Monday 1 May 2023

மே தினம் மேன்மையைக் கொண்டுவரும்!


 சமீபத்தில் தான் ஹரிராயா கொண்டாடினோம்.

இப்போது அடுத்து மலேசிய மக்கள் அனைவரும் கொண்டாடும் மலேசிய தினம்.

இந்த ஆண்டு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.  விலைவாசிகள் ஏறிவிட்டன. வியாபாரங்கள் கீழ்நோக்கிப் போகின்றன. வெளிச்சம் எதுவும் பிரகாசமாக இல்லை.

இப்போது உள்ள சூழலில் யாரும் கடைகளை அடைத்துவிட்டுப் போக தயாராகயில்லை.  ஏதோ வியாபாரம் நடக்கட்டும். கிடைத்தது கிடைக்கட்டும் என்கிற மனப்பக்குவததிற்கு வந்துவிட்டார்கள்> காரணம் வியாபாரச் சூழல் சரியாக இல்லை என்பது தான்.

பொது மக்களுக்கும் நிறைய சவால்கள் இந்தக் காலகட்டத்தில். முடிந்தவரை செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்பது தான் நமது ஆலோசனை.

உணவகங்களுக்குப் போவதைக் கொஞ்சம் கட்டுப்படுத்துங்கள் என்பது பலரது ஆலோசனையும்.  அதுவும் இந்திய உணவகங்கள் அறு அறு என்று அறுக்கிறார்கள் என்கிற குறைபாடுகள்  நிறையவே சொல்லப்படுகின்றன. யாரையும் குற்றம் சொல்ல முடியவில்லை.  அளவுக்கு மீறி விலைகள் ஏறிவிட்டால்  குறைவான விலையில் உணவுகள் எப்படி  கிடைக்கும்?

என்னைக் கேட்டால் இந்திய உணவகங்கள் விலைகளைக் குறைக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை செய்ய வேண்டும். இன்றைய நிலையில் சீன உணவகங்களே குறைவான விலையில் உணவுகளைத் தருகின்றன.  அதனால் பலர் இப்போது சீன உணவகங்களை நாடுகின்றனர் என்பதை நாம் பார்க்கிறோம்.

இப்போது எந்த பெருநாள்கள் வந்தாலும் அல்லது இன்றைய மே தினம் போன்ற கொண்டாட்டங்கள் வந்தாலும் பணத்தைச் செலவு செய்வதில் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.

இந்த உலகம், உங்கள் அக்கம் பக்கம் எல்லாம் உங்களிடம் உள்ள இருப்பை வைத்துத்தான் உங்களை மதிப்பிடுகிறது. இன்றைய நிலையில் வருங்காலம் எப்படி இருக்கும் என்பது யாருக்கும் புரியவில்லை.  எந்தக் காலமாக இருந்தாலும் உங்கள் கையில் உள்ள பணம் தான் உங்களுக்கு உதவும் என்பதை மறந்து விடாதீர்கள்.

கோரோனா பெருந்தொற்றின் போது சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் பலர் சிரமத்திற்குள்ளானார்கள். வேலையில்லாததால் வந்த வினை அது. இனி மேலும் அப்படி நடக்காது என்று சொல்வதற்கில்லை.  நாம் தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்த மே தினத்தன்று  வருங்கால வாழ்க்கை செம்மையாக அமைய  உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்!  வாழ்த்துகள்!

No comments:

Post a Comment