Thursday 18 May 2023

ஹாடி என்ன சொல்ல வருகிறார்?

 

பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி  அவாங்  ஒரு அரசியல் கட்சியின் தலைவரைப் போலவும் நடந்து கொள்வதில்லை! ஓர் ஆன்மீகவாதியாகவும் நடந்து கொள்வதில்லை. 

முன்னாள் பிரதமர் டாக்டம் மகாதிர்  பல வருடங்களாக என்ன உளறிக் கொண்டிருக்கிறாரோ  அவரைப் போலவே இவரும் உளறுகிறார்!

இருவருமே நாட்டின் மலாய்க்காரர்களைத்தான்   தங்களது குறியாக வைத்திருக்கிறார்கள்!

மலாய்க்காரர்கள் முன்னேறவில்லையா? பொருளாதாரத்தில் பின் தங்கி விட்டனரா?  கல்வியில் முன்னேற்றமடையவில்லையா?  அவர்களுக்குச் சளி காய்ச்சல் பீடித்திருக்கின்றனவா? உடல் நலமில்லாமல் இருக்கிறார்களா?  கஞ்சா போன்ற போதைப் பொருளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றனரா?  குடும்பப் பிரச்சனைகளா? சாமி கும்பிடப் போவதில்லையா? அவர்களிடையே ஒற்றுமையில்லையா?

இப்படி எதனை எடுத்துக் கொண்டாலும் ஒரே ஒரு காரணம் தான் அவர்கள் இருவருக்குமே  தெரிந்த காரணம்! ஆமாம்! சீனர்களும், இந்தியர்களும் தான் காரணம்! இந்த ஒன்றைத்தவிர வேறு ஏதும் காரணங்கள் இல்லவே இல்லை என்பது தான் அவர்கள் சொல்லுகின்ற காரணங்கள்!

டாக்டர் மகாதிர் நாட்டின்  22 ஆண்டுகள் தலைமைப்பதவியில் இருந்தவர்.  உண்மையில் மலாய்க்காரர்களின் தோல்விக்கு அவர் தான் பொறுப்பு எடுக்க வேண்டும். அவர் என்ன செய்தார்? தனது குடும்பத்தை முன்னேற்றவும்  தனது நண்பர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கவும், மலாய்க்காரர்களை ஊழல் பேர்வழிகளாக மாற்றவும் காரணமாக இருந்தவர் டாக்டர் மகாதிர் தான்!

கிளந்தான் மாநிலத்தின் மந்திரி பெசாராக இருந்தவர்/இருப்பவர் ஹாடி அவாங். தனது மாநிலத்தில் இவர் எந்த வகையில் முன்னேற்றிருக்கிறார் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம்.  முன்னேற்றத்தைத் தவிர மற்ற எல்லா விஷயங்களிலும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லாத மாநிலங்கள்  என்றால் அவர் கட்சி ஆட்சி செய்கின்ற மாநிலங்கள் தான்!

தனது கட்சி நடுவண் அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்று நினைக்கிறாரே தவிர மற்றபடி அப்படி அமைக்க என்ன திட்டங்களை வைத்திருக்கிறார் என்று அவர் கட்சிக்கோ அவருக்கோ எதுவும் தெரியாது! அது தான் உண்மை!

பதவியில் இல்லையென்றால் டாக்டர் மகாதிர் சொல்லுகின்ற ஒரே காரணம் பணம் படைத்த சீனர்களும் இந்தியர்களும் தான் மலாய்காரர்களுக்குப் போட்டியாக இருக்கிறார்கள் என்பார். அதனால் அவர்கள் முன்னேற முடியாமல் தவிக்கிறார்கள் என்பார்!  ஹாடி அவாங் வேறு ஒரு கோணத்தில் அதனையே சொல்லுகிறார். சீனர்களும், இந்தியர்களும் ஆன்மீகம் அறியாத ஒரு கூட்டம். அவார்களைப் பார்த்து மலாய்க்காரர்கள் கெட்டுப் போகிறார்கள் என்பது தான் இவருடைய குற்றச்சாட்டு!

இவர்கள் இருவருமே மலாய்க்காரர்கள் ஒன்றும் அறியாதவர்கள். அவர்களை பிற இனத்தவர்கள் தான் கெடுக்கிறார்கள் என்பது தான் இவர்களது அபிப்பிராயம்!

இவர்களுக்கு சீக்கிரம் ஒரு முடிவு தெரியும்!

No comments:

Post a Comment