Thursday 9 November 2023

பயணங்கள் பணிவாக இருக்கட்டும்!

 

பெருநாள்களில் பயணங்கள் 'கொஞ்சம் அப்படி இப்படி' இருக்கத்தான் செய்யும் என்று நீங்களே கற்பனை செய்து கொண்டு  உங்கள் விருப்பத்தை நெடுஞ்சாலை காட்டாதீர்கள்.  நேரம் ஒரே  மதிரியாக இருப்பதில்லை. கரணம் தப்பினால் மரணம் ஆவ்வளவு தான்!

பெரும்பாலோர் வெளி மாநிலங்களுக்குப் பயணம் செய்கிறோம். பல மாதங்களாக பார்க்க முடியாத, சந்திக்க முடியாத உறவுகளைச் சந்திக்கப் போகிறோம். மனதிலே மகிழ்ச்சி.   உள்ளத்திலே உவகை. சொந்த ஊருக்குப் போவதிலே யாருக்குத்தான் மகிழ்ச்சி இல்லை?

அந்த ஆசை நிறைவேற வேண்டும் என்பது தான் நமக்கும் ஆசை.  தேவை இல்லாமல்  கார்களைக் கன்னா பின்னா என்று ஓட்டுவது  வேண்டாத வேலை.  அதுவும் இளைஞர்கள், புதிதாக உரிமம் எடுத்த இளைஞர்கள் முடிந்த மட்டும், தங்களது திறனைக் காட்ட  இந்த நேரத்தைப் பயன்படுத்தப் பார்ப்பார்கள்! இதைத்தான் வேண்டாத வேலை என்கிறோம். கூட்ட நெரிசலில் உங்களக்குக் கட்டுப்பாடுகள்  தேவை.

ஒவ்வொரு பெருநாள் காலங்களிலும் எத்தனை எத்தனை விபத்துகள். எத்தனை குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன.  பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளை இழந்த பெற்றோர்கள்.  கணவர்களை இழந்தோர்,  மனைவியரை இழந்தோர் - கேட்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. என்ன செய்ய? கொஞ்சம் பொறுமை காக்கலாம். ஆனால் முடிவதில்லை.

நெடுஞ்சாலைகள் மட்டும் அல்ல எந்த சாலைகளாக இருந்தாலும் வாகனங்களைப் பயன்படுத்தம் போது குடித்துவிட்டு வாகனங்களை  ஓட்டாதீர்கள்.  குடிக்க வேண்டாம் என்று சொன்னால் கஞ்சா அடிப்பதும் சேர்த்துத்தான்.  கஞ்சா சாப்பிடுவதும் இன்று சர்வ சாதாரணமான விஷயம் ஆகிவிட்டது!

விபத்தை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.  இந்தியர் சம்பந்தப்பட்ட விபத்து  என்றால் அது குடிகார விபத்து!   மலாய்க்காரர் சம்பந்தப்பட்ட விபத்து  என்றால் அது கஞ்சா விபத்து!  சீனர்கள் என்றால் இரண்டுமே! இப்படித்தான் இந்த விபத்துகளை நாம் புரிந்து கொள்ளுகிறோம்!

அதனால் தான் நாம் சொல்லுகிறோம். குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டாதீர்கள். அது பல  உயிர் இழப்புகளை ஏற்படுத்தும்.  சாலை என்பது குடிப்பவர்களுக்கானது அல்ல.  குடித்துவிட்டால் பேசாமல் போய் ஓய்வு எடுங்கள். சாலை உங்களுக்கானது அல்ல!

சாலைகளைப் பயன்படுத்துகிறீர்கள்.  பொறுமையோடு, பொறுப்போடு சாலைகளை  பயன்படுத்துங்கள். உங்கள் உயிர் மீது உங்களுக்கு  அக்கறை இல்லையென்றால் தது உங்கள் பிரச்சனை. ஆனால் மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாதீர்கள் என்பது தான் நமது செய்தி.

No comments:

Post a Comment