Tuesday 26 November 2019

ஜாகிர் நாயக் ஒரு மலேசியப் பிரஜை!

பிரபல இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் ஒரு மலேசியப் பிரஜை என்பதை நாம் மறந்துவிடுகிறோம். 

நமது நாட்டின் சட்டம் என்ன சொல்லுகிறது என்பதை மறந்து விடுங்கள்.  சட்டத்தை நமது அரசாங்கம் என்றுமே மதித்ததில்லை. அப்படி மதித்திருந்தால் இங்கு பிறந்த எண்ணற்ற இந்தியர்களில் பலர் நாடாற்றவர்களாக இருக்க முடியுமா?

இப்போது புதிதாக நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் ஜாகிர் நாயல் மலேசிய குடியுரிமை பெற்றவர். இந்த நாட்டின் பிரஜை ஒருவருக்கு அரசியல் ரீதியாக என்னன்ன தகுதிகள் உள்ளனவோ அந்த தகுதிகள் அனைத்தையும் அவரும் பெற்றிருக்கிறார்!  இது ஒன்றே போதும அவரின் செல்வாக்கு எந்த அளவுக்குக் கொடி கட்டிப் பறக்கிறது என்று தெரிந்த கொள்ள! 

அடுத்த பொது தேர்தலில் அவருடைய  செல்வாக்கை பயன்படுத்திக் கொள்ள அம்னோ-பாஸ் இரண்டு கட்சிகளும் போட்டிப் போடும் என நம்பலாம்.  அந்த அளவுக்கு நாளுக்கு நாள் அவரின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது!  

அவர் இந்த நாட்டு பிரஜை. இனி யாரும் அவரை "உங்கள் நாட்டுக்குப் போங்கள்!" என்று சொல்ல முடியாது.   அப்படிச் சொன்னாலும் அது எடுபடாது என்பது நமக்குத் தெரியும்.

அவரின் சமீப கால நடவடிக்கைகளைப் பார்க்கும் போது தேர்தலில் கூட அவர் போட்டி இடக் கூடிய  வாய்ப்புக்கள் பிரகாசமாக உண்டு!

உள் நாட்டைச் சார்ந்தவர்கள் மீது வழக்குப் போடும் உரிமையை அவர் பெற்றிருக்கிறார். போட்டுக் கொண்டும் இருக்கிறார்!

ஜாகிர் நாயக்கை இங்குள்ள தமிழர்கள் எதிர்க்கிறார்கள் என்பதால் அவர்களின் வாயை அடக்க விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் என்று சொல்லி சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு துன்புறுத்த்ல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். விடுதலைப் புலிகள் என்பதாக எந்த ஒரு இயக்கமும் இப்போது இல்லை.  ஆனால் இங்குள்ள நமது சட்டம் இல்லாத ஒன்றை வைத்துக் கொண்டு பயங்கரவாதிகள் என்பதாக சொல்லி கைது செய்திருக்கிறார்கள்!  இது பற்றி நாம் கேட்டால் "இது எங்களுடைய சட்டம்! மற்ற நாடுகளோடு ஒப்பிடாதீர்கள்!" என்கிறார்கள். 

அந்த அளவுக்கு ஜாகிர் நாயக்கின் செல்வாக்கு நாட்டில் உயர்ந்து நிற்கிறது! கொடி கட்டிப் பறக்கிறது! இப்போது நாட்டில் சமயங்களைப் பற்றி பேசுவதற்கு ஜாகிர் நாயக் மட்டுமே உரிமை பெற்றிருக்கிறார்!

ஜாகிர் நாயக் நம்மைப் போலவே அனைத்து உரிமைகளையும் பெற்றிருக்கிறார். அவருக்காக சட்டம் வளைந்து கொடுத்து எத்தனையோ ஆண்டுகளாகி விட்டன.

ஆமாம், அவர் ஒரு மலேசியப் பிரஜை!

No comments:

Post a Comment