iகோலகுபுபாரு இடைத்தேர்தலுக்கு முன் நடந்த சரித்திரபூர்வமான சம்பவங்கள்!
எல்லாத் தலைவர்களும் ஒன்று கூடினார்கள். ஒன்று சேர்ந்து கும்மியடித்தார்கள்!
"தேர்தலை புறக்கணியுங்கள்!" என்றது ஒரு கூட்டம். குறிப்பாக பெரிகாத்தான் நேஷனல். அப்படிப் புறக்கணித்திருந்தால் புதிய வருகையான முன்னாள் ம.இ.கா.வினருக்கு நல்ல பெயர் கிடைத்திருக்கும்!
"தேர்தலை புறக்கணிக்க வேண்டாம். வாக்களியுங்கள். ஆனால் பக்காத்தான் ஹரப்பானுக்கு வாக்களிக்காதீர்கள்!" பின்னர் தொனியை மாற்றிக் கொண்டு இப்படி ஒரு பிரச்சாரம்!
"பெரிக்காத்தான் நேஷனலுக்கு ஆதரவா? கெடா மாநிலத்தைப் பார்த்தீர்களா? அத்தனை உரிமைகளும் பறிபோகும்!" இப்படி ஒரு தீர்க்கதரிசனம்!
"எதிர்கட்சிக்கு மட்டும் வாக்களித்து விடாதீர்கள்! உங்களை அம்போ என்று விட்டுவிடுவார்கள்! எங்களை நம்புங்கள். எங்களால் மட்டுமே உங்களைக் காப்பாற்ற முடியும்!" என்று எல்லா தலைகளும் புருடா விட்டன!
இப்படி எல்லாம் பேசினால் யாருக்குத் தான் வாக்களிப்பது? குறிப்பிட்ட அந்தத் தொகுதியில் என்ன தான் பிரச்சனை என்று யாரும் கேட்கவில்லை. இது நாள் வரை என்ன தான் குறை என்று அறிந்து தெரிந்து அதனைச் சரி செய்ய யாருக்கும் துணிவில்லை. வெட்கமாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய? ஏற்கனவே சொல்லப்பட்ட, உறுதி கூறப்பட்டவைகள் எதனையும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரால் செய்ய முடியவில்லை. அந்தக் கட்சியினர் வியாதியால் துன்பப்பட்ட ஒருவரை அங்கே நிறுத்தியிருந்தனர். அதனால் எந்த வேலையும் ஓடவில்லை என்பது தான் உண்மை.
எப்படி இருந்தாலும் அந்தத் தொகுதி மக்கள் தான் அவர்கள் பிரச்சனையை கையில் எடுத்தனர். சும்மா இருந்தால் சோத்துக்கு ஆகாது என்று தெரிந்து கொண்டு கடுமையான முயற்சிகளுக்குப் பின்னர் தான் அத்தனை தலைகளும் பேச ஆரம்பித்தன! மீண்டும் மீண்டும் உறுதி மொழிகள் கொடுக்கப்பட்டன. பேசப்பட்டன. விவாதிக்கப்பட்டன.
அதன் பின்னர் தான் மக்கள் பஞாயத்தை ஏற்றுக் கொண்டனர். இது தான் தேர்தலுக்கு முன் உள்ள நிலைமை.
No comments:
Post a Comment