ஒர் இந்தியப்பெண் வேலை முடிந்து வீடு திரும்ப 'கிரேப்' கார் ஒன்றுக்கு ஏற்பாடு செய்கிறார்.
காத்துக் கிடக்கிறார். கார் வரவில்லை. அந்தக் கார் ஓட்டுநரைக் கூப்பிடுகிறார். அவர் சொன்ன பதில்: இந்தியர்கள் கூப்பிட்டால் நான் வரமாட்டேன். நீங்கள் குடித்துவிட்டு காரில் ஏறுவீர்கள். அதனால் நான் வரவில்லை!
நாம் குறைசொல்ல ஒன்றுமில்லை. நாம் இப்படித்தான் அடையாளப்படுத்தப் பட்டிருக்கிறோம். குடிகாரக்கூட்டம், சோம்பேறிக்கூட்டம், கொள்ளைக்காரக்கூட்டம் - இது தான் நமது முப்பெரும் இனத்தவரின் அடையாளங்கள்!
மற்றவர்களின் அடையாளங்கள் மறைந்துவிட்டன. நமது குடிகார அடையாளம் ம்ட்டும் இன்னும் நீடிக்கிறது!
என்னதான் சொன்னாலும் என்னிடமும் ஒரு கேள்வி உண்டு. நாம் குடிகாரர்கள் தான். ஆனால் அரசாங்கம் குடிகாரர்களைத் திருத்துவதற்கு ஏதேனும் மறுவாழ்வு மையங்கள் இருக்கின்றனவா? அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் போதைப் பொருளுக்கு மயங்கிகிடப்பவர்கள் எத்தனை பேர். கணக்கெடுத்தால் யார் அதிகம்? எத்தனை மறுவாழ்வு மையங்கள் இருக்கின்றன?
பள்ளி ஆசிரியர்கள் எத்தனை பேர் போதையில் மிதக்கிறார்கள்? அரசாங்க அலுவலகங்களில் பணி புரிபவர்கள் போதையில் இல்லாதவர்களா? அரசாங்க அலுவலகங்களுக்குப் போனால் ஏன் எல்லா வேலைகளும் இழுத்தடிக்கப்படுகின்றன?
குடிகாரர்கள் நாம் தான். ஆனால் இருபத்து நான்கு மணி நேரமும் போதையில் மிதப்பவர்கள் நாமல்ல. என்னைக் கேட்டால் அந்த கிரேப் ஓட்டுநர் போதையில் மிதப்பவராகக் கூட இருக்கலாம். தன்னுடைய குறைபாட்டை மற்றவர்கள் மீது திணிப்பது என்பது இப்போதெல்லாம் மிகவும் எளிதாகி விட்டது! எல்லாவற்றுக்கும் நாம் தான் இளிச்சவாயனோ?
குடிகாரன் குடித்துவிட்டு உளறிவிட்டுப் போகிறான். ஆனால் போதையில் மிதக்கிறவன் என்ன செய்தான் என்பதாக நாளிதழ்களில் செய்திகள் வந்தன. ஒரு போதைப்பித்தன் தனது தாய் பணம் கொடுக்கவில்லை என்பதற்காக தாயின் மார்பகத்தை பிளேடு கத்தியால் அறுத்திருக்கிறான். இப்படி ஒரு செய்தி ஆக, எது அதிக தீங்கை விளைவிக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
நம்மிடையே குடிகாரர்கள் இருக்கலாம். ஆனால் நம் இனத்தை தவிர மற்றவர்களெல்லாம் யோக்கியர்கள் என்று சொல்லுவது மகா அயோக்கியத்தனம்.
நான் குடிகாரன் அல்ல. போதை பித்தனும் அல்ல. ஆனால் தேவையற்ற முறையில் இந்தியர்கள் தான் குடிகாரர்கள் என்று அழுத்தம் தருவது மகா மகா அயோக்கியத்தனம். நன்றாக யோசித்துப் பாருங்கள். இந்நாட்டில் குடிவகைகளை உற்பத்தி செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்குள்ள இந்தியர்களை நம்பியா தொழில் செய்கின்றன? அப்படி ஒரு கருத்து இருந்தால் அது சுத்த அபத்தம் என்பது புரியும்.
நம்மை நம்பி இங்கு யாரும் தொழில் செய்யவில்லை என்பது ஒன்றே போதும் நாம் குடிகாரர்கள் அல்ல!
No comments:
Post a Comment