ஸ்குவேஷ் விளையாட்டில் பிரமாதப்படுத்தியிருக்கிறார் நமது நாட்டின் சிங்கப்பெண்ணான சிவசங்கரி சுப்ரமணியம்! நாட்டிற்குப் பெருமையும் சேர்த்திருக்கிறார்! வாழ்த்துகள்! வாழ்த்துகள்! வாழ்த்துகள்!
அவர் செய்த சாதனை உலகளவில் ஸ்குவேஷ் விளையாட்டில் முதல் பத்து இடங்களில் இருப்பவர்களில் அவரும் ஒருவர் என்கிற சாதனை தான். நமக்கு அந்த விளையாட்டில் பெரிய புரிதல் இல்லயென்றாலும் சாதனை புரிகின்ற போது. அதுவும் நமது பெண்களில் ஒருவர் சாதனைகளை ஏற்படுத்தும் போது நாம் அதனை நல்மனதோடு பாராட்டுவது நமது கடமையாகும்.
நம் பெண்களில் பலர் பல சாதனைகள் புரிகின்றனர். அவைகள் வெளியே தெரிவதில்லை. அவர்களுக்கு அரசாங்க உதவியோ கிடைப்பதில்லை. எல்லாமே சொந்த முயற்சி தான். சொந்த முயற்சியால் தான் சாதனைகள் புரிகின்றனர்.
அந்த வரிசையில் சிவசங்கரியும் ஒருவர். மீண்டும் வாழ்த்துகிறோம்! நமது வீரப்பெண்களின் சாதனைகள் தொடரட்டும்!
No comments:
Post a Comment