நன்றி: வணக்கம் மலேசியா
வேலையில்லா பட்டதாரிகளுக்கும், வேலையில்லா பட்டறிவு பெற்றவர்களுக்கும், வேலையில்லா படித்து, கல்விகற்று வேலை தேடுபவர்களுக்கும் இதோ வேலை வாய்ப்புகளைத் தேடித்தருகிறது மேலே உள்ள அறிவிப்பு.
மனிதவள அமைச்சும் சோக்சோவும் சேர்ந்து ஏற்பாடுகளைச் செய்திருக்கும் இந்த ஆண்டின் முதல் வேலைவாய்ப்பு கண்காட்சி இந்த வாரம் நடைபெறுகிறது.
வருகிற சனி ஞாயிறு (11-2-2023/12-2-2023) இந்த இரு நாள்களிலும் இந்தக் கண்காட்சி கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறும். இந்தக் கண்காட்சியில் 140 க்கும் மேற்பட்ட அரசாங்க - தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ளும்.
படித்தவர்கள், பட்டதாரிகள், நிபுணத்துவ துறைகளைச் சேர்ந்தவர்கள் என பல துறைகளைச் சேர்ந்தவர்களும் இந்தக் கண்காட்சியில் கலந்து கொள்ளுமாறு மனிதவள அமைச்சு அழைப்பை விடுத்திருக்கிறது.
இந்தக் கண்காட்சியின் மூலம் சுமார் 10,000 வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியுமென மனிதவள அமைச்சு நம்புகிறது.
நமது இளைஞர்களும் காலாகாலமும் குறைசொல்லுவதையே கொள்கையாக கொண்டிருக்கும் நம் இன நண்பர்களும் முடிந்தவரை இந்த கண்காட்சியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என நாமும் இந்த வேளையில் கேட்டுக் கொள்கிறோம்.
முயற்சி செய்யுங்கள். முயற்சியால் முடியாதது என்று எதுவுமில்லை. முயற்சி திருவைனையாக்கும் என படித்திருக்கிறோம். அதற்கு செயல் வடிவம் நீங்கள் தான் கொடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment