Sunday 5 November 2023

இது என்ன கூத்து?

 

யாரைக் குற்றம் சொல்லுவது?

ஓர் இஸ்லாமிய நீதிமன்றம் என்ன செய்யுமோ அதைத்தான் நமது நீதிமன்றமும் செய்திருக்கிறது!

இஸ்லாமிய மதபோதகர் ஸாகிர் நாயக் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் பேராசிரியர் இராமசாமியைக் குற்றவாளியெனத் தீர்ப்பளிக்கும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை தான். ஆனாலும் நீதிமன்றத்தின் முடிவை மதித்துத்தான் ஆக வேண்டும்.  நியாய அநியாங்களை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். நம் கண்களுக்கு அகப்படாத  குற்றங்கள்  நீதிமன்றத்துக்குத்தான்  தெரிய வரும். அது தான் அவர்களின் தொழில்.

ஆனால் இந்த வழக்கில் ஒரு வித்தியாசத்தை நாம் பார்க்கிறோம். நீதிமன்றம் பேராசிரியரை ஒரு குற்றவாளி எனத் தீர்ப்பளித்து அதற்குத் தண்டனையாக ரி.ம. 15,00,000 இலட்சத்தை இழப்பீடாக ஸாகிருக்குத் தர வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

வெளியே இருந்து பார்க்கின்ற போது  இது சரிதானா என்று சாதாரண மனிதர்களுக்கு நினைக்கத் தோன்றுகிறது. பேராசிரியர் ஸாகிரைப்பற்றி பேசினார் என்பதற்குத்  தண்டனை  சரியாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் ஸாகிர் இந்துக்களைப் பற்றி  கேவலமாகப் பேசினார் மற்ற மதத்தினரைப் பற்றியும் பேசினார், இந்தியர்களின் நாட்டு விசுவாசத்தைப் பற்றி பேசினார் - இதனையெல்லாம் நீதிமன்றம் எதுவும் கருத்துருக்கவில்லை. அதாவது அது குற்றமாக நீதிமன்றம் எண்ணவுமில்லை.

மதங்களைப்பற்றி பேசுவதைத் 'தவிர்ப்பது நல்லது' என்கிற  ஓர் உயர்ந்த நோக்கம்     மலேசியர்களிடையே உண்டு. அதைத்தான் காலங்காலமாக நாம் கடைப்பிடித்து வருகிறோம்.  அதனால் தான் இந்நாட்டில் எந்தவொரு மதப்பிரச்சனைகளும் ஏற்பட்டதில்லை.

ஸாகிர் நாயக்  ஆமை போல் தான் நாட்டிற்குள் புகுந்தார்.  அதுவும் அரசியல் அடைக்கலம் புகுந்தார். அவரை எந்தவொரு  இஸ்லாமிய நாடும் ஏற்றுக்கொள்ளவில்லை.  மலேசிய ஏற்றுக்கொண்டது. அதற்குப் பரிகாரமாகத்தான்  இங்குள்ள இந்தியர்களை வம்புக்கு இழுத்தார். அதனையெல்லாம் நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. 

இப்போது அவர் அறிஞருள் அறிஞராக மலேசியாவில் போற்றப்படுகிறார்! அவர் இஸ்லாமிய அறிஞர் என்பதிலே நமக்கு எந்த ஓர் ஆட்சேபனையும் இல்லை. மற்ற மதங்களுக்கும் 'நான் தான் அறிஞர்' என்னும் போதுதான்  நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இஸ்லாமிய அறிஞர் ஸாகிர் நாயக்  இந்த நாட்டிற்கு வருமுன்னர் இந்த நாட்டில்  'பதினைந்து இலட்சம் ரிங்கிட்' தண்டனை என்று நாம் கேள்விப்பட்டதில்லை.  இப்போது தான் முதன்முறையாகக்  கேள்விப்படுகிறோம்!

குளவிக் கூட்டை கலைத்துவிட்டு நல்லபெயரையும் வாங்கிவிட்டார்  ஸாகிர். இவருடைய கூத்து இந்தியாவில் எடுபடவில்லை.  மலேசியாவில் எடுபடும் என்பதை  அவர் புரிந்து கொண்டார்!  மக்கள் ஏமாளிகள் அல்ல! அவர்களும் புரிந்து கொள்வார்கள்!


No comments:

Post a Comment