Friday 22 November 2019

இன்னும் மீதம் மூன்று கோடி உள்ளது...!

இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக மித்ரா மூலம் ஒதுக்கப்பட்ட பத்து கோடி வெள்ளி மானியத்தில் இன்னும் மீதம் மூன்று கோடி வெள்ளி பயன்படுத்தாமல் இருப்பதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் தீபாவளி உபசரிப்பு ஒன்றில் அறிவித்திருக்கிறார்.

அந்த நிதியினை பயன்படுத்தாவிட்டால் அது மீண்டும்  அரசாங்கத்திடமே ஒப்படைக்கப்படும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

கடந்த பாரிசான் ஆட்சியிலும் இந்தியர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்தப்படாமல் அது மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு அப்புறம் அது காணாமல் போனதாக செய்திகள் வந்தன! 

இப்போதும் அதே செய்தி மித்ரா அமைப்பிலும் வருவது கண்டு நமக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. 

இதில் முக்கியமாக நமக்கு வேண்டியதெல்லாம் மித்ரா அமைப்பின் மூலம் வர்ததகர்கள் எந்த அளவுக்குப் பயன் பெறுகிறார்கள் என்பது தான்.  நிச்சயமாக பெரிய வர்த்தகர்கள் பெரிய அளவில் பயன் பெறுகிறார்கள் என நம்பலாம். ஆனால் சிறிய வர்த்தகர்கள்,  அப்போதும் சரி இப்போதும் சரி,  பயன் பெறுவது என்பது பொதுவாக இல்லை என்று சொல்லலாம்.  ஆனால் மித்ராவின் முக்கிய நோக்கம் சிறிய வர்த்தகர்களும்அதிகமாக பயன் பெற வேண்டும் என்பது தான்.  ஆனாலும்  சிறிய வர்த்தகர்களுக்கு எந்த அளவு மித்ராவின் செய்திகள் போய்ச் சேருகின்றன என்பது தான் நம் முன்னே உள்ள பிரச்சனை.

மித்ரா, அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தலைமையேற்ற பிறகு, அது பற்றிய செய்திகள் எதுவும் பத்திரிக்கைகளில் காண முடிவதில்லை. அது ஏன் என்று இன்றளவும் எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை ஆங்கிலப் பத்திரிக்கைகளில் மட்டுமே செய்திகள் கொடுக்கப்படுகின்றனவா?  மித்ரா என்கிற ஓர் அமைப்பு, பிர்தமர் துறையின் கீழ் இயங்குகிறது. என்கிற செய்தியைக் கூட பத்திரிக்கைகளில் பார்க்க முடிவதில்லை.

இப்போது நாம் நிதியமைச்சர் லிம் குவான் எங் கொடுத்த செய்தியைப் பார்ப்போம்.  இப்போது இன்னும் மூன்று கோடி வெள்ளி பயன்படுத்தப்படாமல் மித்ராவில் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். அப்படிப் பயன்படுத்தாமல் போனால் அந்த பணம் மீண்டும் திருப்பி அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என்பதாக அவர் நமக்கு அவர் ஞாபகப்படுத்துகிறார். 

இப்படி ஒரு செய்தியை அமைச்சர் பொன்,வெதமூர்த்தி கூட நமக்குக் கொடுக்கவில்லை என்பது நமக்கு வருத்தமான செய்தி தான்.

ஆனாலும் பெருமக்களே மீதம் அந்த மூன்று கோடி வெள்ளி மானியத்தைப் பயனபடுத்திக் கொள்ள இன்னும் ஒரு மாதமே இருக்கின்றது என்பதை உங்களது கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். மானியத்துக்காக விண்ணப்பம் செய்ய விரும்புவோர் நேரடியாக அமைச்சர் வேதமூர்த்தியின் அலுவலகத்திற்கு மனு செய்ய  இந்த நேரத்தில் கேட்டுக் கொள்ளுகிறேன்.

தவறுகள் அமைச்சர்கள் செய்யலாம். ஆனால் நாம் செய்யக் கூடாது!

No comments:

Post a Comment