Tuesday 5 November 2019

ஏன் இந்த குற்றச்சாட்டு?


பொதுவாகவே நம் நாட்டில் "அடுத்த பிரதமர் யார்?" என்கிற கேள்வி அடிக்கடி எழுந்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் அறிவோம்.

இதில் ஏதொ மந்திரமோ மாயமோ ஒன்றுமில்லை!  பத்திரிக்கை நிருபர்கள் இந்த கேள்வியைக் கேட்கும் போதெல்லாம் அந்த பிரச்சனை விவாதிக்கப்படுகிறது அல்லது மீண்டும் தலை தூக்குகிறது.  

கடைசியாக பிரதமர் மகாதிர் தாய்லாந்தில் நடைபெற்ற  ஒரு மாநாட்டிக்குப் பின்னர் மீண்டும் இந்த கேள்வியை ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர் ஒருவர் எழுப்பியிருக்கிறார். அதனால் மீண்டும்  பிரதமர் மகாதிர் அதற்கான பதிலை கொடுத்திருக்கிறார். இந்த இடத்தில் கூடுதலான ஒரு தகவலையும் வெளியிட்டிருக்கிறார். அடுத்த பிரதமர் அன்வர் தான் அஸ்மின் அலி அல்ல என்பதாகவும் விளக்கமளித்திருக்கிறார்.

அடுத்த பிரதமர் யார்? என்கிற கேள்வி எழும் போதெல்லாம் இங்குள்ள ஒரு சிலருக்கு அது பிடிப்பதிலை.  ஒரு சில மலாய் அரசு சாரா அமைப்புக்கள், ,பாஸ்  அம்னோ கட்சிகளுக்கு அது பிடிப்பதில்லை. இந்த பிரச்சனை பொது வெளியில் இப்படி அடிக்கடி சர்ச்சையாவதும் பின்னர் அது  அப்படியே அமிழ்ந்து போவதும்  நமக்குத் தெரிந்தது தான்.

பிரச்சனை என்னவென்றால்  இந்தக் குற்றச்சாட்டை ஏன் அன்வார் மீது வைக்கிறார்கள்?  அன்வார் பிரதமர் பதவிக்கு அலைவதாக ஏன் குற்றம் சாட்டுகிறார்கள்?

சரி அன்வார்  அலைவதாகவே எடுத்துக் கொள்ளுவோம்.  

இன்று நாட்டின் நிலைமை எப்படி உள்ளது?  பிரதமர் மகாதிர் மீதான மக்களின் மதிப்பு தாழ்ந்து உள்ளது.   புதிய அரசாங்கத்தை அமைத்த பக்காத்தான் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திணருவதற்கு மகாதிரே காரணம். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள்  அனைத்தும் கிடப்பில் போடப்பட்டு விட்டன! எதனையும்  நிறைவேற்ற முடியாமல் பக்காத்தான் கட்சியினர் மனதுக்குள் புழுங்குகின்றனர். காரணம் பிரதமர் மகாதிர்.

உள் நாட்டில் ஜாகிர் நாயக் பிரச்சனையைத்  தீர்க்க முடியாமல் கடைசியில் விடுதலைப்புலிகள் பிரச்சனையைக் கையில் எடுத்திருக்கிறார்.  தமிழர்கள் தான் இளிச்சவாயர்கள்! வெளி நாட்டில் இந்தியாவை பகைத்துக் கொண்டு செம்பணை எண்ணையின் ஏற்றுமதியை  வீழ்ச்சியடைய செய்திருக்கிறார்!

இவர் பிரதமர் பதவியில் தொடர்ந்தால் நமது நாடு இன்னும் பல இடர்களைச் சந்திக்க வேண்டி வரும் என்பது  பெரும்பானமை மக்களிடையே உள்ள கருத்து. அது உண்மை தான்.  தேர்தல் வாக்குறுதிகள் என்பதை எல்லாம் மறந்து போனார். இவர் செய்கின்ற செயல்கள் வருங்கால மலேசியாவை பாதிக்கும். இவர் எவ்வளவு சீக்கிரத்தில் பதவி விலக முடியுமோ அது நாட்டுக்கு நல்லது!

குற்றச்சாட்டு என்பது அன்வார் மீது அல்ல, மகாதிர் மீது தான்!

No comments:

Post a Comment