Thursday 11 May 2023

இது வேண்டாத வேலை!

 

                    பினாங்கில் திண்டுக்கல் லியோனி பட்டிமன்றம்

சமீபத்தில் பினாங்கில் நடைப்பெற்ற திண்டுக்கல் லியோனியின் பட்டிமன்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட சலசலப்பை நாம் அறிந்திருக்கிறோம்.

லியோனி தமிழகம் சென்றபிறகு இங்கு ஏற்பட்ட அந்த சலசலப்பைப் ப்ற்றி பேசியிருக்கிறார். 

அவர் பேசிய பிறகு அப்படி ஒரு 'வரவேற்பு'  கிடைத்ததற்கான காரணங்கள் நமக்குப் புரிகிறது. அதே காரணத்தையும் நாம் கூட  ஏற்கனவே சுட்டிக் காட்டியிருக்கிறோம்.

இவர்களில் ஒரு சிலர் இந்தியாவில்  சிறுபானமையினர் மீது தாக்குதல் நடத்தும் ஓர் இயக்கத்தின் ஆதரவாளர்கள்.  பினாங்கில் வசிக்கும் இவர்களுக்கும் அந்த இயக்கத்திற்கும் என்ன தொடர்பு என்பது நமக்குப் புரியவில்லை.  இவர்களின் எதிர்ப்பு என்பது லியோனி  ஒரு கிறிஸ்துவர் என்பது மட்டும் தானே தவிர வேறு எந்தக் காரணமும் இல்லை.  அவர்களின் இயக்கம் கிறிஸ்துவர்களை எதிர்க்கிறது என்பது உலகமே அறியும்.   அவர்களுக்கு ஏதோ ஒரு காரணம் தேவை என்பதால் அவர்கள் காலதாமதத்தைக் காரணமாக சொல்லுகிறார்கள். 

இன்னொரு காரணத்தையும் லியோனி கூறியிருக்கிறார்.  நீ எப்படி தி.மு.க. மேடையில் பேசலாம் எனவும் இங்குள்ளவர்கள் லியோனியிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.  இது எந்த வகையிலும் சம்பந்தமில்லாத ஒரு கேள்வி. அவர் வாழும் நாட்டில் அவர் என்னவோ செய்கிறார். இங்குள்ளவர்களுக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத கேள்வி.  இதையெல்லாம் அவர்கள் மறுக்க முடியாது. எல்லாமே பதிவாகியிருக்கிறது.

நாம் சொல்ல வருவதெல்லாம் இது போன்ற செய்கைகளை நிறுத்தி வையுங்கள். இது எந்த வகையிலும் உங்களுக்கு உதவப் போவதில்லை. இந்திய அரசியலோ, தமிழ் நாட்டு அரசியலோ நமக்குத் தேவை இல்லாதது.  அவர்களுக்கு உள்ள பிரச்சனைகளை அவர்கள் தீர்த்துக் கொள்வார்கள். நாம் தீர்க்க வேண்டிய பிரச்சனைகள் நமக்கு நிறையவே உண்டு.

சொல்லப்போனால்  இதைத்தான்  வேண்டாத வேலை என்பது. அங்குள்ள பிரச்சனைகளுக்கும் இங்குள்ள பிரச்சனைகளுக்கும்  முடிச்சுப் போட வேண்டாம். அவரவர்களுடைய பிரச்சனைகளை அவரவர்களே தீர்த்துக் கொள்ளட்டும்.  இங்கு நடைபெறும் கலை நிகழ்ச்சிகளெல்லாம் குறித்த நேரத்தில் நடக்கின்றனவா? ஏன் அப்போதெல்லாம் உங்கள் பரிவாரங்கள் எங்கே போய் ஒளிந்தன?

இனி இது போன்ற அசம்பாவிதங்கள் வேண்டாம் என்பதே நமது வேண்டுகோள்!

No comments:

Post a Comment