Friday 9 December 2022

அடுத்த ஐந்து ஆண்டுகள் எப்படியிருக்கும்?

 


அடுத்த ஐந்து ஆண்டுகள், நமது பிரதமர் அன்வார் இப்ராகிம் கீழ்,  நமது நாடு எதனை நோக்கிப் போகும், எந்தத் திசை நோக்கிப் போகும், என்ன நிலையில் நாடு இருக்கும் போன்ற கேள்விகள் எழுவது இயல்பு.

இத்தனை ஆண்டுகள் நாம் இது பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை. சிந்திக்க வேண்டிய தேவை எழவில்லை. மலேசிய இந்தியர்களின் தாய் கட்சி என்று அவர்களே கூறிக்கொள்ளும் ம.இ.கா. என்ன நிலையில் இருந்ததோ அதே நிலையில் தான் நாடும் இருந்தது!  அரசாங்கம் எப்படி சரியாக இல்லையோ அப்படித்தான் அரசியல் கட்சிகளும் இருந்தன!  மக்களும் திசை தெரியாமல் இருந்தனர்.

இப்போதும் கூட பிரதமர் அன்வார் தான் நினைத்தவாறு செயல்பட முடியாத நிலையில் இருந்தாலும் கூட  அவர் எதனையும் கடந்து செல்லக் கூடிய ஆற்றல் உள்ளவர் என்பது தான் அவரின் பலம். அவ்வளவு சீக்கிரத்தில் அப்படி எதனையும் அவர் விட்டுக்கொடுத்த  விடமாட்டார்.

அவரது ஆட்சியில் பண விரயம் என்பது நடக்காத காரியம். அவர் எப்பொழுதும் ஏழைகளின் மீது அக்கறை காட்டுபவர். அதனை அவர் இப்பொழுதே ஆரம்பித்து விட்டார்.  விலைவாசிகள் குறைய வேண்டும் என்பதில் தீவிரமாக அக்கறை காட்டுகின்றார். அதனை நாம் இப்போதே பார்க்கிறோம். அவருடைய அமைச்சர்களும் தீவிரமாக விலைகள் குறைவதில  அக்கறை காட்டுகின்றனர். ஏன்? களத்தில் இறங்கி வேலையும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்!  நல்ல தலைவன் இருந்தால்  நாடு நல்ல நிலைக்குக் கொண்டு செல்லப்படும் என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான்.

இத்தனை ஆண்டுகள் நாட்டை வழிநடத்தியவர்கள் மக்களைப்பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் இருந்தனர். அமைச்சர்கள் வீட்டுப் பெண்மணிகள்  வெளி நாடுகளில் 'ஷாப்பிங்' செய்தனர். உள்நாட்டில் தாங்கள் விரும்பியபடி பொருள்கள் கிடைக்கவில்லையாம்! அதனால் அவர்கள் உள்ளூரை வெறுத்துவிட்டு வெளிநாடுகளுக்குப் பயணம் செய்தனர்!

கடந்தகால ஆட்சியில் அதிகமாக 'ஊழல்! ஊழல்!' எம்று குரல் கேட்டனவே அவைகள் எல்லாம் யாரால்  வந்தன? பெரும்பாலும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்  இவர்களுக்கு ஏற்றபடி நாட்டின் சூழல் அமையவில்லை! அதனால்  அனைத்தும் வெளிநாடுகள் தான் அவர்களுக்குத் தோதாக அமைந்தன! ஆமாம், இங்கு ஊழல் செய்வது, இலஞ்சம் வாங்குவது இந்தப் பணத்தைக் கொண்டு போய் வெளிநாடுகளில் செலவு செய்வது!

இது போன்ற விஷயங்கள் இனி நடவாது என்பதை உறுதியாக நம்பலாம்.  ஊழல் செய்த தேசிய முன்னணியின் அமைச்சர்கள் இன்றும் அமைச்சரைவையில் இருக்கிறார்கள் என்பது உண்மை தான். ஆனால் முன்பிருந்த துணிச்சல் இப்போதைய ஆட்சியில் செய்ய அவர்களுக்குத் துணிவு  இராது என நம்பலாம்.

அடுத்த ஐந்து ஆண்டுகள் பிரதமர் அன்வாரின் ஆட்சி சிறப்பாகவே இருக்கும்.  விலைவாசிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உள்ளூரில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். மக்களிடையே புரிந்துணர்வு ஏற்படும்.

பிரதமர் அன்வாரின் கீழ் அடுத்த ஐந்து ஆண்டுகள், சவால் நிறைந்ததாக  இருந்தாலும், வெற்றிகரமாகவே அமையும்  என நம்பலாம்!

No comments:

Post a Comment