Wednesday 22 November 2023

யாரைத்தான் நம்புவதோ!

 


ஒன்றும் புரியவில்லை! யாரைத்தான் நம்புவதோ என்று பாட வேண்டியுள்ளது!

என்ன தாண்டா உங்களுக்கு வேணும்?  'எண்ணைய்' தான்  வேணும்!

டேய்! அது பசியாலும் பட்டியானாலும்  வாடும் அந்த ஏழை பாலஸ்தீனிய மக்களுக்கு இங்குள்ள ஏழைகளாலும்  நடுத்தர  வசதி கொண்ட  மக்களாலும் தானமாகக் கொடுக்கப்பட்ட அந்த 'எண்ணையை' இப்படி அடிச்சு வாயிலும் வயிற்றிலும்  போட்டுக் கொண்டால் அது பாவம் இல்லையா? என்று கேட்டால் அது பாவம் இல்லை என்று தான் சொல்லுகிறார்கள்! அந்தப் பாவத்தைப் போக்க வேறு வழிகள் உள்ளனவாம்!

பாவம் என்றால் இப்படி எல்லாம் நடக்க வாய்ப்பில்லை  அல்லவா! அது எப்படி மனசாட்சியே இல்லாமல் இப்படியெல்லாம் திருட்டு வேலை செய்துவிட்டு  ஒன்றுமே அறியாத அப்பாவிகள் போல  பொது வெளியில் தலைநிமிர்ந்து நடக்கிறார்களே!  இவர்களுக்கு அது எப்படி சாத்தியமாகிறது? 

அது ஒரு புரியாத புதிர்!  எப்படியோ பல கோடிகள் இந்த மோசடிகளில்  கைமாறியிருக்கின்றன!  பணம் பல நிறுவனங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.  சம்பந்தப்பட்ட 'அமான் பாலிஸ்டின்"  அலுவலகத்தில் பலர்  எம்.ஏ.சி.சி. யால் விசாரிக்கப்பட்டிருக்கின்றனர். நிச்சயமாக இன்னும் பல அதிர்ச்சி தரும் சம்பவங்கள் வெளிவரத்தான் செய்யும்.   தீய  செயல்களில் ஈடுபடுபவர்கள், ஒரு நாள் வரும்,  தீய சக்தியினாலேயே தீய்ந்து போவார்கள்!  யாரும் தப்பிக்க முடியாது.

இது போன்ற கேடுகெட்ட மனிதர்கள், இவர்கள் மனிதர்களே அல்ல, கேடுகெட்ட ஜென்மங்கள் எப்படி இவர்களால்  இப்படி வாழ முடிகிறது? நமக்குத் தெரிந்தவரை இவர்கள்  தனி ஆள்கள் அல்ல.  ஒரு பெருங்கூட்டமாக, இவர்கள் ஒரே மாதிரியாக செயல்படுவதால்  அவர்கள் மானம்,  ரோஷம் எதுவுமின்றி இவர்கள்  மிருகங்களைப் போல சுற்றித் திரிகின்றார்கள்!  அதிலும் அவர்களுக்குப் பெரும் வரவேற்பு, மதிப்பு எல்லாம் உண்டு.

இது போன்ற செயல்கள் எல்லாம் எப்போது முடிவுக்கு வரும்?  அப்படி வரும் என்கிற நம்பிக்கை குறைந்து வருகிறது. ஏனோ தெரியவில்லை, மனிதனுக்குக் கடவுள் பயம் என்று ஒன்று இல்லாமல் போய்விட்டது. கடவுள் பயம் இல்லாவிட்டால் அவன் மனிதனாக வாழ்வது சிரமமான காரியம் தான்!

No comments:

Post a Comment