Monday 4 November 2019

அடுத்த பிரதமர் அன்வாரே!


"அடுத்த பிரதமர் அன்வாரே, அஸ்மின் அல்ல!" என்று தாய்லாந்தில் ஒரு பத்திரிக்கை பேட்டியின் போது கூறியிருக்கிறார் பிரதமர் மகாதிர்.

இப்படி அவர் கூறுவதால் நாம் மகிழ்ச்சியடைந்து விட முடியாது.  ஒவ்வொரு முறையும அவர் கூறும் போதும்   அதன் பின்னால் ஏதோ ஒன்று ஒளிந்திருப்பதும் தான்  நமது அனுபவ்ம்.

அது மட்டும் அல்ல. அவருடைய கட்சியினர் அல்லது அவருடைய விசுவாசிகள் அன்வாருக்கு எதிரான ஒரு விளக்கம் கொடுப்பதும் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது. பிரதமர் மகாதிர் அவர்களைக் கண்டிக்காமல் இருப்பது அன்வாரின் எதிரிகளை அவர் ஆதரிக்கிறார் என்கிற தோற்றத்தை அவர் ஏற்படுத்துகிறார்.

அன்வார்க்கு எதிராக கருத்துக் கூறுபவர்களை பிரதமர் மகாதிர் கண்டிக்கவில்லை என்றால் அவர் அவர்களை ஆதரிக்கிறார் என்பது தான் பொருள்!  அவர் இது வரையில் அன்வாருக்கு எதிராகப் பேசுபவர்களைக் கண்டீக்கவில்லை . அவர் அவர்களுக்கு ஆதரவாகவே இருக்கிறார் என்பது தான் அதன் அர்த்தம்.

அவர் இன்னும் எத்தனை முறை "அன்வார் தான் அடுத்த பிரதமர்!"  என்று சொன்னாலும் அது அவரின் மனதிலிருந்து வரவில்லை என்பதாகத்தான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். வெளி உலகிற்கு அவர் தன்னை உத்தமன் என்று காட்டிக் கொள்வதால் மட்டும் பிரச்சனைகள் தீர்ந்து விடப் போவதில்லை!

இவர் போகின்ற போக்கும், இவருடைய ஆதரவாளர்கள் என்று சொல்லப்படும் தரப்பும், பேசுகின்ற பேச்சுக்களும் நமக்கு மன நிறைவைத் தரவில்லை. அடுத்த பிரதமர்  பிரச்சனை என்பது தொடர்ந்து இழுபறியாகவே இருக்கும்.

நம்முடைய ஆருடம் என்பது  பிரதமர் மகாதிர் அடுத்த தேர்தல் வரை நீடிப்பார் என்றே தோன்றுகிறது.  இடையே போவதற்கு அவரும் தயாராக இல்லை அவருடைய ஆதரவாளர்களும்  அவரை விடத் தயாராக இல்லை  என்பது தான் பொருத்தமாக இருக்கும்!

அடுத்த பிரதமரிடம் பதவி ஒப்படைத்தால் மட்டுமே எதனையும் உறுதி செய்ய முடியும்.  அதுவரை பிரதமர் மகாதிர் சொல்லுவதை சும்மா ஒரு காதில் வாங்கி இன்னொரு காதில் விட்டு விட்டுப் போக வேண்டியது தான்!

"வரும்! ஆனால் வராது!" என்கிற கதை தான்!

No comments:

Post a Comment