இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் பற்றாக்குறை என்பது புதிய பிரச்சனையல்ல! எப்போதும் உள்ள பிரச்சனை! அற்ப மகிழ்ச்சிக்காக தலைமை ஆசிரியர்களால் உருவாக்கப்படும் பிரச்சனை.
காரணம், இது தலைமை ஆசிரியர்கள் அவர்களோடு கலவி அமைச்சில் உள்ள சில கூட்டுக் களவாணிகள், ஆகியோர்களால் ஏற்படுத்தப்படும் ஒர் செயற்கையான பிரச்சனை! மற்றபடி யாரும் இங்குத் தடையாக இல்லை, தலைமை ஆசிரியர்கள் தவிர!
பிரச்சனை நமக்கு என்னவென்று தெரிகிறது. ஆனால் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அன்று ம.இ.கா. விட்டுக் கொடுத்த பல பிரச்சனைகளில் இதுவும் ஒன்று. அதனால் தான் இன்றும் ம.இ.கா. நம்மிடம் திட்டு வாங்கிக் கொண்டியிருக்கிறது!
ஆனால் இன்று நமக்குப் புதிய அரசாங்கம் அமைந்திருக்கிறது. இப்போது இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காண வேண்டிய நேரம். இன்றைய அரசாங்கத்தில் ஜ.செ.க., பி.கே.ஆர். போன்ற கட்சிகளின் கலவையில உள்ளன. சீனர்களின் பிரச்சனை என்றால் இந்நேரம் ஜ.செ.க., ம.சீ.ச. போன்ற கட்சிகள் குரல் எழுப்பிருக்கும்! தமிழர் பிரச்சனை என்றால் குரல் எழுப்ப ஆளில்லை!
யாரும் குரல் எழுப்பவில்லை என்றால் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை யாரால் களைய முடியும்? இந்தியர்கள் பிரச்சனை என்னவென்று அனைவரும் அறிந்திருக்கின்றனர். ஆனால் அதனை அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லத்தான் ஆளில்லை!
என்னைக் கேட்டால் அரசாங்கத்தில் முழு அமைச்சராக இருக்கும் கோபிந்த் சிங் டியோ அவர்களிடம் செல்லுவதே சிறப்பு என்று நினைக்கிறேன். காரணம் அவரைப் பார்த்தாலே அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு ஒரு மரியாதை வரும்! நம்மைப் பார்த்தால் அவர்களுக்குக் கோமாளிகளாகத்தான் தெரிகிறோம்! ஏன்? நமது பிரதமருக்கே அப்படித்தானே! காரியம் ஆக வேண்டுமென்றால் - கோல் அடிக்க வேண்டுமென்றால் - கோபிந்த்சிங் தான் சரியான மனிதர்!
இப்போது இந்தப் பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கும் தமிழ் சார்ந்த அமைப்புக்களை நாம் பாராட்டுகிறோம். இதற்கு ஓர் நிரந்தர தீர்வே முக்கியமானது. அதனை நோக்கியே நமது பயணம் அமைய வேண்டும்.
No comments:
Post a Comment