சீனர் சமூகமே நமக்கு எடுத்துகாட்டு (iv)
ஒரு காலக் கட்டத்தில் சிறந்த கல்வியாளர்களைக் கொண்ட சமூகமாக நாம் இருந்தோம்.
இன்று நிலைமை மாறி விட்டது. இன்று சீனர்கள் தான் சிறந்த கல்வியாளர்களாக இருக்கின்றனர். தனியார் பலகலைக்கழகங்களில் அவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். பெரும்பாலான பேராசிரியர்களாக அவர்கள் தான் இருக்கின்றனர். உண்மையைச் சொன்னால் நாம் தான் கல்வித்துறையில் கோலோச்சினோம். இன்று அதனையும் இழந்தோம்.
நாம் பெரிய பெரிய கல்வி நிறுவனங்களை விடுவோம். சாதாரண இடை நிலைக்கல்வி, தொழில் பயிற்சிக் கல்வி இவைகளைப் பற்றி பார்ப்போம்.
தொடக்கக் கல்வி முடிந்து இடைநிலைப் பள்ளிகளுக்குப் போகும் போது கணிசமான மாணவர்கள் இடைநிலைப் பள்ளிகளைத் தவிர்க்கின்றனர். முதல் அடி அங்கே விழுகிறது. அடுத்து இடைநிலைப் பள்ளிகளில் ஐந்தாம் பாரம் வரை அனைத்து மாணவர்களும் போய் சேருவதில்லை. அடுத்த அடி இங்கே!
இப்படி விடுபட்டுப் போன மாணவர்களின் நிலை என்ன? இவர்களில் பெரும்பாலானோர் ஒன்று: குடிகாரர்கள் அடுத்து: குண்டர் கும்பல். இப்படி உருப்படாத மாணவர்களை குண்டர் கும்பல்கள் தங்களுடன் சேர்த்துக் கொள்ளத் தயாராக இருக்கின்றனர்.
இதனை நாம் சீன மாணவர்களோடு ஒப்பிடும் போது நாம் மிகவும் அதிகம். அவர்கள் குறைவான விழுக்காடு தான். அதே சமயத்தில் அவர்களின் பாதை வேறு. ஏதோ ஒரு வியாபார நிறுவனங்களில் , தொழில் நிறுவனங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளுகின்றனர். ஒன்று தொழிலைக் கற்றுக் கொள்ளுகின்றனர். அடுத்து சொந்தமாக வியாபாரத்தில் ஈடுபடுகின்றனர்.
படிக்கவில்லை என்றாலும் சீன மாணவர்கள் தங்களுக்கு ஏற்ற ஒரு பாதையை அமைத்துக் கொள்ளுகின்றனர். அது அவர்களுக்கு ஆக்ககரமாக அமைகிறது. தமிழ் மாணவர்கள் குடி, குண்டர் கும்பல் என்று சீரழிவு பாதைக்கு இழுத்துச் செல்லப்படுகின்றனர். சீனப் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டியாக அமைகின்றனர்.
இன்று இந்திய மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி பெற நிறையவே வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. முன்பு போல முணுமுணுக்க ஒன்றுமில்லை. ஆனாலும் மாணவர்கள் தயாராக இல்லை.
வாய்ப்புகள் இருந்தும் அதனை நாம் பயன்படுத்திக் கொள்வதில்லை. நமது இந்திய பெற்றோர்கள் பொறுப்பற்று நடந்து கொண்டால் அதற்கு அரசாங்கத்தைக் குறை சொல்லுவதில் பயனில்லை.
நமது மாணவர்கள் பொறுப்பற்றுப் போவதற்கு பெற்றோர்களே முழு காரணமாக அமைகின்றனர்.
பெற்றோர்களே நீங்கள் தான் பிள்ளைகளுக்கு வழிகாட்டியாக இருந்து வழிகாட்ட வேண்டும்.
No comments:
Post a Comment