சீனர் சமுகமே நமக்கு எடுத்துக்காட்டு! (iii)
பொதுவாகவே இந்தியர்கள் குடிகார சமூகம் என்கிற பெயர் எடுத்துவிட்டோம்! ஏன்? வளர்ந்து வரும் இளைய சமுதாயம் கூட குடிகாரர்கள் என்பது மற்றவர்கள் சொல்ல வேண்டாம். நாம் கண்கூடாகவே பார்க்கிறோம். பள்ளி மாணவர்கள் கூட அதற்கு விதிவிலக்கல்ல!
ஒரு வித்தியாசம். இந்த மாணவர்களின் பெற்றோர்களைத் தவிர மற்ற பொது மக்கள் பெரும்பாலும் இதனை அறிந்து வைத்திருக்கிறார்கள்!
ஆனால் உண்மையில் நாம் அந்த அளவு பெரிய குடிகாரர்களா? இல்லை! நாம் குடிப்பதை விட நாம் செய்கின்ற ஆர்ப்பாட்டம் அதிகம்! கொஞ்சம் குடித்துவிட்டு அதிக ஆர்ப்பாட்டம் செய்கின்றவர்கள் நாம்! ரோடுகளில் விழுந்து கிடப்பது, ரகளைச் செய்வது, வம்பிழுப்பது, உதை வாங்குவது, அடித்துக் கொள்ளுவது - இவைகள் எல்லாம் நாம் போதையில் இருக்கிறோம் என்பதற்கான அறிகுறிகள்!
ஆனால் குடிப்பதில் கில்லாடிகள் என்றால் அது சீனர்கள் தான். ஒரு வித்தியாசம். அவர்கள் குடிகாரர்கள் என்பது அவ்வளவாக வெளியே தெரிவதில்லை. அவர்கள் அதனைக் காட்டிக் கொள்ளுவதில்லை. ஏதோ குடித்தோம்! போய்ப் படுத்தோம்! என்பது தான் அதிகம். வரம்பு மீறுவது அங்கும் உண்டு. வெளியே தெரிவதில்லை!
மனிதன் குடிப்பது என்பது உலக அதிசயம் உல்ள. ஆனால் அதனை ஏதோ தொழில் போல செய்வது என்பது நாமாகத்தான் இருக்க வேண்டும்! சீனர்கள் குடிக்கிறார்கள் ஆனால் அவர்களின் குடும்ப வாழ்க்கைப் பாதிப்பதில்லை. அவர்களின் தொழில் பாதிப்பதில்லை. நமது நிலை அப்படி அல்ல. தொழில் செய்பவர்கள் கூட தங்களின் தொழிலில் கவனம் செலுத்தாத நிலை நம்மிடையே உண்டு.
சீனர்களிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் இது. நமது வேலையிலோ, தொழிலோ முழு கவனத்தைச் செலுத்துங்கள். உங்கள் உழப்பை வீணடிக்காதீர்கள். பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள். நீங்கள் குடித்துத்தான் ஆக வேண்டும் என்றால் கூட்டம் போட்டுக் கும்மாளம் அடிக்காதீர்கள். உங்கள் வீட்டிலேயே குடித்துவிட்டு அமைதியாகப் படுத்து விடுங்கள்.
இந்திய இனம் ஏழைகள் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். குடிப்பதற்காக இவர்கள் ஏராளமாக செலவு செய்கிறார்கள்! இவர்கள் குடும்பம் என்ன நிலையில் இருக்கிறதோ நமக்குத் தெரியவில்லை. ஆனால் குடித்துவிட்டு அடித்துக் கொள்ளுவதில் மன்னராக இருக்கிறார்கள்!
இந்த குடிகாரர் பிரச்சனையில் கூட சீனர்கள் தான் நமக்கு உதாரணம். மதுபான விற்பனை நிறுவனங்கள் இந்தியர்களை நம்பி இல்லை, சீனர்கள் தான் அவர்களின் பிரதான வாடிக்கையாளர்கள். ஆனால் நமக்குத் தான் குடிகாரப்பட்டம் எளிதாக கிடைக்கிறது!
நாம் குடியை மறந்தால் நமது முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். குடித்தாலும் கும்மாளம் அடிக்க வேண்டாம்.!
No comments:
Post a Comment