Wednesday 29 November 2023

சீனப்பள்ளியில் இத்தனை இந்திய மாணவர்களா?

 

                                                     SJK (C)  Ton Fah,  Beranang.

சீனப்பள்ளிகளில் மலாய் மாணவர்கள், இந்திய மாணவர்கள்  பயில்வது  என்பதெல்லாம் ஆச்சரியப்படத்தக்க  ஒரு விஷயமே அல்ல.

பெரும்பாலும் அருகில் எந்தப் பள்ளி இருக்கிறதோ அந்தப் பள்ளிகளுக்குப் பிள்ளைகளை அனுப்புவது  என்பது தான் மிக இலகுவான காரியம். காரணம் போக்குவரத்து செலவு, மற்ற வகையான செலவுகளைக் குறைக்க எண்ணி  பெற்றோர்கள் இப்படி ஒரு வழியைத் தேர்ந்தெடுப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

சிலாங்கூர் மாநில, உலுலங்காட் வட்டாரத்தில், பெர்னாங்கில் உள்ள  தோன் ஃபா சீனப்பள்ளி  - எப்போதும் போல் உள்ள ஒரு சீனப்பள்ளி தான்.  ஆனால் அங்கு படிக்கும் மாணவர்கள் தான் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றனர்.  காரணம் இந்தப் பள்ளியில்  படிக்கும் மாணவர்கள்  பெரும்பாலும்  மலாய் மாணவர்கள் என்பது தான் . அதே போல இந்திய மாணவர்களும் கணிசமான அளவில் இந்தப் பள்ளியில் கல்வி கற்கின்றனர்.

மலாய் மாணவர்கள் சுமர் 52 விழுக்காடு மாணவர்கள் கல்வி கற்பதாகச் சொல்லப்படுகின்ற வேளையில்  இந்திய மாணவர்கள் சுமார் 7 விழுக்காடு என்பதும்  யோசிக்க வேண்டிய விஷயம் தான்.

பொதுவாகவே சீன, இந்திய மாணவர்கள்  ஏன்  சீனப்பள்ளிகளில் கல்வி கற்கிறார்கள்? ஒரு விஷயம் தான் பெற்றோர்களைக் கவர்கின்றது என்று  சொல்லலாம்.  நம்மைப் பொறுத்தவரை வேலை தேடி ஓடுகின்ற சமூகம் நாம். சீன மொழி கற்றால்  வேலை கிடைக்கும் என்பது தான்  நமது முதல் எண்ணமாக இருக்க வேண்டும்.  ஆமாம் வர்த்தகம் என்பது சீனர்கள் கையில் தானே.  மலாய் பெற்றோர்களின் எண்ணம் வேறு விதமாக  இருக்க வேண்டும்.  சீன மொழிக்கும் வர்த்தகத்துக்கும் உள்ள தொடர்பு மலாய் மக்களைக் கவர்கிறது. அதனால் சீன மொழி மூலம் வர்த்தக்த்தில்  ஈடுபட  வசதியாக இருக்கும் என அவர்கள் நம்புகிறார்கள். பொதுவாக சீனரும் இந்தியரும் சரி வர்த்தகம் தான் முதலில் நிற்கிறது.

எது எப்படியிருந்தாலும் கலவி என்பது பெற்றோர்களின்  மனநிலையைப் பொறுத்தது. ஏதோ ஒன்று  அவர்களைக் கவர்கிறது.  தமிழ் பள்ளிகளுக்கு அனுப்பும்  பெற்றோர்கள் "நமது மொழி" என்கிற பற்று அவர்களிடம் இருக்கிறது.  ஆனால் பலருக்கு வசதியின்மை, கௌரவம்  அவர்களைத் தடுக்கிறது.

எப்படியோ கல்வி என்பது முக்கியம்.   நமது சமுதாயம் கல்வி கற்ற சமுதாயமாக  இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம். எந்த மொழியில் படித்தாலும் ஒருவனால் முன்னேற முடியும்.

மாணவர்களுக்கு நமது வாழ்த்துகள்!

No comments:

Post a Comment