Tuesday 7 November 2023

உரு மாற்றம்!


 இந்திய சமூக உருமாற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்டது தான்  மித்ரா அப்போது அதன் முக்கிய கொள்கையாக  இந்தியர்களில் சிறு வியாபாரிகளை அதிகம் ஊக்குவிக்க வேண்டும்  என்பதாகத்தான் இருந்தது.

ஆனால் இப்போது,  தலைவர் டத்தோ ரமணன் காலத்தில், அதன் நோக்கம் உருமாறி கல்விக்கு முன்னுரிமை  அளிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. கல்விக்கு நாம் எதிரியல்ல.  கல்வியை வைத்துத்தான் நமது சமுகங்களில் ஒன்று,  பெரிய முன்னேற்றத்தை அடைந்திருக்கிறது.  அதனால் கல்வி என்றென்றும் நமக்கு மூன்னுரிமையில் தான் இருக்கும். அதனை பின்னுக்குத் தள்ளிவிட முடியாது.

ஒன்று செய்யலாம். கல்வி சம்பந்தமான அனைத்துப் பொறுப்புகளையும்  மித்ராவே எடுத்துக் கொள்ளட்டும். முற்றிலுமாக நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.  கல்வி என்று வரும் போது அதனை மித்ராவே கையாளட்டும். இன்று அரசாங்கக் கல்லூரிகளில்  புறக்கணிக்கப்படும் நமது இந்திய மாணவர்களைத் தனியார் கல்லூரிகளில் பயில மித்ரா உதவட்டும். அதன் வழி பல மாணவர்கள் பயன் அடைவர். பணத்தினால் ஏற்படும் பிரச்சனைகளினால்  பலர் மேற்கல்வியைத் தவிர்க்கின்றனர். மித்ரா கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றால்  அதற்கான  இன்றைய ஒதுக்கீடு  போதாது என்பது நிச்சயம். தேவைக்கேற்ப இன்னும் அதிகரிக்க வேண்டிய சூழல் உண்டு.

மித்ராவின் தலைவர்  ஏன்  உரு மாற்றுகிறார்  என்பது நமக்குப் புரிகிறது. பெரிய வணிகர்களுக்கு உதவுவது எளிது.  பெரிய நிறுவனம். பெரிய பணம். பிரச்சனை முடிந்தது.  ஆனால் சிறு வணிகர்கள்.  சிறிய தொகை.  பிரச்சனைகளோ பெரிது!  என்ன செய்வது? இது தான் சிறு வணிகர்களின் இன்றைய  நிலை.  எல்லாரும் ஆயிரம், இரண்டாயிரம் வெள்ளிகளுக்குத் தான் ஆளாய் பறக்கிறார்கள்! உதவ ஆளில்லை. மித்ராவும் ஒதுங்குகிறது!

இந்த நிலையில் மித்ரா அவர்களுக்கு ஒரு சிறு தொகையாவது ஒதுக்க வேண்டும்.  இன்றை நிலையில்  வேலை வாய்ப்புகள் இல்லாமல் இந்தியர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.  அவர்கள் சிறு தொழில்கள் செய்ய மித்ரா அவர்களுக்கு உதவ முன் வரவேண்டும். சிறு தொழில் செய்ய முன் வருபவர்கள் பெரும்பாலும் பெண்கள். அவர்கள் சிறு தொழில்களில் அதிகம் அக்கறை காட்டுபவர்களாக இருக்கிறார்கள். உதவுவது மித்ராவின் கடமை. வேறு அமைப்புகள் இல்லாத நிலையில் அவர்கள் மீண்டும் மீண்டும் "மித்ரா" என்று தான் அபயக்குரல் எழுப்புவார்கள்.

தெக்கூன் போன்ற அமைப்புகள்  இன ரீதியில் செயல்படுவதாக  குற்றஞ்சாட்டப்படுகிறது. அப்படி இல்லைதான். ஆனால் சாதாரண நிலையில் உள்ளவர்கள்  அவர்களோடு ஒத்துப்போக முடியாது என்பது தான் உண்மை.  அதனால் மீண்டும் மித்ரா தான் ஞாபகத்திற்கு வரும்!

இப்படி உரு மாற்றம் செய்தால் மக்கள் என்ன செய்வது?

No comments:

Post a Comment