கோலகுபுபாரு இடைத்தேர்தல் அன்று தொகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளும் காலை மணி 8.00 க்கு தயாராகிவிட்டன. அனைத்தும் மாலை மணி 6.00 வரை திறந்திருக்கும்.
சுமார் 30,269 வாக்களார்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர். தேர்தல் முடிவுகள் இரவு 10.00 மணி அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த அசம்பாவிதமும் நடைபெறாமலிருக்க காவல்துறை குவிக்கப்பட்டிருக்கிறது.
இது ஒரு நான்கு முனை போட்டி என்றாலும் இரண்டு கட்சிகளே பிரதானமாகத் தோன்றுகின்றன. பிரதமர் தலைமையில் இயங்கும் பக்காத்தான் ஹராப்பானும் முன்னாள் பிரதமர் முகமது யாஸின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலும் முக்கியமானவை. இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் போட்டியிடும் நான்கு பேருமே தொகுதியில் வாக்களிக்க தகுதி பெறவில்லை! அனைவருமே வேறு தொகுதிகளைச் சேர்ந்தவர்கள்!
பல்வேறு காரணங்களுக்காக இந்திய வாக்களார்கள் வாக்களிக்கமாட்டார்கள், சீனர்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்று சொன்னாலும் பின்னர் அவர்கள் அனைவருமே சமரசமாகி விட்டார்கள். மலாய், சீன வாக்காளர்கள் காலையிலேயே வாக்களிக்கத் தொடங்கி விட்டாலும் இந்திய வாக்களர்கள் தாமதமாகத்தான் வாக்களித்திருக்கின்றனர். அன்று வேலை நாள் என்பதால் அந்தத் தாமதம்.
இந்திய வாக்களர்களைப்பற்றி பலவாறு குறைகள் சொன்னாலும் இந்த இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்குச் சரியானதொரு பாடத்தைக் கற்பித்திருக்கின்றனர். தொகுதியில் பல்வேறு பணிகள் உறுதியளித்தவாறு நடைபெறவில்லை. நடைபெறும் என்பதாக உறுதிமொழி கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த முறை, இந்தியர்கள், வாக்குச்சாவடிக்கு சும்மா ஓட்டுப் போட போகவில்லை. சில உறுதிமொழிகளுடன் தான் ஓட்டு போடுகின்றனர். இதனை நாம் ஓர் ஆரம்பமாக எடுத்துக்கொள்ளலாம். வருங்காலங்களில் நமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என நம்பலாம்.
No comments:
Post a Comment