அசியல்வாதிகளின் ஏமாற்று வேலைகளுக்கு அளவே இல்லையா? அதைத்தான் கேட்கிறோம் இந்த இடைத்தேர்தலில்! அதனை ஏன் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?
தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளின் உருட்டல்களை நம்பித்தான் வாக்குகள் அளிக்கிறோம். பதவிக்கு வந்தவுடன் அவன் மேலே போகிறான் நாம் கீழே போய்விடுகிறோம்!
அது பற்றி நமக்குக் கவலையில்லை. அவனுக்கு இருக்கிற அதே உரிமை நமக்கும் இருக்கிறது. சில தேசிய பிரச்சனைகளைப் பற்றி நாம் பேசப்போவதில்லை. ஆனால் அந்தத் தொகுதி மக்கள் ஏமற்றப்பட்டிருக்கிறார்களே அது பற்றி நாம் பேசித்தான் ஆக வேண்டும்.
அந்தத் தொகுதியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஜ.செ.கட்சியைச் சேர்ந்தவர். மூன்று தவணைகள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தும் அவர் அங்கு நிலவிய வீடமைப்புத் திட்டத்திற்கு ஆதரவு தரவுமில்லை; முடிவுக்குக் கொண்டு வரவுமில்லை. அதனால் தான் இது நாள் வரை இத்தனை இழுத்தடிப்புகள். இழுத்தடிப்பு என்றால் ஜ.செ.க. செயல்படவில்லை என்பது தான் பொருள்.
என்ன காரணமாக இருக்கும்? வெளிப்படையாக நமக்குத் தெரியவில்லை. மேலோட்டமாகப் பார்க்கும் போது நிலம் சீனர்களுடையது வீடுகள் இந்தியர்களுக்கானது - என்று தான் இருக்க வேண்டும். அது தான் மலேசிய சூழல். சீனர்கள் என்னும் போது ஜ.செ.கட்சி செயல்படாது என்பது நமக்குத் தெரியும். இந்தியர்களுக்கு என்றால் ஜ.செ.க. அலட்சியம் காட்டத்தான் செய்யும்! அது தான் அவர்களது வாடிக்கை!
அதனால் தான் அங்குள்ள இந்தியர்கள் போர்க்கொடி தூக்குகின்றனர். வீடமைப்புப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு இல்லையென்றால் "எங்கள் வாக்கு எதிர்கட்சியினருக்கே!" என்கிற கோஷம் சரியானது தான்!
அரசாங்கம் நமது உரிமைகளுக்கு மரியாதை தரவேண்டும். கல்வி, வர்த்தகம் என்பதெல்லாம் வெறும் பேச்சளவில் தான். அது தேசியப் பிரச்சனை. நமக்கு இந்தத் தொகுதியே இப்போதைய பிரச்சனை. கோலகுபுபாரு மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். கிடைக்கும் என்கிற உறுதிமொழி இருந்தால் பக்காத்தானுக்குத் தாராளமாக வாக்களிக்கலாம்.
No comments:
Post a Comment