Thursday 21 November 2019

எதுவும் அவர்களுக்கு மண்டையில் ஏறாது..!

தமிழ்ப்பள்ளிகளின் யூ.பி.எஸ்.ஆர். தேர்ச்சி நிலை 78.51% என அறியும் போது நமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. 

இப்படி ஒரு தேர்ச்சியை அடைவதற்கு ஆசிரியப் பெருமக்கள். பெற்றோர் ஆசிரியர் சங்கம், பொது இயக்கங்கள் - இப்படி பலருடைய முயற்சிகள் பெரும் வெற்றியை அளித்திருக்கின்றன. பெற்றோர்களுடைய ஒத்துழைப்பையும் நாம் குறைத்து மதிப்பிடவிட முடியாது. பெற்றோர்களின் ஆர்வம், அவர்களுடைய தூண்டுதல், பிள்ளைகளின் குறிக்கோள்களை உருவாக்குவதில்  பெற்றோருடைய பங்கு என்பது மிகவும் முக்கியம் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். 

இந்த நேரத்தில் பெற்றோர்கள் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இது வரையில் அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் கொஞ்சம் பாதுகாப்பாக இருந்தார்கள்.  இந்திய ஆசிரியகளால் அவர்கள் வழி நடத்தப்பட்டார்கள். நல்ல வழிகளை அவர்கள் காட்டினார்கள்.  உங்கள் வீட்டுப் பிள்ளைகளும் நல்லபடியாக வளர்ந்தார்கள். அதுவும் பெற்றோர்களுக்குக் கீழ்படிந்தவர்களாக இருந்தார்கள்.

இனி நடக்கப் போவது மாணவர்களுக்குக் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.  எல்லாப் பாடங்களிலும் ஏ வாங்கியவர்களையும் எல்லாப் பாடங்களிலும் இ வாங்கியவர்களையும் ஒரே வகுப்பில் போட்டு அடைத்து வைப்பார்கள்!  தேசியப்பள்ளிகளில் உள்ளவர்களுக்கு எந்த வகுப்பில் யாரைப் போடுவது என்கிற வித்தியாசமெல்லாம் அறியாத மரமண்டைகள் அதிகம்! அப்படிச் செய்வதற்குக் காரணங்கள் உண்டு. 

தமிழ்ப்பள்ளியில் நல்ல முறையில் தேர்ச்சி அடைந்தவன் - இப்படி செய்வதன் மூலம் - நாளடைவில் மண்டாக மாறி விடுவான்! அதைத்தான் தேசிய பள்ளிகள் விரும்புகின்றன!   சாதனைகள் செய்யத் தெரியாவிட்டாலும் சாத்தான் வேலைகள் செய்ய அவர்களில் அதிகம்!

இது ஒரு எச்சரிக்கை தான். பெற்றோர்கள் தான் கவனமாக இருக்க வேண்டும். படிக்கிறவனையும், படிக்காதவனையும் ஒரே வகுப்பில் போட்டால் ஒருவனும் உருப்பட மாட்டான்! அதனால் கவனமாக இருங்கள்.  தெரிந்தவர்களை அணுகி நடவடிக்கை எடுங்கள். 

என்ன செய்வது? பொறாமை என்பது எப்படி இருக்கும் என்பதை நீங்களே கண்டு கொள்ளுவீர்கள். தக்கவர்களை அணுகி நடவடிக்கை எடுங்கள். தாய் மொழிப் பள்ளிகள் வேண்டாம் என்று நினைப்பவனின் மன நிலை எப்படி இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுவீர்கள்.

நமக்குப் பிள்ளைகளின் எதிர்காலம் முக்கியம்.  அதனால் கவனமாக இருங்கள்.  விட்டுக் கொடுக்காதீர்கள்.  உங்களால் முடியவில்லை என்றால் சரியான ஆள்கள் மூலம் பிரச்சனைக்குத் தீர்வு காண முயலுங்கள். 

நல்லது நடக்கும். நல்லவர்களும் இருக்கிறார்கள்! 
 

No comments:

Post a Comment