Thursday 16 November 2023

அமைதி நிலவ பிரார்த்திப்போம்!

 

இஸ்ராயேல்- பாளஸ்தீனத்தில்   நடைபெற்று வரும் சண்டை இன்னும் ஓய்ந்தாக சொல்ல முடியவில்லை.

சண்டை நிறுத்தம் அவ்வப்போது 'வருகிறது-போகிறது'  என்கிற ரீதியில்  தான் போய்க் கொண்டிருக்கிறது.

சண்டை எங்கோ நடக்கிறது என்றாலும் அந்தப் பாதிப்பு இங்கு, நமக்கும்  பாதிப்பை ஏற்படுத்துகிறது  என்பதும் உண்மை தான். அதனால்  நாடுகளிடையே சண்டை என்று ஏற்படும் போது  அது உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் பாதிப்பை ஏற்படுத்துகிறது  என்று மறுப்பதற்கில்லை. அந்த அளவுக்கு ஒவ்வொரு நாடும் ஏதோ ஓர் அளவில்  பின்னிப்பிணைந்து இருக்கின்றன.

ஆனால் இங்கு நாம் பொருளாதார பாதிப்பு மட்டும் பற்றி பேசுவது சரியாகாது.  மனித உயிர்களின் பாதிப்பு தான் நம்மை மிகவும் பாதிக்கிறது. அப்பாவி மக்கள மீது குண்டுகளை வெடித்து சாகடிப்பதும்  துப்பாக்கிச் சூடு நடத்தி பொது மக்களையும், குழந்தைகளையும், வயதானவர்களையும் கொன்று குவிப்பதும் மிகவும் கொடுரமான செயலாகத்தான் நடந்து கொண்டிருக்கிறது.

மிகவும் சக்தி வாயந்த நாடான இஸ்ரேயல் பலவீன நிலையில் உள்ள ஒரு நாட்டை  கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி  பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களை கொன்று அழித்தது ஒரு வகையில் கோழைத்தனம். சண்டை போட வேண்டுமென்றால்  தங்களுக்குச் சமமான எதிரிகளோடு சண்டை போட வேண்டும்.  ஆனால் இஸ்ரேல் போன்ற  கோழை நாடுகள்  வலிமையற்ற நாடுகள்  மீது தான் போர் தொடுக்கும் என்கிற உண்மை இப்போது தான் தெரிகிறது.

பாலஸ்தீனத்தின்  ஒரு தலைமுறை பெரும்பாலும் அழிக்கப்பட்டு விட்டதாக  கூறப்படுகிறது. இது மிகவும் கொடுரமான செயல். 

ஆனால் இந்த முறை  நடைபெறும் இந்த சண்டையில்  இஸ்ராயேலும் ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டது. இது நாள் வரை இல்லாத ஒரு பாடம். இஸ்ராயேல் மக்கள் இது நாள்வரை சண்டை போடுபவர்களாக இருந்தார்கள்.  ஆனால் இந்த முறை  அடி வாங்கும் நிலையும் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டது! அதனை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆமாம் அவர்களிடையேயும் சுமார் ஆயிரம் பேருக்கு மேல் இறந்திருக்கின்றனர்.   குண்டுகள் அவர்களின் நகரங்களிலும் பாய்ச்சப்பட்டிருக்கின்றன. இதற்கு முந்தைய சண்டையில் இதனையெல்லாம்  அவர்கள் எதிர்பார்த்ததில்லை.  இப்போது தான்  சண்டையின் கொடூரம் அவர்களுக்குப் புரிந்திருக்கிறது.

சண்டை வேண்டாம். சமாதானமே வேண்டும் என்பது தான் நமது நிலை. உட்கார்ந்து பேசுங்கள். பிரச்சனைக்குத் தீர்வு காணுங்கள்.  பேசி தீர்க்க முடியாதது  ஏதுமில்லை. இரு நாடுகளுக்கான அமைதிக்காகப் பிரார்த்திப்போம்!

No comments:

Post a Comment