Friday 23 December 2022

பிரதிநிதித்துவம் தேவையா?

 


இன்று நம்மிடையே பேசுபொருளாக இருப்பது "இந்தியர்களுக்கு இந்தியர்களின் பிரதிநிதித்துவம் இல்லாத போது உங்களின் பிரச்சனைகளுக்கு யாரைத் தேடி போவீர்கள்?" என்கிற கேள்வி எழுப்பபபடுகிறது.

நாம் அதனைப் புரிந்து கொள்கிறோம். இந்தக் கேள்வியை எழுப்புபவர்கள்  பெரும்பாலும் ம.இ.கா. வினர் தான்! ம.இ.கா. தலைவர்கள் தாம்!  நாம் உங்கள் தயவு வேண்டாம் என்னும் சொல்லும் போது அவர்கள் இப்படி கேள்வி கேட்கிறார்கள். அவர்கள் தயவைத் தேடிப் போன போது அவர்கள்  நம்மை கண்டு கொள்ளவில்லை! 

நாம் இங்கு சொல்லி வருவதெல்லாம் அதாவது இந்தியர்களின் மனக்குறை என்னவென்றால் நம்மைப் பிரதிநிதிக்கிறோம் என்று சொன்னவர்கள் நம்மைப் பிரதிநிதிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு தான்!  சுருக்கமாகச் சொன்னால் கடந்த பல ஆண்டுகளாக இந்தியர்களை யாரும் பிரதிநிதிக்கவில்லை என்பது தான் நிதர்சனம்!  இந்தியர்களின் பிரதிநிதித்துவம் என்பது தோல்வியடைந்து விட்டது!

அதனால் தான் நமக்கு எந்தப் பிரதிநிதித்துவமும் வேண்டாம் என்கிற நிலைக்கு மலேசிய இந்தியர்கள் வந்துவிட்டார்கள். இப்போது யாரைத் தேடி  நாம் போவோம்? மேலே அமைச்சர்கள் இருக்கிறார்கள்.  ஒவ்வொரு தொகுதியுலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். இத்தனை ஆண்டுகள் நாம் அவர்களைக் கண்டு கொள்ளவில்லை. அதனால் என்ன? இனிமேல் நாம்  அவர்களை  வேலை வாங்குவோம். அவர்கள் ஒன்றும் மறுக்கவில்லையே! நாம் அவர்களை பயன்படுத்திக் கொள்ளவில்லை! அதுதான் பிரச்சனை!

இன்னொன்றையும் நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைத்து இனங்களையும் தானே பிரதிநிதிக்கின்றனர். அவர்கள் இந்தியர்களையா  தேடி ஓடுகிறார்கள்? நாம் மற்ற இனத்தவர்களைப் பயன்படுத்திக் கொள்வதில்லை! அவ்வளவு தான்.

இனி மலேசிய இந்தியர்களின் பிரச்சனை என்பது அரசாங்கத்தின் பிரச்சனை. நமது பிரச்சனைகளை அரசாங்கத்திற்குக் கொண்டு செல்லுவது  நாடாளுமன்றத்தில் இந்தியப் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். அரசாங்கம் அவர்களின் உதவியை நாடலாம். அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும். பழங்குடி மக்களின் பிரச்சனைகளுக்கு அரசாங்கம் தானே தீர்வுகளைக் கண்டுவருகிறது? நமது பிரச்சனைகளும் அப்படி தான்.

இந்தியர்களைப் பிரதிநிதிக்கிறோம் என்று கூறியவர்களை நம்பி இந்திய சமுதாயம் ஏமாந்தது தான் மிச்சம்! இனி  அரசாங்கம் தான்  அந்தப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ல வேண்டும். ஏன் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்காக தனி கட்சி எதுவும் இல்லையே! அங்கங்கு உள்ள  கட்சிகளில் இணைந்து தானே பலர் அரசியலில் பங்கேற்கின்றர். 

இனி புதிய  பாதையில் தான் மலேசிய இந்தியர்கள் பயணிக்க வேண்டும்!

No comments:

Post a Comment