Sunday 17 November 2019

பாரிசான் மீண்டும்....!

தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் தேசிய முன்னணியின் வெற்றி நம்மைக் கொஞ்சம் சிந்திக்க வைக்கிறது என்பது உண்மை.

மக்களின்,  முன்னாள் பிரதமர் நஜிப் மீதான கோபம் தணிகிறதா,  என்கிற எண்ணத்தையும் ஏற்படுத்துகிறது! அல்லது ஆளுங்கட்சியான பக்காத்தான் ஹரப்பான் மேல் உள்ள அதிருப்தியை வெளிப்படுத்துகிறதா என்பதையும் யோசிக்க வைக்கிறது.

                               Datuk Seri Dr.Wee Jeck Seng won Taanjung Piai by-election

என்ன தான்  ம.சீ.ச. வை மக்கள் வெறுத்து ஒதுக்கினாலும் அது மீண்டும், இந்த வெற்றியின் மூலம், புதிய நம்பிக்கையை அக்கட்சிக்கு  ஏற்படுத்தியிருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியது தான். 

இப்போது ஆளுங்கட்சியான பக்காத்தானின் கூட்டணிக்கு என்ன தான் பிரச்சனை? 

அம்னோவும் பாஸ் கட்சியும் இந்த வெற்றியின்  மூலம் வருங்காலப் பொதுத் தெர்தல்களில் ஒரு புதிய யுக்தியைக் கையாளுவார்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது.  ஆம் இனம், சமயம் என்பது அவர்களது பலம். அதுவும் குறிப்பாக இஸ்லாம்  தான் அவர்களது  ஆயுதம்!

ஆனால் இவைகளையெல்லாம் முறியடிக்கக் கூடிய பலம் பக்காத்தானிடம் இருக்கிறது. இப்போதுள்ள மலாய் இளைஞர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் சமயம் என்னும் வலையில் விழ மாட்டார்கள். 

இப்போதைய பிரச்சனையெல்லாம் பக்காத்தான் ஹராப்பான் முழுமையாக இயங்க முடியவில்லை என்பது தான் குற்றச்சாட்டு.  பக்காத்தான் கட்சி சென்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் செயல்படுத்த முடியவில்லை!  

பக்காத்தான் செயல்பட முடியாமல் முட்டுக்கட்டையாக இருப்பவர் பிரதமர்,  டாக்டர் மகாதிர்.  முன்னாலும் போக முடியவில்லை பின்னாலும் வர முடியவில்லை.  எந்த நகர்வும் இல்லை என்பதால் அரசாங்கம் செயல்பட முடியவில்லை.

டாக்டர் மகாதிருக்கு ஒரே பிரச்சனை முன்னள் பிரதமர் நஜிப். அவரின் கோபம் நஜிப் மீது மட்டும் தான். அவருக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும். அது தான் அவரது இலட்சியம்.  மற்றபடி அம்னோ ஆட்சியில் இருப்பதையே அவர் விரும்புகிறார்.  மலாய் கட்சி தான் ஆட்சியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.  பல்லின கட்சியான பி.கே.ஆர். வருவதை அவர் விரும்பவில்லை.

பக்காத்தான் இன்றைய நிலையில் செயல்பட முடியவில்லை என்பது தான் உண்மை.  டாக்டர் மகாதிர் செயல்பட விடவில்லை.  தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட முடியவில்லை.

மக்களுக்கு ஆளுங்கட்சியில் மேல் நம்பிக்கை சரிந்து வருகிறது.  விலைவாசிகள் குறையவில்லை. இலஞ்சம் மீண்டும் தலை தூக்க ஆரம்பித்து விட்டன  என்பதாக செய்திகள் கூறுகின்றன!

நாட்டை நல்ல நிலைக்குக் கொண்டு வர அன்வார் இப்ராகிம் பிரதமராக வர வேண்டும்.  நாடு நல்ல நிலைமைக்குப் போகும் நிலை ஏற்பட்டால் தான் மக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வரும்.

இப்போது அரசாங்கத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை வரவில்லை. அதனால் மீண்டும் பாரிசான் வரலாம் என்று தான் சொல்ல வேண்டி வருகிறது! பார்ப்போம்!
   

No comments:

Post a Comment