ஒரு நான்கு வயது சிறுவனுக்கு நேர்ந்த துயரம். என்ன சொல்லுவது? எப்படிச் சொல்லுவது?
குழந்தைகளுக்குத் தண்டனைக் கொடுப்பதில் கூட எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள், எப்படியெல்லாம் செயல்படுகிறார்கள்? மிருகங்கள் கூட தங்களது குட்டிகளை எப்படியெல்லாம் பாதுகாக்கின்றன. மனிதனுக்கு மட்டும் ஏன் புத்தி இப்படிப் போகிறது? நம்மாலும் புரிந்துகொள்ள முடியவில்லை.
சிங்கப்பூர் அரசாங்கத்தின் தண்டனைகள் தான் கடுமையானது என்றால் சிங்கப்பூரியரின் மனமும் கல்லாகத்தான் இருக்கும் போல் தோன்றுகிறது! என்ன செய்ய? ஒரு குழந்தைக்கு இப்படியா தண்டனைக் கொடுப்பார்கள்?
அவன் நான்கு வயது குழந்தை. ஏதோ அவனது உடையிலேயே மலம் கழித்துவிட்டான். பொறுமை காப்பது கடினம் தான். ஆனால் என்ன செய்ய? பொறுமை காப்பது பெற்றோரின் கடமை. அந்த இடத்தில் தாய் இருந்திருந்தால் அவள் அந்தத் தவற்றினைச் செய்திருக்க மாட்டாள். தகப்பன்மார்களுக்குப் பொறுமை இல்லை.
தண்டனையாக தந்தை குழந்தையின் வாயில் மிளகாயைத் திணித்துவிட்டிருக்கிறார். அந்த மிளகாய் தொண்டையில் போய் சிக்கிக் கொண்டது. அதுவே குழந்தையின்மரணத்திற்குக் காரணமாகிவிட்டது. பாவம். அந்தக் குழந்தையின் ஆயுள் அவ்வளவு தான் என்று மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.
முப்பத்தெட்டு வயதான குழந்தையின் தந்தைக்கு எட்டு மாத சிறத்தண்டனையை நீதிமன்றம் விதித்திருக்கிறது. இப்போது அவர் சிறைத்தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.
சந்தித்த வேளை, சிந்திக்கவே இல்லை இழந்துவிட்டேன் உன்னை.
No comments:
Post a Comment