக்கிறேன். அதனால் மன்னித்து விடுங்கள்.
வேறு வழியில்லை! ஒரு முறை மட்டும் சொல்லிவிட்டுப் போனால் அது ஞாபத்திற்குக் கொண்டு வர இயலாது. ஏதோ பொழுது போக்கு என்று அலட்சியமாகக் கடந்து போய் விடலாம்.
ஆனால் எனது நோக்கம் அதுவல்ல. ஏதோ ஒரு சிலருக்காவது எனது எழுத்து பயன்பட வேண்டும் அதற்காகவே வியாபாரம் என்று வரும் போது சில செய்திகள் மீண்டும் மீண்டும் வற்புறுத்தப்படுகின்றன.
பொழுதைப் போக்குவதற்காக நான் எழுதவரவில்லை. நமது மக்கள், நமது தமிழினம் சொந்தத் தொழில் செய்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்னும் நோக்கத்தில் தான் நான் எழுதி வருகிறேன்.
அதனால் 'என்னடா இவன்! சொன்னதையே சொல்லுகிறானே!' என்று சலிப்பு ஏற்படுவது என்பது இயல்பு தான்.
சில செய்திகள் அழுத்தமாகத் தான் சொல்லப்பட வேண்டும். மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும். அப்போதாவது ஏதாவது பயன் கிடைக்கும் என நம்புவோம்.
அதனால் மீண்டும்.....மீண்டும்.......ஏன்? என்று சலிப்பு வேண்டாம்!
No comments:
Post a Comment